உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 5

      எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?

      அர்ஜென்டினாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்

      அர்ஜென்டினா

      சியர்ரா லியோன் என்ற நாட்டில் நடக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம்

      சியர்ரா லியோன்

      பெல்ஜியம் என்ற நாட்டில் நடக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம்

      பெல்ஜியம்

      மலேசியா என்ற நாட்டில் நடக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம்

      மலேசியா

      வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் கிடைக்காததாலும் தேவையான ஆறுதல் கிடைக்காததாலும் நிறையப் பேர் மதக் கூட்டங்களுக்குப் போவதையே நிறுத்திவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, நாங்கள் நடத்துகிற கூட்டங்களுக்கு நீங்கள் ஏன் வர வேண்டும்? எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

      அன்பும் பாசமும் காட்டுகிற ஜனங்கள் அங்கே இருக்கிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்த கிறிஸ்தவர்கள் கடவுளை வணங்குவதற்கும் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் சபைகளுக்கு வந்தார்கள். ஒருவருக்கொருவர் அன்பாக ஆறுதலாக பேசுவதற்காகவும் கூடிவந்தார்கள். (எபிரெயர் 10:24, 25) அங்கே வந்தவர்கள் எல்லாரும் ஒரே குடும்பம் போல் பழகினார்கள், உயிருக்கு உயிரான நண்பர்களைப் போல் இருந்தார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:3; 3 யோவான் 14) நாங்களும் அவர்களைப் போலவே எங்கள் கூட்டங்களை நடத்துகிறோம். அதேபோன்ற அன்பையும் பாசத்தையும் நாங்களும் அனுபவிக்கிறோம்.

      பைபிளில் இருக்கும் விஷயங்களை கடைப்பிடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். பைபிள் காலங்களில் இருந்ததுபோலவே இன்றும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாரும் ஒன்றாக கூடி வருகிறோம். பைபிளில் இருக்கும் விஷயங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று தகுதியுள்ள ஆண்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். (உபாகமம் 31:12; நெகேமியா 8:8) கூட்டங்களில் கேள்விகள் கேட்கும்போது, யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். யெகோவாவைப் புகழ்ந்து எல்லாரும் பாடும்போது நீங்களும் சேர்ந்து பாடலாம். இப்படி, நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டலாம்.—எபிரெயர் 10:23.

      கடவுள்மீது நம்பிக்கை அதிகமாகும். அப்போஸ்தலன் பவுல் ஒரு சபைக்கு இப்படி எழுதினார்: “உங்களைப் பார்ப்பதற்கு . . .  ஏங்குகிறேன். சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும் என்று ஏங்குகிறேன்.” (ரோமர் 1:11, 12) கூட்டங்களுக்கு வந்து மற்றவர்களோடு பழகும்போது கடவுள்மீது நமக்கு இருக்கிற நம்பிக்கை அதிகமாகும், எப்போதுமே கடவுளுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகும்.

      நீங்களும் எங்கள் கூட்டங்களுக்கு வந்து இதையெல்லாம் நேரில் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் வந்தால் நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுவோம். நாங்கள் யாரிடமும் காணிக்கை வசூல் செய்வதில்லை. அனுமதி இலவசம்!

      • யாரைப் போலவே எங்கள் கூட்டங்களை நடத்துகிறோம்?

      • கூட்டத்தில் கலந்துகொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      நீங்கள் எங்களுடைய ராஜ்ய மன்றத்தைப் பார்க்க ஆசைப்பட்டால், யெகோவாவின் சாட்சிகளிடம் அதை சுற்றிக் காண்பிக்க சொல்லுங்கள்.

  • நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 6

      நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?

      யெகோவாவின் சாட்சிகள் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள்

      மடகாஸ்கர்

      யெகோவாவின் சாட்சி ஒருவர் சபையில் இருக்கும் இன்னொருவருக்கு உதவி செய்கிறார்

      நார்வே

      மூப்பர்கள் சபையிலிருக்கும் சகோதரியைப் போய் பார்க்கிறார்

      லெபனான்

      யெகோவாவின் சாட்சிகள் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள்

      இத்தாலி

      எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, எவ்வளவு வெயில் அடித்தாலும் சரி, மழை கொட்டினாலும் சரி, நாங்கள் சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் போவோம். என்னதான் கஷ்டம் இருந்தாலும், நாள் முழுவதும் வேலை செய்தாலும், களைப்பாக இருந்தாலும், அதையெல்லாம் பார்க்காமல் கூட்டங்களுக்குப் போய்விடுவோம். கூட்டங்களுக்குத் தவறாமல் போவதற்கு நாங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறோம்?

      பிரச்சினைகளை சமாளிக்க கூட்டங்கள் ரொம்ப உதவியாக இருக்கின்றன. கூட்டங்களுக்கு வரும் எல்லாரும் “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 10:24) அதாவது, அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அவர்களுக்கு வந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள் என்று தெரிந்துகொள்வோம். அந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு வரும்போது அதை சமாளிக்க அவர்கள் உதவி செய்வார்கள்.

