உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 20 பக். 100-107
  • ஆலோசனை கட்டியெழுப்புகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆலோசனை கட்டியெழுப்புகிறது
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நிறுத்தம் (23)
  • பள்ளிக் கண்காணிகளுக்கு வழிமுறைகள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி நன்மைகளைக் கொண்டுவருகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 20 பக். 100-107

படிப்பு 20

ஆலோசனை கட்டியெழுப்புகிறது

1 உண்மையான கடவுளின் வணக்கத்தார் தங்களுடைய எல்லா வழிகளிலும் தயக்கமின்றி வழிநடத்துதலுக்காக எப்போதும் அவரை நோக்கியிருந்திருக்கின்றனர். பைபிள் சங்கீதக்காரர்களில் ஒருவர் நம்பிக்கையோடு இவ்விதமாக எழுதினார்: ‘உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்துவீர்.’ (சங். 73:24) மேலும் எரேமியா ஊக்கமான ஜெபத்தில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்: “உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. . . . சேனைகளின் [யெகோவா, NW] என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே, [ஆலோசனையிலே, NW] பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்.”—எரே. 32:17-19.

2 இன்று யெகோவாவின் ஆலோசனை, அவருடைய கிறிஸ்தவ வணக்கத்தாருக்கு எழுதப்பட்ட அவருடைய வார்த்தையின் மூலமாகவும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களடங்கிய அமைப்பின் மூலமாகவும் வருகிறது. ஆகவே தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்பவர்கள், அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஆலோசனையும் அது கொடுக்கப்படுகின்ற பாங்கும் பைபிளின் நேர்த்தியான நியமங்களால் வழிநடத்தப்படுவதை விரைவில் உணர்ந்துகொள்கின்றனர்.

3 படிப்படியான ஆலோசனை. மாணாக்கர்களுக்கும் பள்ளி கண்காணிக்கும் உதவியாக, பேச்சு ஆலோசனைத் தாள் கொடுக்கப்படுகிறது. சத்தியத்தை பலன்தரத்தக்கவிதமாக அளிப்பதற்கு தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள மாணாக்கர்களுக்கு உதவும் முப்பத்தாறு குறிப்புகளை அது பட்டியலிடுகிறது. ஒவ்வொரு குறிப்பின்பேரிலும் பிரயோஜனமுள்ள தகவலைப் படிப்புகள் 21 முதல் 37 வரையாக இந்தப் புத்தகத்தில் சுருக்கமான வடிவில் காணலாம். திட்டவட்டமான படிப்பு, பேச்சு ஆலோசனைத் தாளிலுள்ள எண்ணினால் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படிப்புகள் குறிப்பாக ஆலோசனைத் தாளோடு பயன்படுத்துவதற்காக அளிக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாயிருக்கும் இரண்டு அல்லது மூன்று பண்புகள் ஒரே படிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரே சமயத்தில் அவற்றைச் சிந்திப்பதே நல்லது என்ற எண்ணத்தோடு இது செய்யப்பட்டிருக்கிறது.

4 பள்ளியில் புதிதாக சேர்ந்துகொண்டிருப்பவர்கள் பேச்சு ஆலோசனைத் தாளில் பட்டியலிடப்பட்டிருக்கும் குறிப்புகளை மனதில்கொண்டு நன்றாக தயாரிப்பது பிரயோஜனமாயிருக்கும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவர்களுடைய முதல் பேச்சில், பள்ளி கண்காணி (அல்லது அங்கத்தினர்களின் எண்ணிக்கை பெரியதாக இருந்தால் மற்றொரு ஆலோசகர்) மாணாக்கர் சிறப்பாக கையாளும் குறிப்புகளின்மீது பாராட்டை மட்டுமே தெரிவிப்பார். அதற்குப் பின்னர், ஆலோசகர் மாணாக்கரின் அளிப்பை மேம்படுத்த கவனத்தை அதிகம் தேவைப்படுத்தும் ஓர் ஆலோசனைக் குறிப்பின்பேரில் படிப்படியாக கவனத்தை ஒருமுகப்படுத்தி, அவருடைய அடுத்த பேச்சின் சம்பந்தமாக அந்தக் குறிப்பின்பேரில் வேலைசெய்யும்படியாக திட்டவட்டமாக மாணாக்கருக்கு நியமிப்பு தருவார். ஆலோசனைத் தாளில் மாணாக்கர் அடுத்த குறிப்புகளுக்குச் செல்ல தயாராக இருக்கும்போது ஆலோசகர் ஒவ்வொரு மாணாக்கருக்கும் தெரியப்படுத்துவார்.

