உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 38
  • மதம் அரசியலோடு கலக்கலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதம் அரசியலோடு கலக்கலாமா?
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டாரா?
  • முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட்டார்களா?
  • இன்று கிறிஸ்தவர்கள் காட்டும் நடுநிலை
  • குருமார் அரசியல் பேசலாமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • ‘அவர்கள் உலகத்தின் பாகமல்ல’
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • “அவர்கள் உலகத்தின் பாகமல்ல”
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருக்கிறார்கள்?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 38
ஒரு அரசியல் தலைவரும் ஒரு மதத்தலைவரும் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு மக்களை பார்த்து கையசைக்கிறார்கள்.

மதம் அரசியலோடு கலக்கலாமா?

இன்று உலகம் முழுவதும் இயேசுவை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிற நிறைய பேர் அரசியல் விஷயங்களில் ரொம்பவே ஊறிப்போய் இருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிப்பதன் மூலமாக தங்களுடைய மத நம்பிக்கைகளையோ ஒழுக்க நெறிகளையோ பரப்புவதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். அதேபோல், அரசியல்வாதிகளும் மத நம்பிக்கை இருக்கிற மக்களுடைய ஆதரவை பெறுவதற்காக ஒழுக்க பிரச்சினையையோ சமுதாய பிரச்சினையையோ பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, மத தலைவர்களாக இருக்கிறவர்கள்கூட அரசியல் பதவிகளை வகிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. சில நாடுகளில் “கிறிஸ்தவ மதத்துக்கு,” மாநில மதம் அல்லது தேசிய மதம் என்ற விசேஷ அந்தஸ்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இயேசுவை பின்பற்றுகிறவர்கள் அரசியல் விஷயங்களில் ஈடுபடலாமா? இந்த கேள்விக்கான பதிலை இயேசுவின் வாழ்க்கையை பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். “நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்” என்று அவர் சொன்னார். (யோவான் 13:15) அப்படியென்றால், அரசியல் விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரியை வைத்திருக்கிறார்?

இயேசு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டாரா?

இல்லை, இயேசு அவற்றில் ஈடுபடவில்லை.

இயேசு அரசியல் அதிகாரத்தை அடைய நினைக்கவில்லை. ஒருசமயம், “இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும்” அவருக்கு தருவதாக சாத்தான் சொன்னான்.a ஆனால், இயேசு அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். (மத்தேயு 4:8-10) இன்னொரு சமயம், ஒரு நல்ல தலைவராக ஆவதற்கு இயேசுவுக்கு எல்லா தகுதியும் இருந்ததை உணர்ந்த மக்கள், அவரை அரசியலில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், “அவர்கள் வந்து தன்னைப் பிடித்து ராஜாவாக்கப்போகிறார்கள் என்பதை இயேசு தெரிந்துகொண்டு, அந்த இடத்தைவிட்டு மறுபடியும் மலைக்குத் தனியாகப் போனார்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 6:15) இயேசு அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இயேசு அரசியல் விஷயங்களில் தலையிடவில்லை. இயேசுவின் நாட்களில் வாழ்ந்த யூதர்கள், ரோம அரசாங்கத்துக்கு வரி கட்டுவதை ஒரு பெரிய சுமையாகவும் நியாயமில்லாத ஒன்றாகவும் நினைத்தார்கள். இந்த விஷயத்தை பற்றி இயேசு என்ன நினைக்கிறார் என்று அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். இந்த அரசியல் விவாதத்துக்குள் அவரையும் இழுக்க பார்த்தார்கள். ஆனால், “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:13-17) அரசியல் விஷயங்களில் அவர் நடுநிலையோடு இருந்தாலும், ரோம அரசாங்கம் போட்ட வரிகளை கட்ட வேண்டும் என்று சொன்னார். அதேசமயத்தில், அரசாங்கம் சொல்கிற குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொன்னார். உதாரணத்துக்கு, கடவுளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டிய வணக்கத்தையோ பக்தியையோ அரசாங்கம் கேட்டால், அதற்கு நாம் கீழ்ப்படிய தேவையில்லை.—மத்தேயு 4:10; 22:37, 38.

இயேசு கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தார், அதை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். (லூக்கா 4:43) இந்த பூமி எப்படி இருக்க வேண்டும் என்று கடவுள் நினைத்தாரோ அதை மனித அரசாங்கங்களால் நிறைவேற்ற முடியாது, கடவுளுடைய அரசாங்கத்தால்தான் முடியும் என்பது இயேசுவுக்கு தெரிந்திருந்தது. அதனால்தான், பூமியிலிருந்தபோது அரசியல் விஷயங்களில் அவர் தலையிடவில்லை. (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கம் மனித அரசாங்கங்கள் மூலமாக செயல்படாது என்றும் அவற்றை அது நீக்கிவிடும் என்றும் அவருக்கு தெரிந்திருந்தது.—தானியேல் 2:44.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட்டார்களா?