      அங்கே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கூட்டங்களுக்கு வருகிறவர்களோடு நாங்கள் ஏதோ பெயருக்கென்று பழகாமல், உயிர் நண்பர்களைப் போல் பழகுகிறோம். கூட்டங்களுக்குப் போகும்போது மட்டுமல்ல மற்ற சமயங்களிலும் அவர்களோடு நேரம் செலவழிக்கிறோம். அதனால், அவர்கள் மேல் அன்பும் பாசமும் இன்னும் அதிகமாகிறது, அவர்களை மதித்து நடக்கவும் முடிகிறது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் உடனே போய் உதவி செய்கிறோம். (நீதிமொழிகள் 17:17) கூட்டங்களுக்கு வருகிற எல்லாரிடமும் உண்மையான அக்கறையை காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 12:25, 26.

      கடவுள் சொல்வதுபோல் நடக்கிறவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். எங்களுடைய கூட்டங்களுக்கு வந்தால் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திவிடாதீர்கள்.

      • கூட்டங்களுக்குப் போவது நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?

      • எங்கள் கூட்டங்களுக்கு நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்?

  • கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 7

      கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?

      நியுசிலாந்து நாட்டில் நடக்கும் சபைக் கூட்டம்

      நியுசிலாந்து

      ஜப்பானில் நடக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம்

      ஜப்பான்

      ஒரு இளம் சகோதரர் உகாண்டாவில் பைபிளை வாசிக்கிறார்

      உகாண்டா

      லிதுவேனியாவில் நடக்கும் சபைக் கூட்டத்தில் பைபிளைப் பற்றி ஊழியத்தில் பேசுவதுபோல் இரண்டு சகோதரிகள் நடித்துக் காட்டுகிறார்கள்

      லிதுவேனியா

      ஆரம்ப காலத்தில் நடந்த கிறிஸ்தவ கூட்டங்களில் பாட்டு பாடினார்கள், ஜெபம் செய்தார்கள், பைபிளை வாசித்து அதற்கு விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எந்த சடங்கு சம்பிரதாயமும் செய்யவில்லை. (1 கொரிந்தியர் 14:26) அதேபோல்தான் இன்றும் எங்களுடைய கூட்டங்கள் நடக்கின்றன.

      வாழ்க்கைக்குத் தேவையான பைபிள் ஆலோசனைகளைக் கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கூட்டம் நடக்கும். முதலில் 30 நிமிடங்களுக்கு பைபிள் பேச்சு இருக்கும். அதில், வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும் உலக நிலைமைகளையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பேச்சு கொடுக்கிறவர் வசனங்களை வாசிக்கும்போது நாமும் பைபிளை திறந்து பார்க்கலாம். அதற்குப் பிறகு, ஒரு மணி நேரத்திற்கு “காவற்கோபுர” படிப்பு இருக்கும். காவற்கோபுர படிப்பு இதழில் இருக்கிற ஒரு கட்டுரையை படிப்போம். கூட்டத்திற்கு வந்திருக்கிற எல்லாரும் பதில் சொல்லலாம். இப்படி படிப்பதால் பைபிள் சொல்கிறபடி வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறோம். உலகம் முழுவதும் இருக்கிற 1,10,000-க்கும் அதிகமான சபைகளிலும் அதே கட்டுரையைத்தான் படிப்பார்கள்.

      மற்றவர்களுக்கு நன்றாக சொல்லிக்கொடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். ஞாயிற்றுக்கிழமை தவிர இன்னொரு நாள் சாயங்காலம் நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் என்ற கூட்டம் நடக்கும். வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி மூன்று பகுதிகளாக இந்தக் கூட்டம் நடக்கும். முதல் பகுதியின் தலைப்பு, பைபிளில் இருக்கும் புதையல்கள். இந்தப் பகுதியில், அந்தந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்பு பகுதியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வோம். இரண்டாவது பகுதியின் தலைப்பு, ஊழியத்தை நன்றாக செய்யுங்கள். இந்தப் பகுதியில், பைபிளில் இருக்கும் விஷயங்களை ஊழியத்தில் எப்படி நன்றாக பேசலாம் என்பதை நடிப்புகள் மூலமாக கற்றுக்கொள்வோம். கூட்டத்தை நடத்தும் சகோதரர், பைபிளை நன்றாக வாசிப்பதற்கும் ஊழியத்தில் நன்றாக பேசுவதற்கும் ஆலோசனைகளை கொடுப்பார். (1 தீமோத்தேயு 4:13) மூன்றாவது பகுதியின் தலைப்பு, கிறிஸ்தவர்களாக வாழுங்கள். இந்தப் பகுதியில், பைபிள் தரும் ஆலோசனைகளை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை கற்றுக்கொள்வோம். பைபிளில் இருக்கும் விஷயங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள கேள்வி-பதில் முறையில் சில கட்டுரைகள் இருக்கும்.

