கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் உங்களால் முடியும்!
யெகோவா கொடுத்த நியமிப்பை தன்னால் நன்றாகச் செய்ய முடியாது என்று மோசே நினைத்தார். (யாத் 4:10, 13) நீங்கள் எப்போதாவது அப்படி யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பவராக இருந்தால், ‘வீட்டுக்கு வீடு ஊழியம்லாம் என்னால செய்ய முடியுமா’ என்று நீங்கள் யோசிக்கலாம். இளம் பிள்ளையாக இருந்தால், ஸ்கூலில் சாட்சி கொடுப்பதை நினைத்து நீங்கள் பயப்படலாம். அல்லது, ஃபோன் மூலம் சாட்சி கொடுப்பதையோ பொது ஊழியத்தின் வேறு ஏதாவது அம்சத்தில் ஈடுபடுவதையோ நினைத்து நீங்கள் பயப்படலாம். அப்படியென்றால், யெகோவாவிடம் அவருடைய சக்தியைக் கேட்டு கெஞ்சுங்கள். (1பே 4:11) அதோடு, அவர் கொடுக்கும் நியமிப்பைச் செய்து முடிக்கத் தேவையான எல்லாவற்றையும் அவர் உங்களுக்குக் கொடுப்பார் என்பதில் உறுதியாக இருங்கள்.—யாத் 4:11, 12.
தைரியமுள்ள . . . பிரஸ்தாபியாக இருங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
சகோதரி யோயாமா எதை நினைத்து கவலைப்பட்டார்?
பலமாகவும் தைரியமாகவும் இருக்க எது அவருக்கு உதவியது?—எரே 20:7-9
யெகோவாவின் சேவையில் அதிகமாகச் செய்ய முயற்சி எடுத்ததால் அவருக்கு என்ன பலன்கள் கிடைத்தன?
ஊழியத்தில் எதிர்ப்படும் என்னென்ன சவால்களைச் சமாளிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார்?