5 மாணாக்கர் பேச்சுக் கொடுக்கும் சிலர் சிறிது வேகமாக முன்னால் செல்லக்கூடியவர்களாக இருக்கையில், மற்றவர்கள் ஒரு முழு படிப்பிலும் சிந்திக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைக் கையாள முயற்சிசெய்வதற்குப் பதிலாக ஒரு சமயத்தில் ஒரே ஒரு குறிப்பின்பேரில் வேலைசெய்வது அவசியமாயிருக்கலாம். உண்மையில், ஒரே ஒரு கடினமான குறிப்பில் வேலைசெய்துகொண்டிருக்கையில் பல பேச்சுக்கள் கொடுக்கும்படி சில மாணக்கர்கள் சரியாகவே சொல்லப்படலாம், மற்றொன்றுக்கு போவதற்கு முன்பாக உட்பட்டிருக்கும் பேச்சுப் பண்பில் அவர்கள் உண்மையில் தேர்ச்சிபெறும்பொருட்டு இவ்விதமாக இருக்கும்.

6 ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்குப் பின்பும் கொடுக்கப்படும் ஆலோசனை தயவாக, மாணாக்கரை தன்னுடைய பேச்சுத் திறமையில் தொடர்ந்து முன்னேறுவதற்கு உதவிசெய்யத் திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும். இருப்பினும் போதகப் பேச்சு அல்லது பைபிள் சிறப்புக் குறிப்புகளை அளிப்பவருக்குக் கொடுக்கப்படும் எந்த ஆலோசனையும் பள்ளிக்குப் பின்பு தனியாக கொடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் பேச்சாளர் கொடுக்கப்பட்ட நேரத்திற்குமேல் செல்வாரானால் அவர் ஆலோசனை கொடுக்கப்படுவார். போதகப் பேச்சுக் கொடுப்பவர் எல்லா விதங்களிலும் ஒரு மாதிரிப் பேச்சைக் கொடுக்க பெருமுயற்சி எடுக்க வேண்டும், அப்போது தனியாக ஆலோசனை கொடுப்பது தேவையில்லாமல் இருக்கும்.

7 ஆலோசனை கொடுக்கப்படவேண்டிய குறிப்புகள் பொதுவாக மாணாக்கருக்கு முன்னரே வேலைசெய்வதற்கு அறிவுரைக் கூறப்பட்ட குறிப்புகளாகவே இருக்கும். நிச்சயமாகவே, பேச்சின் வேறு ஏதாவது ஓர் அம்சம் விசேஷமாக நன்றாக இருந்தால், ஆலோசகர் நிச்சயமாகவே அதை தன்னுடைய பாராட்டில் சேர்த்துக்கொள்வார், ஆனால் அந்தக் குறிப்பின்பேரில் அவர் ஆலோசனைத் தாளில் குறிக்கமாட்டார். பயன்படுத்தப்படவேண்டிய குறிகள் வருமாறு: “W” (இதில் வேலைசெய்ய வேண்டும்) என்பது குறிப்பிட்ட பேச்சுப் பண்பில் கூடுதலாக வேலைசெய்வது நன்மையாக இருக்கும்; “I” (முன்னேற்றமிருக்கிறது) மாணாக்கர் ஏற்கெனவே குறைந்தபட்சம் ஒருமுறையாவது இந்தக் குறிப்பின்பேரில் வேலைசெய்து, முன்னேறியிருப்பதற்கு அத்தாட்சியை கொடுத்திருக்கிறார், ஆனால் மற்றொரு சமயம் அதன்பேரில் வேலைசெய்வது நன்மையாக இருக்கும்; “G” (நன்றாயிருந்தது) பள்ளியில் அடுத்த நியமிப்புக்கு தயார்செய்கையில் மற்ற பேச்சுப் பண்புகளின் படிப்புக்குச் செல்ல அதிகாரமளிப்பதற்கு, கவனிக்கப்படும் பண்பு போதியளவு நன்றாகச் செய்துகாட்டப்பட்டது. ஒரு மாணாக்கருக்கு வாசிப்பு நியமிப்பு இருக்கையில், ஆலோசகர் இந்த வகையான நியமிப்புக்கு மிகச் சிறப்பாக பொருந்துகிற குறிப்புகளின்பேரில் ஆலோசனை கொடுப்பார்.