      எங்கள் கூட்டங்களுக்கு வந்தால், பைபிளிலிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள், அதற்காக ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.—ஏசாயா 54:13.

      • யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் கூட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

      • நீங்கள் எந்தக் கூட்டத்திற்கு வர ஆசைப்படுகிறீர்கள்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      இனி நடக்கப்போகிற கூட்டங்களில் எதைப் பற்றியெல்லாம் பேசப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதில் எந்த விஷயம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

  • கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 8

      கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?

      ஒரு அப்பாவும் மகனும் கூட்டத்திற்கு தயாராகிறார்கள்

      ஐஸ்லாந்து

      ஒரு அம்மாவும் மகளும் கூட்டங்களுக்கு தயாராகிறார்கள்

      மெக்சிகோ

      கினி பிஸ்ஸாவில் அடக்கமாக உடை உடுத்துகிறார்கள்

      கினி-பிஸ்ஸாவ்

      பிலிப்பைன்ஸில் ஒரு குடும்பம் கூட்டத்திற்கு நடந்துபோகிறார்கள்

      பிலிப்பைன்ஸ்

      இந்தப் புத்தகத்தில் இருக்கிற படங்களைப் பார்த்தீர்களா? கூட்டத்திற்குப் போகும்போது யெகோவாவின் சாட்சிகள் நன்றாக உடை உடுத்தி, தலைவாரி இருப்பதை கவனித்தீர்களா? நாங்கள் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

      கடவுளுக்கு மரியாதை காட்டுவதற்காக. கடவுள் நம் வெளித்தோற்றத்தை பார்ப்பதில்லை, நம் மனதைத்தான் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) இருந்தாலும், கூட்டத்திற்குப் போகும்போது, கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் மரியாதை காட்டும் விதத்தில் உடை உடுத்த வேண்டும். ஒருவேளை, முக்கியமான ஒரு அதிகாரியைப் பார்க்கப் போகும்போது அவருக்கு மரியாதை காட்டும் விதத்தில் உடுத்துவோம். அப்படியென்றால், ‘என்றென்றும் ராஜாவாக’ இருக்கும் யெகோவாவை வணங்குவதற்குப் போகும்போது நம் உடைக்கு இன்னும் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்!—1 தீமோத்தேயு 1:17.

      பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்வதற்காக. உடை உடுத்தும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள், ‘அடக்கமாகவும் தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும்’ இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:9, 10) ‘அடக்கமாக’ உடை உடுத்துவது என்றால் என்ன? நாம் உடுத்துகிற உடை ஆடம்பரமாகவோ கவர்ச்சியாகவோ உடம்பு தெரிகிற மாதிரியோ இருக்கக் கூடாது. ‘தெளிந்த புத்தியோடு’ உடை உடுத்துவது என்றால் என்ன? நாம் அலங்கோலமாக ஏனோதானோவென்று உடை உடுத்தக் கூடாது. இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டால், நமக்குப் பிடித்த மாதிரி விதவிதமாக உடை உடுத்தலாம். அழகாக, அடக்கமாக உடை உடுத்தும்போது நம் “மீட்பரான கடவுளுடைய போதனைகளை . . .  அலங்கரிக்க முடியும்.” ‘அவரை மகிமைப்படுத்தவும்’ முடியும். (தீத்து 2:10; 1 பேதுரு 2:12) கூட்டங்களுக்கு நாம் நன்றாக உடை உடுத்தும்போது யெகோவாவின் வணக்கத்தை மற்றவர்கள் உயர்வாக மதிப்பார்கள்.

      உங்களிடம் நல்ல துணிமணி எதுவும் இல்லையே என்று நினைத்து கூட்டத்திற்கு வராமல் இருந்துவிடாதீர்கள். விலை அதிகமாக இருக்கிற துணிமணிகளைத்தான் போட்டுக்கொண்டு வர வேண்டும் என்று அவசியமில்லை. சுத்தமாக, அடக்கமாக உடை உடுத்திக்கொண்டு வந்தால் போதும்.

      • கடவுளை வணங்குவதற்குப் போகும்போது நாம் எப்படி உடை உடுத்த வேண்டும்?

      • உடை உடுத்தும்போது என்ன பைபிள் ஆலோசனைகளை மனதில் வைக்க வேண்டும்?

  • கூட்டங்களுக்கு எப்படி தயாரிக்கலாம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 9

      கூட்டங்களுக்கு எப்படி தயாரிக்கலாம்?

      ஒரு யெகோவாவின் சாட்சி கூட்டத்திற்காக தயாரிக்கிறார்

      கம்போடியா

      ஒரு யெகோவாவின் சாட்சி கூட்டத்திற்காக தயாரிக்கிறார்
      ரு யெகோவாவின் சாட்சி கூட்டத்தில் பதில் சொல்கிறார்

      உக்ரைன்

      ஒவ்வொரு வாரமும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு பைபிளிலிருந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்கள் வருவதற்கு முன்பே அந்தப் பாடத்தை நீங்கள் படித்து வைக்கிறீர்கள், இல்லையா? அதேபோல், கூட்டங்களுக்குப் போவதற்கு முன்பும் நன்றாகப் படித்துவிட்டு போங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.

