உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 8
  • JW.ORG கான்டாக்ட் கார்டுகளை நன்றாக பயன்படுத்துகிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • JW.ORG கான்டாக்ட் கார்டுகளை நன்றாக பயன்படுத்துகிறீர்களா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • கிரெடிட் கார்டுகள்—உங்களுக்குச் சேவைசெய்யுமா அல்லது உங்களை அடிமையாக்குமா?
    விழித்தெழு!—1996
  • எனக்கு கிரெடிட் கார்டு தேவையா?
    விழித்தெழு!—1999
  • “வாழ்த்திதழ் ஒன்றை அனுப்புவோம்”
    விழித்தெழு!—1993
  • JW.ORG முதல் பக்கத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 8

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

JW.ORG கான்டாக்ட் கார்டுகளை நன்றாக பயன்படுத்துகிறீர்களா?

ஒரு நபரிடம் jw.org கான்டாக்ட் கார்டை ஒரு யெகோவாவின் சாட்சி கொடுக்கிறார்

மிகுந்த உபத்திரவம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்களிடம் நாம் சுறுசுறுப்பாக சொல்ல வேண்டும். (நீதி 24:11, 12, 20) பைபிளை பற்றியும் நம்முடைய வெப்சைட்டை பற்றியும் மக்களுக்கு சொல்ல கான்டாக்ட் கார்டுகளை நாம் பயன்படுத்தலாம். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை நம் வெப்சைட்டில் பார்ப்பதற்கு இந்த கார்டில் ஸ்கேன் கோடு இருக்கிறது. ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு நாம் பைபிள் படிப்பு நடத்துகிறோம் என்ற தகவலும் இருக்கிறது. சிலர் நம்முடைய பிரசுரங்களை வாங்க விரும்பாவிட்டாலும் நம்முடைய வெப்சைட்டை பார்க்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கான்டாக்ட் கார்டை கொடுங்கள். ஆனால், ஆர்வமாக கேட்காதவர்களுக்கு அதை கொடுக்காதீர்கள்.

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஆட்களிடம் கான்டாக்ட் கார்டை பயன்படுத்தி சுலபமாக பேசலாம். நாம் அவர்களிடம், “உங்களுக்கு இந்த கார்ட கொடுக்க ஆசப்படுறேன். இந்த கார்டுல சொல்லியிருக்க வெப்சைட்ட நீங்க பாருங்க. அதுல உங்களுக்கு பிரயோஜனமான நிறைய விஷயங்களும் வித்தியாசமான தலைப்புகள்ல வீடியோக்களும் இருக்கு” என்று சொல்லலாம். (யோவா 4:7) இந்த கான்டாக்ட் கார்டுகள் சின்னதாக இருப்பதால் எப்போதும் சிலவற்றை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதை பயன்படுத்துங்கள்.

கான்டாக்ட் கார்டை எப்போதெல்லாம் கொடுக்கலாம்?

  • சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது

  • வியாபாரம் செய்யும் இடங்களில் ஊழியம் செய்யும்போது

  • ஒருவர் நம் பிரசுரங்களை வாங்காவிட்டாலும் நாம் சொல்வதை ஆர்வமாக கேட்கும்போது

jw.org கான்டாக்ட் கார்டின் முன்பக்கத்தில் திறந்திருக்கிற பைபிள் தெரிகிறது
jw.org கான்டாக்ட் கார்டின் முன்பக்கத்தில் ஒரு நபருக்கு யெகோவாவின் சாட்சி பைபிள் வசனத்தை வாசிக்கிறார்
jw.org கான்டாக்ட் கார்டின் முன்பக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு யெகோவாவின் சாட்சி ஒருவர் பைபிள் படிப்பு நடத்துகிறார்
jw.org கான்டாக்ட் கார்டின் பின்பக்கம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்