8 கொடுக்கப்படும் ஆலோசனையினால் மிக அதிக அளவு நன்மையை நிறைவேற்றுவதற்குப் பள்ளி கண்காணி கணிசமான பகுத்துணர்வைப் பயன்படுத்த வேண்டும். பேச்சுக் கொடுப்பவர் மிகவும் புதியவராக இருந்தால், வேறு எதையும்விட அதிகமாக தேவைப்படுவது ஊக்குவிப்பாகும். பள்ளியில் நீண்டகாலமாக இருக்கும் மற்ற மாணாக்கர்கள், தங்கள் பேச்சுக்களைத் தயாரிப்பதில் ஊக்கமுள்ளவர்களாக, அவர்களுக்கு வேலைசெய்யும்படியாக நியமிக்கப்பட்ட பேச்சுப் பண்புகளுக்குக் கவனம் செலுத்தலாம், ஆனால் அவர்களுக்குக் குறைவான திறமையே இருக்கலாம். இப்படிப்பட்டவர்களின் விஷயத்தில், குறிப்பிட்ட ஒரு பேச்சுப் பண்பு ஓரளவுக்கு மாத்திரமே வெளிக்காட்டப்பட்டாலும்கூட, பள்ளி கண்காணி ஆலோசனைத் தாளில் அதை “G” என்று குறித்து கவனம் தேவைப்படும் மற்றொரு பண்புக்குச் செல்ல மாணாக்கரை அனுமதிக்கலாம்.

9 மறுபட்சத்தில், பேச்சுக் கொடுக்கும் மற்றொருவர் அதிகமான அனுபவத்தை அல்லது அதிகமாக இயற்கையான திறமையையும் பெற்றவராயிருக்கலாம். ஆனால் மற்ற வேலைகளினுடைய அழுத்தத்தின் காரணமாக, நியமிக்கப்பட்ட பேச்சுப் பண்புகளைப் படிப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக அவர் செய்திருக்கக்கூடிய அளவு நன்றாகச் செய்யாமலிருக்கலாம். இப்படிப்பட்டவருடைய விஷயத்தில், பள்ளி கண்காணி ஆலோசனைத் தாளில் “G” என்று குறிப்பிட்டு வேறு ஏதாவது ஒன்றுக்குச் செல்லும்படியாக அவருக்குச் சொல்வாரேயானால், இது உண்மையில் மாணாக்கரின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதாக இருக்கும். பேச்சு நியமிக்கப்பட்ட பண்பு வெளிக்காட்டப்படக்கூடிய வகையானதாக இருந்திருந்தால், ஆலோசனை கொடுப்பவர் “W” (இதில் வேலைசெய்ய வேண்டும்) என்பதாக குறித்துவிட்டு மாணாக்கர் முன்னேறுவதற்கு உதவிசெய்ய தயவாக கொஞ்சம் தனிப்பட்ட உதவியை அவருக்கு அளிக்கலாம். இவ்விதமாக மாணாக்கர்கள் ஒவ்வொரு பேச்சையும் வெறுமனே ஒரு நியமிப்பை செய்துமுடிப்பதாக மட்டுமல்லாமல் பேச்சாளர்களாக தங்களுடைய முன்னேற்றத்தில் ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்ள உற்சாகப்படுத்தப்படுவார்கள்.

10 இந்தப் பேச்சுப் பயிற்றுவிப்பு படிப்படியானது என்பதை மனதில் கொள்ளுங்கள். திடீரென தேர்ச்சிபெற்ற பேச்சாளராக எதிர்பார்க்கவேண்டாம். இது படிப்படியான ஒரு செய்முறை, ஆனால் ஊக்கமான முயற்சியினால் துரிதப்படுத்தப்பட முடிகிற ஒன்றாகும். இந்தப் பேச்சுப் பயிற்சி நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் ஆலோசனைகளின்மீது நன்கு சிந்தனைசெய்து, உங்கள் நியமிப்புகளைத் தயாரிப்பதில் ஈடுபாடுகொண்டுவிட்டால், பார்வையாளர்கள் அனைவருக்கும் விரைவில் உங்கள் முன்னேற்றம் வெளிப்படையாகத் தெரியும்.—1 தீ. 4:15.

11 ஆலோசகர். பள்ளி கண்காணி நியமிக்கப்பட்ட பொருள் நன்றாக எடுத்துரைக்கப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்கக்கூடியவராக இருப்பதற்கும் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை திருத்தும் நிலையிலிருப்பதற்கும் அவர் ஒவ்வொரு வார படிப்பு பொருளையும் கவனமாகப் படிக்க வேண்டும். இருப்பினும் பொருள் அளிக்கப்படும் விதத்தைக்குறித்து அளவுக்கு அதிகமாக குறைகாண்பவராக இருப்பதன் காரணமாக அவரால் பேச்சுக்களை அனுபவிக்கமுடியாமல் போய்விடும் நிலைக்கு அவர் ஒருபோதும் வந்துவிடக்கூடாது. சொல்லப்படும் நேர்த்தியான சத்தியங்களிலிருந்து அவரும்கூட நன்மையடைய வேண்டும்.