      எப்போது படிப்பது, எங்கே படிப்பது என்று யோசித்துப் பாருங்கள். எந்த இடைஞ்சலும் இல்லாமல் உங்களால் எப்போது படிக்க முடியும்? காலையில் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பா? இல்லை என்றால், ராத்திரியில் பிள்ளைகள் தூங்கியதற்குப் பிறகா? ரொம்ப நேரம் படிக்க முடியவில்லை என்றாலும் கொஞ்ச நேரமாவது படியுங்கள். ஆனால், அந்த சமயத்தில் வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அமைதியான இடத்திற்குப் போய் படியுங்கள். டிவி, ரேடியோ, செல்ஃபோன் எல்லாவற்றையும் ஆஃப் செய்துவிடுங்கள். படிப்பதற்கு முன்பு ஜெபம் செய்வது ரொம்ப முக்கியம். அப்போதுதான் வேறு எதைப் பற்றியும் அநாவசியமாக யோசித்துக்கொண்டு இருக்காமல் கவனமாகப் படிக்க முடியும்.—பிலிப்பியர் 4:6, 7.

      பதில்களை குறித்து வையுங்கள், பதில் சொல்வதற்குத் தயாராக இருங்கள். சபைக் கூட்டத்தில் படிக்கப் போகிற பாடத்தின் தலைப்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அந்த தலைப்புக்கும் பாடத்தில் இருக்கிற உபதலைப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துப் பாருங்கள். அங்கே இருக்கிற படங்களை நன்றாக கவனியுங்கள். மறுபார்வை கேள்விகளையும் படியுங்கள். அப்போதுதான் இந்த பாடம் முக்கியமாக எதைப் பற்றி சொல்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும். இப்போது ஒவ்வொரு பாராவையும் படியுங்கள், கேள்விக்கு பதிலை கண்டுபிடியுங்கள். பாராவில் கொடுத்திருக்கிற வசனங்களை வாசித்து, அந்த வசனத்திற்கும் பாராவில் இருக்கிற விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துப் பாருங்கள். (அப்போஸ்தலர் 17:11) பதிலை கண்டுபிடித்த பிறகு, வரிக்கு வரி கோடு போடாமல் முக்கியமான வார்த்தைகளுக்கு மட்டும் கோடு போடுங்கள். கூட்டத்தில் நீங்கள் பதில் சொல்ல விரும்பினால் கையை உயர்த்துங்கள். உங்களை கேட்கும்போது சுருக்கமாக, சொந்த வார்த்தையில் பதில் சொல்லுங்கள்.

      ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி கூட்டத்தில் பேசுவார்கள். நீங்கள் முன்கூட்டியே படித்துவிட்டு போனால், பைபிளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம்.—மத்தேயு 13:51, 52.

      • ஒவ்வொரு வாரமும் கூட்டங்களுக்கு தயாரிப்பதற்கு என்ன செய்யலாம்?

      • கூட்டத்தில் பதில் சொல்ல எப்படி தயாரிக்கலாம்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      மேலே பார்த்தது போல், காவற்கோபுர படிப்பிற்கும் சபை பைபிள் படிப்பிற்கும் தயாரியுங்கள். அடுத்த கூட்டத்தில் பதில் சொல்வதற்கு, பைபிள் படிப்பு நடத்துகிறவரிடம் கேட்டு ஒரு பதிலை தயாரித்து வையுங்கள்.

  • குடும்ப வழிபாடு என்றால் என்ன?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 10

      குடும்ப வழிபாடு என்றால் என்ன?

      பிள்ளைகளோடு சேர்ந்து குடும்ப வழிபாட்டை செய்கிறார்கள்

      தென் கொரியா

      கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து பைபிள் படிக்கிறார்கள்

      பிரேசில்

      குடும்பமாக சேர்ந்து பைபிள் விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள்

      ஆஸ்திரேலியா

      குடும்பமாக சேர்ந்து பைபிள் விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள்

      கினி

      இஸ்ரவேலில் இருந்த குடும்பத் தலைவர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பை யெகோவா கொடுத்தார். அவர் சொல்லித்தந்த எல்லா விஷயங்களையும் குடும்பமாக அவர்கள் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார். இப்படி செய்ததால் குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு பலமான நட்பை வளர்க்க முடிந்தது. அதோடு, குடும்பத்திலும் ஒருவருக்கொருவர் அன்பாக பாசமாக இருந்தார்கள். (உபாகமம் 6:6, 7) அதனால்தான், இன்றும் நாங்கள் ஒவ்வொரு வாரமும் குடும்பமாக ஒன்றுசேர்ந்து கடவுளைப் பற்றி படிக்கிறோம். எங்களுக்கு வசதியான நேரத்தில், ஆற அமர உட்கார்ந்து பைபிள் விஷயங்களைப் பேசுகிறோம். குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு பிரயோஜனமான விஷயங்களைப் படிக்கிறோம். ஒருவேளை, குடும்பத்தோடு இல்லாமல் தனியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி கடவுளைப் பற்றி படிக்கிறோம்.

      யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துகிறோம். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:8) பைபிளைப் படித்தால் யெகோவா எப்படிப்பட்டவர், அவர் என்னென்ன செய்திருக்கிறார் என்று நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். குடும்ப வழிபாட்டின்போது முதலில் ஒவ்வொருவரும் பைபிளை சத்தமாக வாசிக்கலாம். அந்த வார வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் அட்டவணையில் கொடுத்திருக்கிற பைபிள் அதிகாரங்களை வாசிக்கலாம். ஒருவரே வாசிக்காமல், வீட்டில் இருக்கிற எல்லாரும் மாறிமாறி வாசிக்கலாம். படித்து முடித்ததும், அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி எல்லாரும் சேர்ந்து பேசலாம்.

      குடும்பத்தில் இருக்கிறவர்களோடு நெருங்கி வருவதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். குடும்பமாக சேர்ந்து பைபிளைப் படிக்கும்போது, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில், அப்பா-அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பாசம் அதிகமாகும். எல்லாரும் சந்தோஷப்படுகிற விதத்தில் குடும்ப வழிபாடு இருக்க வேண்டும். அந்த நாள் எப்போது வரும் என்று எல்லாரும் ஆசையாக காத்திருப்பது போல் இருக்க வேண்டும். எதை படிக்கலாம் என்பதை பிள்ளைகளுடைய வயதிற்கு ஏற்ற விதத்தில் தேர்ந்தெடுக்கலாம். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகையில் வருகிற கட்டுரைகளையோ jw.org வெப்சைட்டில் இருக்கிற விஷயங்களையோ பயன்படுத்தலாம். உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்சினை வந்திருந்தால், அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுக்கலாம். JW பிராட்காஸ்டிங் வெப்சைட்டில் (tv.jw.org) இருக்கும் ஒரு வீடியோவை பார்த்து, அதைப் பற்றி குடும்பமாக கலந்து பேசலாம். அந்த வார கூட்டத்தில் பாடப்போகிற பாடல்களை பழகிப் பார்க்கலாம். குடும்ப வழிபாடு முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து ஏதாவது சாப்பிடலாம்.

      வாராவாரம் குடும்ப வழிபாடு நடக்கும்போது உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாருமே பைபிளைப் படிப்பதில் சந்தோஷத்தைப் பெற முடியும். தவறாமல் நடத்துவதற்கு நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பார்.—சங்கீதம் 1:1-3.

      • குடும்ப வழிபாட்டுக்காக ஏன் நேரம் ஒதுக்குகிறோம்?

      • குடும்ப வழிபாடு சந்தோஷமாக நடப்பதற்கு அப்பா-அம்மா என்ன செய்யலாம்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      குடும்ப வழிபாட்டை எப்படியெல்லாம் நடத்தலாம் என்று சபையில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்க என்னென்ன புத்தகங்கள் சபையில் இருக்கின்றன என்று பாருங்கள்.

  • நாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 11

      நாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்?

      மெக்சிகோவில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மண்டல மாநாடு

      மெக்சிகோ

      ஜெர்மனியில் நடந்த மண்டல மாநாட்டில் புத்தகத்தை ஒரு சகோதரர் வெளியிடுகிறார்

      ஜெர்மனி

      போட்ஸ்வானாவில் நடந்த மண்டல மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள்

      போட்ஸ்வானா

      நிகாராகுவாவில் நடந்த மாநாட்டில் ஒரு இளைஞர் ஞானஸ்நானம் எடுக்கிறார்

      நிகாராகுவா

      இத்தாலியில் நடந்த மண்டல மாநாட்டில் பைபிள் நாடகத்தை நடிக்கிறார்கள்

      இத்தாலி

      இந்தப் படத்தில் இருக்கிறவர்கள் ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஏனென்றால், இவர்கள் எல்லாரும் ஒரு மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் வருடத்திற்கு மூன்று தடவை ஒன்றுகூடி வர வேண்டும் என்று கடவுள் சொல்லியிருந்தார். (உபாகமம் 16:16) அவர்களைப் போலவே நாங்களும் வருடத்திற்கு மூன்று தடவை இதேபோல் பெரிய மாநாடுகளில் சந்தோஷமாக கலந்துகொள்கிறோம். வட்டார மாநாடு வருடத்திற்கு இரண்டு தடவை நடக்கும், மண்டல மாநாடு வருடத்திற்கு ஒரு தடவை நடக்கும். வட்டார மாநாடு ஒரு நாள் மட்டும் நடக்கும், மண்டல மாநாடு மூன்று நாட்கள் நடக்கும். இந்த மாநாடுகளுக்குப் போவது எங்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

