-
ஒற்றைப் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருங்கள்காவற்கோபுரம்—2011 | ஏப்ரல் 1
-
-
அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளுங்கள்
“உங்களுக்கு நான் என்ன உதவி செய்யட்டும்?” இப்படி அவர்களிடம் நேரடியாகக் கேட்டால் போதும்... அவர்கள் தங்களுக்கு என்ன தேவை எனச் சொல்லிவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படிக் கேட்கும்போது பெரும்பாலும் அவர்கள் ‘எங்களுக்கு இது வேண்டும், அது வேண்டும்’ என வாய்திறந்து சொல்ல மாட்டார்கள். அதனால்தான், ‘உதவி செய்யும்படி’ சங்கீதம் 41:1 பரிந்துரைக்கிறது. இந்த வார்த்தைக்கான எபிரெய பதம், “மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் ஒரு விஷயத்திற்கு அதிக கவனம் தந்து, அதனால் ஒரு நன்மை விளைவதற்கு வழி செய்வதை” அர்த்தப்படுத்துவதாக ஒரு புத்தகம் விளக்குகிறது.
ஆகவே, ஒற்றைப் பெற்றோருக்கு நீங்கள் செய்கிற உதவி மிகவும் பிரயோஜனமாய் இருக்க... அவர்கள் எதிர்ப்படுகிற சவால்களைக் குறித்து ஆழ்ந்து யோசியுங்கள். அவர்களுடைய சூழ்நிலையை மேலோட்டமாகப் பார்க்காமல், சற்றுக் கூர்ந்து கவனியுங்கள். ‘நான் அந்தச் சூழ்நிலையில் இருந்திருந்தால்... என்ன மாதிரி உதவிகள் எனக்குத் தேவைப்பட்டிருக்கும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அநேக ஒற்றைப் பெற்றோர் சொல்கிறபடி, என்னதான் யோசித்து யோசித்துப் பார்த்தாலும் அவர்களுடைய சூழ்நிலைகளை உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; நீங்கள் ஓர் ஒற்றைப் பெற்றோராக இருந்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். என்றாலும், அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க முடிந்தளவு முயற்சி செய்தீர்களென்றால், அவர்களுக்குப் பிரயோஜனமான ‘உதவிகளைச் செய்ய’ உங்களால் முடியும்.
கடவுளின் ஆதர்ச முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
ஒற்றைப் பெற்றோரை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் இதுவரை யாருமே கடவுளாகிய யெகோவாவை மிஞ்சியதில்லை. திக்கற்ற பிள்ளைகளிடமும் விதவைகளிடமும் அவர் கனிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டதாக பைபிளிலுள்ள அநேக வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன; அப்படியென்றால், ஒற்றைப் பெற்றோருக்கும் அவர் கரிசனை காட்டியிருப்பார் என்றுதானே அர்த்தம்! அவ்வாறு திக்கற்ற நிலையில் இருப்போருக்கு உதவுவதற்காகக் கடவுள் செய்த ஏற்பாடுகளைக் குறித்து ஆழ்ந்து படித்தோமென்றால்... பிரயோஜனமான உதவிகளை, நடைமுறையான உதவிகளை எப்படி அளிக்கலாம் என்பதைக் குறித்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம். இது சம்பந்தமாக நான்கு அம்சங்களை இப்போது சிந்திப்போம்.
அவர்கள் பேசுவதைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள்
ஏழை எளியோரின் ‘முறையிடுதலை [அதாவது, “அழுகுரலை,” பொது மொழிபெயர்ப்பு] நான் நிச்சயமாய்க் கேட்பேன்’ எனத் திருச்சட்டத்தில் யெகோவா குறிப்பிட்டிருந்தார். (யாத்திராகமம் 22:22, 23) அவருடைய அருமையான முன்மாதிரியை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்? ஒற்றைப் பெற்றோர் படும் அவஸ்தையைச் சற்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய மனதின் ஆதங்கத்தைக் கொட்டுவதற்கு பெரும்பாலும் அவர்களுக்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதால் தனிமையில் தவிப்பார்கள். “பிள்ளைகள் தூங்கப்போன பிறகு சில சமயங்களில் தனிமை உணர்வு என்னை ஆட்டிப்படைக்கும்; அப்போதெல்லாம் அழுகையை என்னால் அடக்கவே முடியாது” என்று சொல்லிப் புலம்புகிறார் ஒரு தாய். உங்களால் முடிந்தால், ஓர் ஒற்றைப் பெற்றோரின் ‘அழுகுரலைக் கேட்பதற்கு,’ அதாவது அவருடைய மனதின் ஆதங்கத்தைக் கேட்பதற்கு நேரம் ஒதுக்க முடியுமா? சரியான சூழ்நிலைகளில் அப்படிச் செய்தீர்களென்றால், ஒற்றையாய்க் குடும்பத்தைக் கட்டிக்காப்பதில் உள்ள சவால்களைச் சமாளிக்க அது அவர்களுக்கு ரொம்பவே உதவியாய் இருக்கும்.
ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள்
வழிபாட்டு சமயங்களில் இஸ்ரவேலர் பாடுவதற்காக யெகோவா தம் சக்தியை அருளிப் புனிதப் பாடல்களை... அதாவது சங்கீதங்களை... இயற்றச் செய்தார். இஸ்ரவேலர் மத்தியில் இருந்த திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் யெகோவா ‘தகப்பனாகவும்,’ ‘நியாயம் விசாரிக்கிறவராகவும்’ இருந்து நிம்மதி அளிப்பார் என்பதை அந்தப் பாடல்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தின; அவற்றைப் பாடியபோதெல்லாம் அவர்கள் எந்தளவு ஆறுதல் அடைந்திருப்பார்கள்! (சங்கீதம் 68:5; 146:9) அவ்வாறே நாமும், ஒற்றைப் பெற்றோருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லலாம்; அதை அவர்கள் காலங்காலமாய் நினைத்துப் பார்ப்பார்கள். ரூத் என்ற ஒற்றைத் தாயின் உதாரணத்தைக் கவனியுங்கள். அனுபவம் வாய்ந்த ஒரு தகப்பன் அவரிடம், “உங்கள் பையன்களை நன்றாக வளர்க்கிறீர்கள், பார்ப்பதற்குச் சந்தோஷமாய் இருக்கிறது!” என்று சொன்னார். 20 வருடங்களுக்கு முன் அவர் பாராட்டியதை நினைத்து ரூத் இன்றும் சந்தோஷப்படுகிறார். “அந்தச் சகோதரர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ரொம்பவே தெம்பளித்தது” என்கிறார். ஆம், ‘நல்வார்த்தை இருதயத்துக்கு மகிழ்ச்சி அளிக்கும்’; ஆகையால், ஒற்றைப் பெற்றோருக்கு ஆறுதலாக நாம் சொல்கிற வார்த்தைகள், நாம் நினைத்துப் பார்ப்பதைவிடப் பன்மடங்கு பலன் தரலாம். (நீதிமொழிகள் 12:25) அப்படியானால், குறிப்பாக என்ன சொல்லி ஓர் ஒற்றைப் பெற்றோரை நெஞ்சாரப் பாராட்டுவீர்கள்?
தேவையான பொருளுதவியை அளியுங்கள்
திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கண்ணியமான விதத்தில் தந்து உதவுவதற்கான ஏற்பாடுகள் பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்தன. அந்த மாதிரியான ஏற்பாடுகள் இருந்ததாலேயே அவர்களால் வயிறார ‘சாப்பிட்டுத் திருப்தியடைய
-