12 ஆலோசனை கொடுக்கையில் அவர் பொதுவாக மாணாக்கரின் பங்கில் செய்யப்பட்ட முயற்சிக்காக பாராட்டுதலான ஒரு வார்த்தையோடு ஆரம்பிக்கிறார். பின்னர் பேச்சுக் கொடுப்பவர் ஆலோசனைத் தாளில் வேலைசெய்துகொண்டிருக்கும் குறிப்புகளின்பேரில் குறைகளை எடுத்துரைக்கிறார். குறிப்பு தொடர்ந்த கவனத்தைத் தேவைப்படுத்துமானால், பேச்சுக் கொடுப்பவரின் பலவீனத்தின் மேல் அல்ல ஆனால் எவ்வாறு முன்னேற்றம் செய்யப்படலாம் என்பதற்குதானே அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இவ்விதமாக ஆலோசனை பேச்சுக் கொடுப்பவரையும் கேட்போர் கூட்டத்திலுள்ள மற்றவர்களையும் கட்டியெழுப்பும்.

13 ஒரு பேச்சாளரிடம் வெறுமனே அவர் நன்றாகச் செய்தார் என்றோ அந்தக் குறிப்பிட்ட பேச்சுப் பண்பில் அவர் திரும்பவும் வேலைசெய்ய வேண்டும் என்றோ சொல்வது போதாது. ஆலோசகர் ஏன் அந்தப் பேச்சு நன்றாயிருந்தது அல்லது ஏன் முன்னேற்றம் அவசியமாயிருந்தது மற்றும் எப்படி முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதையும்கூட விளக்குவாரேயானால் ஆஜராயிருக்கும் அனைவருக்கும் அது உதவியாக இருக்கும். கூடுதலாக, ஆலோசிக்கப்படும் பேச்சுப் பண்பு வெளி ஊழியத்தில் அல்லது சபை கூட்டங்களில் ஏன் அவ்வளவு அவசியமாயிருக்கிறது என்பதற்கான காரணங்களை உயர்த்திக்காட்டுவது அவருக்குப் பிரயோஜனமாயிருக்கும். இது முழு சபையினுடைய பங்கிலும் குறிப்புக்குப் போற்றுதலைத் தூண்டுவதாக இருந்து மாணாக்கரைத் தொடர்ந்து அதற்குக் கவனம் செலுத்தும்படியாக உற்சாகப்படுத்தும்.

14 மாணாக்கரின் பேச்சினுடைய மறுபார்வையை அளிப்பது ஆலோசகரின் வேலை இல்லை. அவர் தன்னுடைய ஆலோசனையில் சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருந்து ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்கும் அதை இரண்டு நிமிடங்களுக்குள் முடித்துக்கொள்ள கவனமாக இருத்தல் வேண்டும். இவ்விதமாக ஆலோசனையும் யோசனைகளும் அளவுக்கு அதிகமான வார்த்தைகளால் விளங்காமல் போய்விடாது. மேலும், மாணாக்கர் கலந்தாலோசிக்கப்பட்ட விஷயத்தின்பேரில் கூடுதலான தகவலைக் காணும்பொருட்டு அவருக்கு இந்தப் புத்தகத்திலுள்ள பக்கங்களைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கிறது.

15 உச்சரிப்பு அல்லது இலக்கணத்தில் சிறிய பிழைகள் கவனிக்கப்படவேண்டிய பெரிய காரியங்கள் அல்ல. மாறாக ஆலோசகர் பேச்சாளருடைய அளிப்பின் பொதுவான விளைவைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும். பொருள் பிரயோஜனமுள்ளதாகவும் அறிவை வளர்ப்பதாகவும் இருக்கிறதா? அது நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு பின்பற்றுவதற்கு எளிதாக இருக்கிறதா? பேச்சு உண்மையாக, ஊக்கமுள்ளதாக, நம்பவைப்பதாக இருக்கிறதா? அவருடைய முகபாவனையும் சைகைகளும், அவர் சொல்வதை அவர் நம்புவதையும், அவர் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைவிட நேர்த்தியான சத்தியங்கள் கேட்போரைச் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறையுள்ளவராக இருப்பதைக் காட்டுகின்றனவா? இந்த அத்தியாவசியமான காரியங்கள் நன்றாக கவனிக்கப்பட்டிருந்தால், ஒருசில தவறான உச்சரிப்புகளையும் இலக்கணப் பிழைகளையும் கேட்போர் கவனிப்பது அரிதே.

