பாடல் 40
நாம் யாருக்கு சொந்தம்?
1. யார் உன் தந்-தை என்-பாய்?
யார் உன் க-ட-வுள் என்-பாய்?
வாழ்-வின் எ-ஜ-மான் நூ-று இல்-லை,
ஒன்-றே தெய்-வம் வே-று இல்-லை.
வா-னில் பூ-மிக்-கென்-றே
சுற்-றும் நி-ல-வும் ஒன்-றே.
உந்-தன் பக்-தி-யை கூ-று போ-டா-தே,
உன்-னைத் தா மு-ழு-தா-க.
2. உண்-மை ஒன்-றே, ஒன்-றே!
யார் உன் க-ட-வுள் இங்-கே?
உந்-தன் மு-டி-வை செய்-வாய் இன்-றே,
பொய்-யை நம்-பி ஏ-மா-றா-தே!
இந்-த மண்-ணின் ரா-ஜா
உந்-தன் இ-த-யம் கேட்-பான்.
உன்-னைப் ப-டைத்-த தே-வன் இ-ருக்-க,
யார் கை நீ பி-டிப்-பா-யோ?
3. நான் யார் சொந்-தம் என்-றேன்,
உண்-மை இன்-று நான் கண்-டேன்.
தந்-தை யெ-கோ-வா, எந்-தன் தெய்-வம்,
என் வாழ்-வென்-றும் தே-வன் சொந்-தம்.
என்-னை மீட்-கத்-தா-னே
தன் பா-ச ம-கன் தந்-தார்.
ஒவ்-வோர் நொ-டி-யும் தே-வன் பெ-ய-ரை,
என் ஜீ-வன் பு-கழ்-பா-டும்.
(பாருங்கள்: யோசு. 24:15; சங். 116:14, 18; 2 தீ. 2:19.)