உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியுமா?
    காவற்கோபுரம்—2015 | அக்டோபர் 1
  • உங்களுக்கு தெரியுமா?
    காவற்கோபுரம்—2015 | அக்டோபர் 1
    • அன்று மக்கள் மாவு அரைக்கும் கற்களை பயன்படுத்தி தானியங்களை அரைத்தார்கள். அரைக்கப்பட்ட மாவிலிருந்து ரொட்டிகளை செய்தார்கள். மாவு அரைப்பது, பெண்களின் அல்லது வேலைக்காரர்களின் தினசரி வேலையாக இருந்தது. பழங்காலத்தில் மாவு அரைக்கும் சத்தம் அன்றாடம் கேட்கும் சத்தமாக இருந்தது.—யாத்திராகமம் 11:5; எரேமியா 25:10.

      மாவு அரைக்கும் கல்லை பயன்படுத்தி ஒருவர் மாவு அரைக்கிறார். இது எகிப்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருள்

      மாவு எப்படி அரைக்கப்பட்டது என்பதை பூர்வ எகிப்திலிருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களும், சிலைகளும் காட்டுகின்றன. சற்றே குழியான அடிக்கல்லின் மேல் அரைக்கப்பட வேண்டிய தானியத்தை வைப்பார்கள். மாவு அரைப்பவர், இந்த அடிக்கல்லின் முன் மண்டியிட்டு, மேல் கல்லை இரண்டு கைகளிலும் பிடித்து முன்னும் பின்னுமாக அரைப்பார். பொதுவாக, மேல் கல் இரண்டு அல்லது நான்கு கிலோ எடை (4-9 பவுண்டு) இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதை ஆயுதமாக பயன்படுத்தினால் அது உயிரையே பறித்துவிடலாம்.—நியாயாதிபதிகள் 9:50-54.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்