16 ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படும் ஆலோசனை எப்போதும் தயவாயும் உதவுகின்ற முறையிலும் கொடுக்கப்பட வேண்டும். மாணாக்கருக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற தீவிரமான ஆசை அங்கே இருக்க வேண்டும். ஆலோசனை கொடுக்கப்படுகிறவரின் ஆளுமையை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் உணர்ச்சிமிக்கவரா? குறைவான கல்வியுடையவரா? அவருடைய பலவீனங்களுக்கு இடங்கொடுக்க காரணங்கள் இருக்கின்றனவா? ஆலோசனை, ஆலோசனை கொடுக்கப்பட்டவர் குறைகாணப்பட்டவராக அல்ல, உதவப்பட்டவராக உணர செய்ய வேண்டும். அவர் ஆலோசனையையும் அதன் நியாயமானத்தன்மையையும் புரிந்துகொள்வதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

17 ஆலோசனையிலிருந்து பயனடைதல். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒரு பேச்சு நியமனம் கொடுக்கப்படுகையில், நீங்கள் பேச்சைக் கொடுப்பதற்கு காரணம் சபைக்கு அறிவூட்டும் பொருளை எடுத்துரைக்க மட்டுமல்ல, உங்கள் பேச்சுத் திறமையை முன்னேற்றுவிப்பதற்காகவுமே என்பதை மனதில் வையுங்கள். இந்த அம்சத்தில் வெற்றிபெறுவதற்கு, நீங்கள் வேலைசெய்யும்படியாக கேட்கப்பட்டிருக்கும் பேச்சுப் பண்புகளைப் பகுப்பாய்வு செய்வதில் கொஞ்ச நேரத்தைச் செலவிடுவது முக்கியமாகும். வேலைசெய்யப்படும் குறிப்பைச் சிந்திக்கும் படிப்பை இந்தப் புத்தகத்தில் கவனமாக வாசிக்கவும். அப்பொழுது அது உங்கள் தயாரிப்பை எவ்வாறு பாதிக்க வேண்டும் மற்றும் உங்கள் பேச்சில் இந்தப் பேச்சுப் பண்பை எவ்வாறு காட்டலாம் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். உங்களுக்கு உதவ, ஒவ்வொரு பேச்சுப் பண்பையும்பற்றிய முக்கிய அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்படுகின்றன. இவையே சிந்திக்கப்படவேண்டிய முக்கிய காரியங்களாகும்.

18 உங்கள் பேச்சைக் கொடுத்து முடித்தபிறகு, அளிக்கப்படும் வாய்மொழி ஆலோசனையைக் கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். போற்றுதலோடு அதை ஏற்றுக்கொள்ளுங்கள். பின்னர் கவனம் தேவைப்படும் குறிப்புகளின்பேரில் வேலைசெய்யுங்கள். உங்கள் முன்னேற்றத்தை துரிதப்படுத்த நீங்கள் விரும்பினால், உங்களுக்கு மற்றொரு பேச்சு வரும்வரையாக காத்திருக்கவேண்டாம். நீங்கள் வேலைசெய்ய வேண்டிய குறிப்புகளைக் கலந்தாலோசிக்கும் பொருளை இந்தப் புத்தகத்தில் வாசியுங்கள். உங்களுடைய அன்றாட சம்பாஷணையில் ஆலோசனைகளைப் பொருத்திப்பிரயோகிக்க முயற்சிசெய்யுங்கள். உங்களுடைய அடுத்த மாணாக்கர் பேச்சை கொடுப்பதற்குள் அவற்றில் நீங்கள் நன்கு தேர்ச்சிபெற்றவராகியிருக்கலாம்.

19 ஒவ்வொரு மாணாக்கரும் பள்ளி நிகழ்ச்சிநிரலில், அவர் கொடுக்கிற தொடர்ந்து வரும் ஒவ்வொரு பேச்சிலும் முன்னேறுவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். உண்மைதான், இது தொடர்ச்சியான முயற்சியை அர்த்தப்படுத்தும், ஆனால் அது நிச்சயமாக யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் பயிற்றுவிப்பிலிருந்து மிக அதிகமான நன்மையைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு, நீதிமொழிகள் 19:20-லுள்ள வார்த்தைகளில் விசேஷமான முக்கியத்துவமிருக்கிறது: “உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.”

[கேள்விகள்]

1, 2. ஆலோசனையை நாம் ஏன் நாடுகிறோம், என்ன விதத்தில் அதை நாம் பெற்றுக்கொள்கிறோம்?