      எங்கள் மத்தியில் அன்பு அதிகமாகிறது. இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே நாங்களும் மாநாடுகளில் ஒன்றாகக் கூடிவந்து யெகோவாவை சந்தோஷமாக வணங்குகிறோம். (சங்கீதம் 26:12, அடிக்குறிப்பு; 111:1) இதுபோன்ற மாநாடுகளுக்கு மற்ற இடங்களில் இருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் யெகோவாவின் சாட்சிகள் வருவார்கள். மத்தியான நேரத்தில் நாங்கள் எல்லாரும் மாநாடு நடக்கிற இடத்திலேயே சேர்ந்து சாப்பிடுவோம். அந்த சமயத்தில் எல்லாரிடமும் நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கும், புதுப்புது நண்பர்களும் கிடைப்பார்கள். (அப்போஸ்தலர் 2:42) ‘சகோதரர்கள் எல்லாரும்’ ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுவதை நேரடியாக பார்க்க முடியும்.—1 பேதுரு 2:17.

      கடவுளுக்குப் பிடித்த விதத்தில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் ஒன்றாகக் கூடிவந்த சமயத்தில் “தங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டார்கள்.” அது அவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. (நெகேமியா 8:8, 12) நாங்களும் மாநாட்டிலிருந்து நிறைய பைபிள் விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். பைபிள் சம்பந்தமாகத்தான் எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும். பேச்சுகள், நடிப்புகள் மூலம் கடவுள் சொல்வதுபோல் நடப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். இந்தக் கஷ்டமான காலத்திலும் கடவுளுக்கு உண்மையாக வாழ்கிறவர்களுடைய அனுபவங்களை மாநாட்டில் கேட்போம். அது எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது. மண்டல மாநாடுகளில் பைபிள் நாடகங்கள் இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான நிறைய விஷயங்களை அந்த நாடகங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறோம். கடவுளுக்கு தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்கள், ஞானஸ்நானம் எடுக்க ஒவ்வொரு மாநாட்டிலும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

      • மாநாடுகளுக்குப் போவது ஏன் சந்தோஷமாக இருக்கிறது?

      • மாநாடுகளுக்கு போவது உங்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      நாங்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பை நேரில் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், அடுத்த மாநாட்டுக்கு வாருங்கள். போன வருஷம் மாநாட்டில் என்னென்ன தலைப்புகளில் பேச்சுகள் கொடுக்கப்பட்டன என்பதை உங்களுக்கு படிப்பை நடத்துபவர் சொல்லுவார். அடுத்த மாநாடு எப்போது நடக்கும் என்று காலண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாநாட்டிற்கு வர முயற்சி செய்யுங்கள்.

  • நாங்கள் எப்படி ஊழியம் செய்கிறோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 12

      நாங்கள் எப்படி ஊழியம் செய்கிறோம்?

      யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக போய் கடவுளை பற்றி சொல்கிறார்கள்

      ஸ்பெயின்

      யெகோவாவின் சாட்சி ஒருவர் பார்க்கில் ஊழியம் செய்கிறார்

      பெலாரூஸ்

      ஒருவரிடம் ஃபோனில் யெகோவாவின் சாட்சி கடவுளை பற்றி பேசுகிறார்

      ஹாங்காங்

      யெகோவாவின் சாட்சிகள் பொது ஊழியம் செய்கிறார்கள்

      பெரு

      இயேசு இறப்பதற்கு முன்பு, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று சொன்னார். (மத்தேயு 24:14) இந்த வேலையை உலகம் முழுவதும் நாங்கள் எப்படி செய்கிறோம்? இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது எப்படி ஊழியம் செய்தாரோ அதேபோல்தான் நாங்களும் செய்கிறோம்.—லூக்கா 8:1.

      ஜனங்களை வீட்டில் போய் பார்க்கிறோம். வீடு வீடாகப் போய் கடவுளுடைய ஆட்சியைப் பற்றி பேச இயேசு சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 10:11-13; அப்போஸ்தலர் 5:42; 20:20) எந்த இடத்தில் ஊழியம் செய்யச் சொன்னாரோ அந்த இடத்தில்தான் சீடர்கள் ஊழியம் செய்தார்கள். (மத்தேயு 10:5, 6; 2 கொரிந்தியர் 10:13) இன்றும் அவர்களைப் போலவே நாங்கள் ஊழியத்தை ஒழுங்காக செய்கிறோம். எங்கள் சபைகளுக்குப் பிரித்து கொடுத்த இடத்தில் மட்டும்தான் ஊழியம் செய்கிறோம். இப்படி செய்வதால்தான் இயேசு சொன்னது போல் ‘மக்களிடம் பிரசங்கிக்கவும் முழுமையாக சாட்சி கொடுக்கவும்’ முடிகிறது.—அப்போஸ்தலர் 10:42.

