உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 6/15 பக். 32
  • கல்லையும் கரைத்த கருணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கல்லையும் கரைத்த கருணை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஒழுக்க தராதரங்களின்படி வாழ தீர்மானமாயிருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 6/15 பக். 32

கல்லையும் கரைத்த கருணை

நெதர்லாந்தில் ஸார்ஷா—மனோ தம்பதியர் ரியா என்ற வயதான ஒரு பெண்மணியை ஊழியத்தில் சந்தித்தார்கள். ஆனால், அவர் சிடுசிடுவென்றே இருந்தார். அவரிடம் பேசப் பேசத்தான்... அவர் தன் முதல் கணவரையும், இரண்டாவது கணவரையும், ஒரு மகனையும் மரணத்தில் பறிகொடுத்திருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, மூட்டுவலியால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. ஸார்ஷாவும் மனோவும் பேசப் பேச அவர் கொஞ்சம் கொஞ்சமாகச் சாந்தமானார். ஆனால், கடைசிவரை அவர்களிடம் நட்பு பாராட்டவே இல்லை.

‘அந்த அம்மாவை தனிமையும் விரக்தியும் வாட்டுதுன்னு நெனைக்கிறேன், அதனால அவங்களுக்கு ஒரு பூச்செண்டு வாங்கிட்டுப் போய் கொடுக்கலாமா?’ என்று மனோவிடம் ஸார்ஷா கேட்க... மனோவும் சரி என்று சொல்ல... அந்தப் பெண்மணியிடம் பூச்செண்டோடு போய் நின்றார்கள். அதைப் பார்த்து அந்தப் பெண்மணி ஆனந்த அதிர்ச்சியடைந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் அவருக்கு நேரமில்லாததால் அவர்களை வேறொரு நாள் வரச் சொன்னார். அவர் சொன்ன நாளில் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. மீண்டும் மீண்டும் வெவ்வேறு சமயங்களில் சென்றும் அவரைப் பார்க்க முடியவில்லை. தங்களைப் பார்க்க அவருக்கு விருப்பமில்லையோ என்று ஸார்ஷாவும் மனோவும் நினைத்தார்கள்.

கடைசியில் ஒருவழியாக ஸார்ஷா அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டில் சந்தித்தார். அவர்களை வரச் சொல்லிவிட்டு வீட்டில் இல்லாமல் போனதற்காக அவர் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆஸ்பத்திரியில் இருந்ததாலேயே அவர்களைப் பார்க்க முடியவில்லை என்றும் சொன்னார். “நீங்க என்கிட்ட பேசிட்டுப் போனதிலிருந்து தெனமும் பைபிளைப் படிக்க ஆரம்பிச்சிட்டேன்!” என்றார். அது... சுவாரசியமான ஓர் உரையாடலுக்கு வழி திறந்தது. அவரோடு ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

விரக்தியிலும் வேதனையிலும் இருந்த ரியா பைபிளைப் படிக்கப் படிக்கக் கனிவுள்ளவராக மாறினார். அவருடைய முகத்தில் சந்தோஷம் களைக்கட்டியது. வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் தான் கற்றுக்கொண்ட சத்தியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். உடல்நிலை காரணமாக எப்போதாவதுதான் அவரால் கூட்டங்களுக்குப் போக முடிந்தது. என்றாலும், சகோதர சகோதரிகள் அவரை வந்து சந்தித்தபோது அதிக ஆனந்தம் அடைந்தார். 82-வது வயதில் காலடி எடுத்துவைத்த அதே நாளில் ஒரு வட்டார மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தார்.

சில மாதங்கள் கழித்து அவர் இறந்துபோனார். அப்போது அவர் எழுதிய கவிதை ஒன்று கிடைத்தது. முதுமை தரும் தனிமையையும்... அந்தத் தனிமை தரும் வலியையும்... கருணை தரும் ஆறுதலையும்... வார்த்தைகளில் வடித்திருந்தார். “அந்தக் கவிதைய படிச்சிட்டு என் கண்ல தண்ணியே வந்திடுச்சு. அவருக்குக் கருணை காட்ட யெகோவா எங்களை பயன்படுத்தியதற்கு நான் ரொம்பவே சந்தோஷப்படறேன்” என்கிறார் மனோ.

அப்படிப்பட்ட அன்பையும் கருணையையும் காட்டுவதற்கு... அன்பின் உருவாகவும் கருணையின் வடிவாகவும் உள்ள யெகோவாவின் முன்மாதிரி நமக்கு உத்வேகம் அளிக்கிறது. (எபே. 5:1, 2) “கருணை” காட்டுவது மூலம் ‘கடவுளுடைய ஊழியர்கள் என்று நம்மைச் சிபாரிசு செய்தால்’ ஊழியத்தில் நல்ல பலன்களைப் பெறுவோம்.—2 கொ. 6:6, 8.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்