3-5. பேச்சு ஆலோசனைத் தாளும் படிப்புகள் 21 முதல் 37 வரையிலுமாக உள்ள பொருளும் எவ்விதமாக ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தப்பட வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கவும்.

6, 7. என்ன குறிப்புகளின்பேரில் பள்ளி கண்காணி ஆலோசனை கொடுப்பார்?

8-10. ஆலோசனைத் தாளில் குறிக்கையில், முன்னேற்றத்தை ஊக்குவிக்க பள்ளி கண்காணி எதை மனதில் வைக்க வேண்டும்?

11-16. ஆலோசகர் தன்னுடைய ஆலோசனையில் கட்டியெழுப்புகிறவராக இருப்பதற்கு என்ன வழிகாட்டும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சி எடுக்கிறார்?

17-19. ஒவ்வொரு பேச்சிலும் மிக அதிகமான முன்னேற்றத்தைச் செய்வதற்கு, ஒவ்வொரு பேச்சையும் தயாரிப்பதற்கு முன்னும் அதை கொடுத்துமுடித்தப் பின்பும் ஒரு மாணாக்கர் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 104, 105-ன் படம்]

பேச்சு ஆலோசனை

பேச்சு கொடுப்பவர்............................................

(முழுப் பெயர்)

குறிகள்: W- இதில் வேலைசெய்ய வேண்டும்

I -முன்னேற்றமிருக்கிறது

G -நன்றாயிருந்தது

பேச்சு எண்

அறிவை வளர்க்கும் பொருள் (21)*

தெளிவு, புரியும்படி இருத்தல் (21)

அக்கறையைத் தூண்டும் முன்னுரை (22)

தலைப்புக்குப் பொருத்தமான முன்னுரை (22)

அளவான முன்னுரை (22)

சப்தம் (23)

நிறுத்தம் (23)

கேட்போர் பைபிளை உபயோகிக்க உற்சாகப்படுத்துதல்(24)

வேதவசனங்களைச் சரியான முறையில் அறிமுகப்படுத்துதல் (24)

வேதவசனங்களை அழுத்தத்துடன் வாசித்தல் (25)

வேதவசனத்தின் பொருத்தத்தைத் தெளிவாக்குதல் (25)

அழுத்தத்திற்காக திரும்பத் திரும்பச் சொல்லுதல் (26)

சைகைகள் (26)

பொருளின் தலைப்பை அழுத்திக்காட்டுதல் (27)

பிரதான குறிப்புகளை மேலெழும்பி நிற்கச்செய்தல் (27)

கேட்போருடன் தொடர்பு, குறிப்புகளின் உபயோகம் (28)

குறிப்புத்தாளின் உபயோகம் (28)

குறிப்புகள்:...............................

.....................................

....................................

* அடைப்புக் குறியினுள் உள்ள ஒவ்வொரு எண்ணும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூலில் குறிக்கப்பட்டிருக்கும் பேச்சுப் பண்பை விளக்கும் படிப்பைக் குறிக்கிறது.

S-48TL Printed inIndia

தேதி பேச்சு எண்

சரளமாக பேசுதல் (29)

சம்பாஷணைமுறை பண்பு (29)

உச்சரிப்பு (29)

இணைப்புகளின் மூலம் கோர்வை (30)

தர்க்கரீதியில், கோர்வையாக விரிவாக்குதல் (30)

நம்பவைக்கச் செய்யும் விவாதம் (31)

நியாயமாக சிந்திக்க கேட்போருக்கு உதவுதல் (31)

கருத்து அழுத்தம் (32)

குரலில் ஏற்றத்தாழ்வு (32)

உற்சாகம் (33)

கனிவு, உணர்ச்சி (33)

பொருளுக்குப் பொருத்தமான உதாரணங்கள் (34)

கேட்போருக்குப் பொருத்தமான உதாரணங்கள் (34)

வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை அமைத்தல் (35)

பொருத்தமான, பலன்தரத்தக்க முடிவுரை (36)

அளவான முடிவுரை (36)

நேரம் (36)

தன்னம்பிக்கையும் நிதானமும் (37)

தனிப்பட்ட தோற்றம் (37)

