வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
செப்டம்பர் 19-25
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(சங்கீதம் 136:15) பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
it-1-E 783 ¶5
யாத்திராகமம்
யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி இஸ்ரவேலர்களை விடுதலை செய்தார். இது அவருடைய பெயருக்கு புகழ் சேர்த்தது. செங்கடலை பாதுகாப்பாக கடந்து வந்தபின் மோசேயும் இஸ்ரவேலர்களும் பாட்டு பாடினார்கள். அதற்கு ஏற்றவாறு தீர்க்கதரிசனம் சொல்கிறவளாக இருந்த மிரியாம் தம்புரை வாசிக்க ஆரம்பித்தாள். அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் தம்புருகளை வாசித்து நடனமாடினார்கள். (யாத். 15:1, 20, 21) அவர்களுடைய எதிரிகளிடமிருந்து யெகோவா அவர்களை காப்பாற்றினார். அவர்கள் வெளியேறியபோது எகிப்திலிருந்த எந்த மனுஷனாலும் எந்த மிருகத்தாலும் அவர்களுக்கு ஆபத்து வரவில்லை. ஒரு நாய்கூட அவர்களை பார்த்து குரைக்கவில்லை, தன் நாவை அசைக்கவும் இல்லை. (யாத். 11:7) பார்வோன், அவனுடைய படைகளோடு சேர்ந்து அழிந்துபோனதாக யாத்திராகமம் புத்தகத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் சங்கீதம் 136:15, யெகோவா ‘பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டார்’ என்று சொல்கிறது.
செப்டம்பர் 26—அக்டோபர் 2
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(சங்கீதம் 150:6) சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
it-2-E 448
வாய்
உணவை சாப்பிடுவதற்காக கடவுள் வாயை படைத்தார். ஆனால், மனிதர்களுக்கு அதை பயன்படுத்தி பேசுவதற்கான திறனையும் கொடுத்திருக்கிறார். நாம் பேசும் எல்லா விஷயங்களும் யெகோவாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும். (சங் 34:1; 51:15; 71:8; 145:21) சுவாசமுள்ள எல்லாமே யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் என்று சங்கீதக்காரன் சொன்னார். அதனால், உயிர் வாழ வேண்டும் என்றால் மனிதர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும். நாம் கடவுளையும் அவருடைய மகனையும் நம்புவதாக சொன்னால் மட்டும் போதாது, மீட்பு பெறுவதற்கு அவர்களை பற்றி வாயினால் அறிவிக்கவும் வேண்டும்.—சங் 150:6; ரோ 10:10.
யெகோவா அவருடைய நோக்கத்துக்கு இசைவாக அவருடைய ஊழியர்களை பேசவைக்க முடியும். அதற்கான, சக்தியும் உரிமையும் அவருக்கு இருக்கிறது. அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு தன்னுடைய சக்தியை தந்து அற்புதமாக பேச தூண்டினார். (யாத் 4:11, 12, 15; எரே 1:9) ஒருசமயம் ஒரு கழுதையைக்கூட பேச வைத்தார். (எண் 22:28, 30; 2 பே 2:15, 16) இன்று அவருடைய ஊழியர்களுக்கு அற்புதமான விதத்தில் தன்னுடைய சக்தியை தந்து கடவுள் அவர்களை பேச தூண்டுவதில்லை. அதற்கு பதிலாக அவருடைய சக்தியால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தையை கொடுத்திருக்கிறார். இது, “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு முழுமையான திறமையை” அவர்களுக்கு தருகிறது. (2தீ 3:16, 17) இன்று அவர்கள் என்ன நல்ல செய்தியை பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து திரும்பவும் வந்து அவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக அவர்கள் வேறு யாரிடமும் போக வேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தி பைபிளில் இருக்கிறது. “‘இந்தச் செய்தி,’ அதாவது நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் செய்தி, ‘உங்களுக்கு அருகிலேயே இருக்கிறது, உங்களுடைய வாயில் இருக்கிறது, உங்கள் இருதயத்திலும் இருக்கிறது’” என்று பைபிள் சொல்கிறது.—ரோ 10:6-9; உபா 30:11-14.
நம் பேச்சால் நன்மையும் வரலாம் தீமையும் வரலாம். நம் வாயை அதாவது, பேசும் திறமையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது ரொம்ப முக்கியம். அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதனால்தான், “நீதிமானுடைய வாய் ஜீவஊற்று” என்று பைபிள் சொல்கிறது. (நீதி 10:11) நாம் என்ன பேசுகிறோம் என்று யோசித்து பேச வேண்டும். (சங் 141:3; நீதி 13:3; 21:23) முட்டாள்தனமான பேச்சு நம் உயிருக்கே உலை வைத்துவிடும். (நீதி 10:14; 18:7) ஒருவர் பேசும் வார்த்தைகளுக்காக கடவுள் அவரிடம் நிச்சயம் கணக்கு கேட்பார். (மத் 12:36, 37) ஒருவர், அவசரப்பட்டு வாக்கு கொடுக்கக்கூடாது. (பிர 5:4-6) ஒருவர் இன்னொருவரை தேவையில்லாமல் புகழ கூடாது. அப்படி செய்தால் அது அந்த நபருக்கு ஆபத்தாகிவிடும். அதற்கான பழி அவரை புகழ்ந்த நபரை சேரும். (நீதி 26:28) யெகோவாவை எதிர்க்கும் ஆட்களிடம் பேசும்போது நாம் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கடவுளுக்கு பிடிக்காத எதையாவது பேசிவிடுவோம். அதனால், கடவுளுக்கு கெட்ட பெயர் வந்துவிடும். நம் உயிருக்கே ஆபத்தாகிவிடும். (சங் 39:1) எதிரிகள் இயேசுவை துன்புறுத்தியபோதிலும் அவர் பதிலுக்கு எதுவும் பேசாமலும் சபிக்காமலும் இருந்தார். கடவுளுக்கு அடிபணிந்து நடப்பதில் இயேசு நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்.—ஏசா 53:7; அப் 8:32; 1பே 2:23.
கிறிஸ்தவர்கள் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் பேசும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதனால், நம் இதயத்தில் எதைப் பற்றி யோசிக்கிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசு சொன்னார். ‘ஒரு மனிதனுடைய வாய்க்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது; ஆனால், அவனுடைய வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அவனைத் தீட்டுப்படுத்தும்’ என்றும் சொன்னார். (மத் 12:34; 15:11) நாம் யோசிக்காமல் எதையும் பேச கூடாது. பின்விளைவுகளை யோசித்து பேச வேண்டும். கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் விஷயங்களை கடைப்பிடித்தால் நம்மால் அப்படி செய்ய முடியும்.—நீதி 13:3; 21:23.