      ஜனங்களை எங்கெல்லாம் பார்கிறோமோ அங்கெல்லாம் பேசுகிறோம். இயேசு எங்கெல்லாம் ஜனங்களைப் பார்த்தாரோ அங்கெல்லாம் பேசினார். உதாரணமாக, கடற்கரையில் இருந்தவர்களிடம், கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவர்களிடம் இயேசு பேசினார். (மாற்கு 4:1; யோவான் 4:5-15) இன்று நாங்களும் கடையில், பூங்காவில், தெருவில்... என ஜனங்களை எங்கெல்லாம் பார்க்கிறோமோ அங்கெல்லாம் பைபிளைப் பற்றி பேசுகிறோம். ஃபோனிலும் பைபிளைப் பற்றி பேசுகிறோம். அக்கம்பக்கத்தில் குடியிருக்கிறவர்கள், எங்களோடு வேலை செய்கிறவர்கள், கூட படிக்கிறவர்கள், சொந்தக்காரர்கள்... என எல்லாரிடமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசுகிறோம். இதனால், கடவுள் சொல்லியிருக்கிற “மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை” உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான ஜனங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது.—சங்கீதம் 96:2.

      கடவுளுடைய ஆட்சியைப் பற்றியும் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கப் போகிற நல்ல வாழ்க்கையைப் பற்றியும் யாரிடம் முதலில் சொல்ல ஆசைப்படுகிறீர்கள்? நீங்கள் தெரிந்துகொண்ட விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

      • எந்த செய்தியை எல்லாருக்கும் சொல்ல வேண்டும்?

      • யெகோவாவின் சாட்சிகள் இன்று எப்படி ஊழியம் செய்கிறார்கள்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      பைபிளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறவரிடம் கேட்டால், எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்.

  • யாரைப் பயனியர் என்று சொல்கிறோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 13

      யாரைப் பயனியர் என்று சொல்கிறோம்?

      முழு நேர ஊழியர்கள் ஊழியம் செய்கிறார்கள்

      கனடா

      முழு நேர ஊழியர்கள் பிரசங்க வேலையை செய்கிறார்கள்

      வீட்டுக்கு வீடு ஊழியம்

      பயனியர் ஊழியம் செய்பவர் பைபிள் படிப்பு நடத்துகிறார்

      பைபிள் படிப்பு

      பயனியர் ஊழியம் செய்பவர் பைபிளை படித்துக் கொண்டிருக்கிறார்

      தனிப்பட்ட படிப்பு

      ஒரு வேலையை செய்வதில் எல்லாருக்கும் முன்னோடியாக இருக்கிற ஒருவரை “பயனியர்” என்று சொல்கிறோம். இயேசுவை ஒரு பயனியர் என்று சொல்லலாம். ஏனென்றால், பிரசங்க வேலையை செய்வதில் அவர் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றி மக்களுக்கு சொல்லவும் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றவும் இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். (மத்தேயு 20:28) அவரைப் போலவே நாங்களும் ‘சீஷராக்கும்’ வேலையில் நிறைய நேரம் செலவு செய்கிறோம். (மத்தேயு 28:19, 20) யெகோவாவின் சாட்சிகளில் சிலர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். பயனியர் ஊழியம் என்றால் என்ன?

      முழு நேரமாக ஊழியம் செய்கிறவர்கள்தான் பயனியர்கள். யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே கடவுளுடைய ஆட்சியைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறார்கள். அவர்களில் சிலர், ஒழுங்கான பயனியர்களாக, அதாவது, ஒவ்வொரு மாதமும் 70 மணி நேரம் ஊழியம் செய்கிறார்கள். இதை செய்வதற்காக நிறையப் பேர் பகுதி நேர வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 130 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாகவோ ஊழியம் செய்கிறவர்களை விசேஷ பயனியர்கள் என்று சொல்கிறோம். ஊழியம் செய்வதற்கு எந்த இடத்தில் நிறையப் பேர் தேவைப்படுகிறார்களோ அங்கே போய் இவர்கள் ஊழியம் செய்கிறார்கள். இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறார்கள். இவர்களுடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு ஊழியம் செய்கிறார்கள். (மத்தேயு 6:31-33; 1 தீமோத்தேயு 6:6-8) முழுநேரமாக பயனியர் ஊழியம் செய்ய முடியாதவர்கள் துணை பயனியர் ஊழியம் செய்கிறார்கள். மாதத்திற்கு 30 அல்லது 50 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள்.

      பயனியர்கள் கடவுள்மீதும் ஜனங்கள்மீதும் இருக்கிற அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்ததைப் பார்த்து இயேசு ரொம்ப பரிதாபப்பட்டார். (மாற்கு 6:34) இன்றும் ஜனங்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களை சொன்னால், அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும், எதிர்காலத்தைப் பற்றி பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் ஜனங்கள்மீது நிறைய அன்பு வைத்திருப்பதால் அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் பயன்படுத்தி கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். (மத்தேயு 22:39; 1 தெசலோனிக்கேயர் 2:8) இதனால், பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். கடவுள்மீது அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கை அதிகமாகிறது, அவரோடு இருக்கிற நட்பும் பலப்படுகிறது.—அப்போஸ்தலர் 20:35.