குறிப்பு: ஒவ்வொரு பேச்சுக்கும் ஆலோசகர் குறிப்பிட்ட ஆலோசனை கொடுப்பார். மேலே கொடுக்கப்பட்ட அதே ஒழுங்கைப் பின்பற்ற அவசியமில்லை, ஆனால் மாணாக்கர் முன்னேற வேண்டிய அவசியம் இருக்கும் பகுதிகளுக்கு அவர் கவனம் செலுத்துவார். தேவை எழும்போது, படிவத்திலுள்ள காலி இடங்களை, பட்டியலில் சேர்க்கப்படாத குறிப்புகளின் பேரில் மாணாக்கர்களுக்கு ஆலோசனை கொடுப்பதற்கு பயன்படுத்தலாம்—கூற்றின் திருத்தமானத் தன்மை, ஒலிப்பு, தோற்றம், சொற்களின் தெரிவு, இலக்கணம், இயற்கைப் பழக்கங்கள், பொருத்தம், கற்பிக்கும் உத்திகள் மற்றும் குரல் பண்பு போன்றவை. முந்தின ஆலோசனை குறிப்பின் பேரில் மாணாக்கர் வேலை செய்து முடித்த பிறகு அடுத்ததாக ஆலோசனை தேவைப்படும் குறிப்பை ஆலோசகர் அதற்குரிய பெட்டியில் வட்டமிடுவார். இந்தக் குறிப்பின் படிப்பு எண் அடுத்த தேவராஜ்ய ஊழியப் பள்ளி நியமிப்பு தாளில் (S-89) காட்டப்பட வேண்டும்.

[பக்கம் 106, 107-ன் படம்]

பேச்சுப் பண்புகளின் சுருக்கம்

அறிவை வளர்க்கும் பொருள் (21)

திட்டவட்டமான பொருள்

உங்கள் கேட்போர் கூட்டத்தின் அறிவை வளர்த்தல்

நடைமுறை பயனுள்ள பொருள்

கூற்றின் திருத்தமானத்தன்மை

கூடுதலான தெளிவுபடுத்தும் பொருள்

தெளிவு, புரியும்படி இருத்தல் (21)

எளிதாகச் சொல்லுதல்

பழக்கமில்லாத பதங்கள் விளக்கப்படுதல்

அளவுக்கு அதிகமான பொருளைக் கொண்டில்லாமல் இருத்தல்

அக்கறையைத் தூண்டும் முன்னுரை (22)

தலைப்புக்குப் பொருத்தமான முன்னுரை (22)

அளவான முன்னுரை (22)

சப்தம் (23)

செளகரியமாக கேட்கப்படுவதற்குப் போதிய சப்தமாக இருத்தல்

சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான சப்தம்

பொருளுக்குப் பொருத்தமான சப்தம்

நிறுத்தம் (23)

நிறுத்தக்குறிகளுக்காக நிறுத்தம்

கருத்து மாற்றத்துக்காக நிறுத்தம்

அழுத்தத்துக்காக நிறுத்தம்

சூழ்நிலைகள் தேவைப்படுத்தும்போது நிறுத்தம்

கேட்போர் பைபிளை உபயோகிக்க உற்சாகப்படுத்துதல் (24)

குறிப்பாகச் சொல்வதன் மூலம்

வேதவசனத்தைக் கண்டுபிடிக்க நேரத்தை அனுமதிப்பதன் மூலம்

வேதவசனங்களைச் சரியான முறையில் அறிமுகப்படுத்துதல் (24)

வேதவசனங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுதல்

வேதவசனத்தைப் பயன்படுத்துவதற்கான காரணத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துதல்

வேதவசனங்களை அழுத்தத்துடன் வாசித்தல் (25)

சரியான வார்த்தைகளுக்கு அழுத்தம்

அழுத்தத்தின் பலன்தரத்தக்க முறையைப் பயன்படுத்துதல்

வீட்டுக்காரர் வாசிக்கும் வசனங்கள்

வேதவசனத்தின் பொருத்தத்தைத் தெளிவாக்குதல் (25)

பொருத்தப்படவிருக்கும் வார்த்தைகள் தனிப்படுத்தப்படுதல்

அறிமுக குறிப்பு தெளிவாயிருத்தல்

அழுத்தத்திற்காக திரும்பத் திரும்பச் சொல்லுதல் (26)

பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்

புரிந்துகொள்ளப்படாத குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்

சைகைகள் (26)

விவரிப்பதற்காக சைகைகள்

அழுத்தத்திற்காக சைகைகள்

பொருளின் தலைப்பை அழுத்திக்காட்டுதல் (27)

பொருத்தமான தலைப்பு

தலைப்பு வார்த்தைகளை அல்லது கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்

பிரதான குறிப்புகள் மேலெழும்பி நிற்கச்செய்தல் (27)

அளவுக்கு அதிகமான பிரதான குறிப்புகளைக் கொண்டில்லாமல் இருத்தல்

பிரதான கருத்துக்கள் தனித்தனியே விரிவாக்கப்படுதல்

முக்கிய கருத்துக்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் துணைக்குறிப்புகள்