இல்லை. ‘இந்த உலகத்தின் பாகமாக இருக்க கூடாது’ என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். (யோவான் 15:19) அவரை போலவே அவர்களும் அரசியல் விஷயங்களில் தலையிடவில்லை. (யோவான் 17:16; 18:36) அதற்கு பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி பிரசங்கித்து கற்பிக்க வேண்டும் என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள்.—மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 10:42.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்தில் இருந்தவர்களை மதித்து நடந்தார்கள். அவர்கள் அரசாங்க சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தார்கள், வரிகளை கட்டினார்கள். (ரோமர் 13:1, 7) ஆனால், கடவுளுக்கு கீழ்ப்படிவதைத்தான் தங்களுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமாக நினைத்தார்கள். (அப்போஸ்தலர் 5:29; 1 பேதுரு 2:13, 17) அரசியல் விஷயங்களில் அவர்கள் தலையிடவில்லை என்றாலும், சட்டம் கொடுத்த பாதுகாப்பையும் அரசாங்க சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.—அப்போஸ்தலர் 25:10, 11; பிலிப்பியர் 1:7.

ஆரம்பகால கிறிஸ்தவர்களும் அரசியலும்—சரித்திரத்தின் பக்கங்களில்

  • ”ரோம குடிமக்கள் செய்ய வேண்டிய சில கடமைகளை கிறிஸ்தவர்கள் செய்ய மறுத்தார்கள். . . . அவர்கள் அரசாங்க பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.”—ஆன் தி ரோட் டு சிவிலைசேஷன்—ஏ வேல்டு ஹிஸ்டரி, பக்கம் 238.

  • ”இயேசு அரசியலிலோ ராணுவ விஷயங்களிலோ தலையிட்டதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. . . . அவருடைய சீஷர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.”—ஜீசஸ் அண்டு ஜூடையிஸம், பக்கம் 231.

  • “தன்னுடைய மதத்துக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று ஒரு கிறிஸ்தவர் நினைத்தார். அரசியல் விஷயங்களைவிட தன்னுடைய மதம்தான் அவருக்கு ரொம்ப பெரிதாக இருந்தது. ரோம அரசனுக்குக் கீழ்ப்படிவதைவிட கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதைத்தான் அவர் முக்கியமாக நினைத்தார்.”—சீசர் அண்டு க்ரைஸ்ட், பக்கம் 647.

  • “ரோம குடிமக்களுக்கு சட்டம் கொடுத்த பாதுகாப்பை [அப்போஸ்தலன்] பவுல் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அன்றிருந்த அரசியல் விஷயங்களை அவர் ஆதரிக்கவில்லை, மற்றவர்களையும் அப்படி செய்ய சொல்லவில்லை. . . . அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். ஆனால், அரசியல் விவகாரங்களில் அவர்கள் தலையிடவில்லை.”—பியாண்ட் குட் இன்டென்ஷன்ஸ்—ஏ பிப்லிக்கல் வியூ அஃப் பாலிடிக்ஸ், பக்கங்கள் 122-123.

  • “அரசாங்க பதவிகளை ஏற்றுக்கொள்ள கூடாது என்று நிறைய கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். . . . மூன்றாவது நூற்றாண்டின் ஆரம்பம்வரை கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்த ஒரு வழக்கம் என்னவென்றால், சிவில் மாஜிஸ்ட்ரேட்டாக இருக்கும் ஒருவர் சர்ச்சின் அங்கத்தினராக ஆக வேண்டும் என்றால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என்று ஹிப்பாலட்டஸ் சொல்கிறார்.”—ஏ ஹிஸ்டரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி, வால்யூம் 1, பக்கம் 253.

இன்று கிறிஸ்தவர்கள் காட்டும் நடுநிலை

இயேசுவும் சரி, அவருடைய சீஷர்களும் சரி, அரசியல் விஷயங்களில் தலையிடவில்லை என்று பைபிள் தெளிவாக காட்டுகிறது. அதனால்தான், இயேசுவை பின்பற்றுகிற கிறிஸ்தவர்களாக, இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் அரசியல் விஷயத்தில் நடுநிலையோடு இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் போலவே அவர்கள் இயேசு கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள். அதாவது, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ உலகம் முழுவதும் சொல்கிறார்கள்.—மத்தேயு 24:14.

a இயேசு சாத்தானிடம் முடியாது என்று சொன்னபோது, ‘இதையெல்லாம் கொடுக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று அவனிடம் கேட்கவில்லை. பின்பு ஒருசமயத்தில், சாத்தானை “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்றும் சொன்னார்.—யோவான் 14:30.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்