      • பயனியர் ஊழியம் என்றால் என்ன?

      • ஏன் சிலர் முழுநேரமாக பயனியர் ஊழியம் செய்கிறார்கள்?

  • பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 14

      பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?

      முழு நேர ஊழியர்கள் பொது ஊழியம் செய்கிறார்கள்

      அமெரிக்கா

      உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி வகுப்பில் ஒரு மாணவர் படிக்கிறார்
      மிஷனரி சேவைக்காக மாணவர்கள் தயாராகிறார்கள்

      கிலியட் பள்ளி, பேட்டர்சன், நியு யார்க்

      மிஷனரி தம்பதியினர் பனாமா நாட்டில் ஊழியம் செய்கிறார்கள்

      பனாமா

      கடவுள் சொல்வதை நன்றாக கற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். முழுநேரமாக ஊழியம் செய்பவர்களுக்கு விசேஷ பயிற்சி பள்ளிகளை நடத்துகிறார்கள். ‘ஊழியத்தை முழுமையாகச் செய்ய’ இந்தப் பள்ளிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றன.—2 தீமோத்தேயு 4:5.

      பயனியர் ஊழியப் பள்ளி. ஒழுங்கான பயனியர் ஊழியத்தை, ஒரு வருடத்திற்கும் அதிகமாக செய்கிறவர்கள் இந்தப் பள்ளியில் கலந்துகொள்ளலாம். ஏதாவது ஒரு ராஜ்ய மன்றத்தில் இந்தப் பள்ளி ஆறு நாட்களுக்கு நடக்கும். வீட்டுக்கு வீடு ஊழியம், மறுசந்திப்பு, பைபிள் படிப்பு... இதையெல்லாம் இன்னும் நன்றாகச் செய்வதற்கு இந்தப் பள்ளி பயனியர்களுக்கு உதவுகிறது. யெகோவாவிடம் உள்ள நட்பை பலப்படுத்துவதற்கும் ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கும் இந்தப் பள்ளி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

      ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி. இது இரண்டு மாதத்துக்கு நடக்கும். சொந்த ஊரை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு போய் ஊழியம் செய்ய தயாராக இருக்கிற பயனியர்களுக்காக இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது. 23 முதல் 65 வயது வரை உள்ள தம்பதிகளும் கல்யாணம் ஆகாத ஆண்களும் பெண்களும் இதில் கலந்துகொள்ளலாம். பிரசங்க வேலையை செய்ய அதிகமான ஆட்கள் தேவைப்படுகிற இடத்திற்குப் போக இவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் தலைசிறந்த நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவைப் போலவே “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று சொல்கிறார்கள். (ஏசாயா 6:8; யோவான் 7:29) அவர்கள் போகிற இடத்தில் வசதி குறைவாக இருக்கலாம். அங்கே இருக்கிற ஜனங்களுடைய பழக்கவழக்கம், சீதோஷ்ணம், சாப்பாடு... எல்லாமே வித்தியாசமாக இருக்கலாம். ஒருவேளை புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். புது இடத்தில் போய் ஊழியம் செய்வதற்கு நிறைய நல்ல குணங்கள் தேவைப்படும். அதையெல்லாம் வளர்த்துக்கொள்ள இந்தப் பள்ளி உதவியாக இருக்கும். இன்னும் நிறையப் பொறுப்புகளை எடுத்து செய்வதற்கு யெகோவா அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.

      உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி. “கிலியட்” என்ற எபிரெய வார்த்தைக்கு ‘சாட்சிக் குவியல்’ என்று அர்த்தம். 1943-ல் இந்தப் பள்ளி ஆரம்பித்ததிலிருந்து இது வரைக்கும் கிட்டத்தட்ட 8,000 பேர் மிஷனரிகளாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் “பூமியெங்கும்” சென்று பெரியளவில் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 13:47) உதாரணத்துக்கு, மிஷனரிகள் முதல் தடவையாக பெரு நாட்டிற்கு வந்தபோது, அங்கே ஒரு சபைகூட இல்லை. ஆனால், இன்று அந்த நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான சபைகள் இருக்கின்றன. அதேபோல், மிஷனரிகள் முதல் முதலில் ஜப்பானுக்கு வந்தபோது அங்கே 10 சாட்சிகள்கூட இல்லை. ஆனால் இன்று இரண்டு லட்சம் சாட்சிகள் அங்கு இருக்கிறார்கள். இந்தப் பள்ளியில் கலந்துகொள்கிறவர்கள் 5 மாதத்திற்கு பைபிளைப் பற்றி ஆழமாக படிக்கிறார்கள். விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், கிளை அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள், வட்டார கண்காணியாக சேவை செய்கிறவர்கள் இந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலையை இன்னும் முழுமையாக செய்வதற்கு இவர்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

      • பயனியர் ஊழியப் பள்ளி ஏன் நடத்தப்படுகிறது?

      • யாருக்காக ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி நடத்தப்படுகிறது?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்