கேட்போருடன் தொடர்பு, குறிப்புகளின் உபயோகம் (28)

கேட்போருடன் பார்வையால் தொடர்பு

நேரடியாக பார்த்துப் பேசுவதன் மூலம் கேட்போருடன் தொடர்பு

குறிப்புத்தாளின் உபயோகம் (28)

சரளமாகப் பேசுதல் (29)

சம்பாஷணைமுறை பண்பு (29)

சம்பாஷணைமுறை சொற்றொடர்களைப் பயன்படுத்துதல்

சம்பாஷணைமுறை பாணியில் பேச்சுக் கொடுத்தல்

உச்சரிப்பு (29)

இணைப்புகளின் மூலம் கோர்வை (30)

இடையிணைப்புக் கூற்றுகளின் உபயோகம்

உங்கள் கேட்போருக்குப் போதுமான கோர்வை

தர்க்கரீதியில், கோர்வையாக விரிவாக்குதல் (30)

நியாயமான வரிசையில் பொருள்

பொருத்தமான பொருளை மாத்திரமே பயன்படுத்துதல்

முக்கிய கருத்துக்கள் விட்டுவிடப்படாதிருத்தல்

நம்பவைக்கச் செய்யும் விவாதம் (31)

அஸ்திவாரம் போடப்படுதல்

நியாயமான சான்று கொடுக்கப்படுதல்

பலன்தரத்தக்க சுருக்கம்

நியாயமாக சிந்திக்க கேட்போருக்கு உதவுதல் (31)

பொதுவான ஆதாரம் காத்துக்கொள்ளப்படுதல்

குறிப்புகளைப் போதிய அளவு விரிவாக்குதல்

கேட்போருக்குப் பொருத்தம் செய்யப்படுதல்

கருத்து அழுத்தம் (32)

வாக்கியங்களிலுள்ள கருத்து தெரிவிக்கும் வார்த்தைகளை அழுத்திச் சொல்லுதல்

பேச்சின் முக்கிய கருத்துக்களின் அழுத்தம்

குரலில் ஏற்றத்தாழ்வு (32)

சக்தியில் வேறுபாடு

வேகத்தில் வேறுபாடு

தொனிநிலையில் வேறுபாடு

கருத்து அல்லது உணர்ச்சிக்குப் பொருத்தமான குரலில் ஏற்றத்தாழ்வு

உற்சாகம் (33)

உயிரோட்டமுள்ள பேச்சினால் உற்சாகம் காண்பித்தல்

பொருளுக்குப் பொருத்தமான உற்சாகம்

கனிவு, உணர்ச்சி (33)

முகபாவனையில் கனிவை உணரச்செய்தல்

குரலின் தொனியில் கனிவையும் உணர்ச்சியையும் உணரச்செய்தல்

பொருளுக்குப் பொருத்தமான கனிவும் உணர்ச்சியும்

பொருளுக்குப் பொருத்தமான உதாரணங்கள் (34)

எளிமை

பொருத்தம் தெளிவாக்கப்படுதல்

முக்கிய குறிப்புகள் வலியுறுத்தப்படுதல்

கேட்போருக்குப் பொருத்தமான உதாரணங்கள் (34)

பழக்கப்பட்ட நிலைமைகளிலிருந்து எடுக்கப்பட்டவை

நல்ல ரசனையில்

வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை அமைத்தல் (35)

சொற்றொடர்கள் பொதுமக்கள் புரிந்துகொள்ளும்படி செய்யப்படுதல்

பொருத்தமான குறிப்புகள் தெரிந்தெடுக்கப்படுதல்

பொருளின் நடைமுறைப் பயன் உயர்த்திக்காட்டப்படுதல்

பொருத்தமான, பலன்தரத்தக்க முடிவுரை (36)

பேச்சின் தலைப்புக்கு நேரடியாக தொடர்புடைய முடிவுரை

என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுரை கேட்போருக்குக் காண்பிக்கிறது

அளவான முடிவுரை (36)

நேரம் (36)

தன்னம்பிக்கையும் நிதானமும் (37)

உடல் தோற்றத்தில் நிதானத்தை வெளிப்படுத்துதல்

கட்டுப்படுத்தப்பட்ட குரலின் மூலமாக நிதானத்தைக் காண்பித்தல்

தனிப்பட்ட தோற்றம் (37)

தகுதியான உடையும் தலை அலங்காரமும்

தகுதியான தோற்றநிலை

நேர்த்தியான உபகரணங்கள்

பொருத்தமற்ற முகபாவனைகள் கூடாது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்