உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 4/1 பக். 16
  • பைபிள் தரும் பதில்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் தரும் பதில்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரிப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • ‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ளவற்றைக் கூட்டிச்சேர்த்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 4/1 பக். 16

பைபிள் தரும் பதில்கள்

நாம ஏன் இயேசுவின் மரணத்தை நினைச்சு பார்க்கணும்?

பூஞ்சோலை பூமியில எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க

இயேசு இறந்ததுனால நமக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் கிடைக்கப்போகுது?​—ஏசாயா 25:8; 33:24

மனுஷனை எந்த குறையும் இல்லாம கடவுள் படைச்சார்; வியாதியும் மரணமும் இல்லாத வாழ்க்கையை கொடுத்தார். (ஆதியாகமம் 1:31) ஆனா, முதல் மனுஷன் ஆதாம், பாவம் செஞ்சதுனால நாம எல்லாருமே பாவிகளாயிட்டோம், அதனால கஷ்டப்படுறோம். இயேசு நமக்காக உயிரை கொடுத்ததுனாலதான் நமக்கு பாவத்தில இருந்தும் மரணத்தில இருந்தும் விடுதலை கிடைக்கப்போகுது. கடவுள் ஆசைப்பட்ட மாதிரியே நாம சந்தோஷமா வாழப்போறோம். அதனால, இயேசுவுடைய மரண நாளை நாம நினைச்சு பார்க்கணும்; அது ரொம்ப முக்கியமான நாள்.—மத்தேயு 20:28; ரோமர் 6:23-ஐ வாசிங்க.

கடவுள் நம்ம மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கிறார். அதனாலதான் அவருடைய மகனையே நமக்காக கொடுத்தார். (1 யோவான் 4:9, 10) இயேசு, தன்னோட மரணநாளை நினைச்சு பார்க்கணும்னு சீடர்கள்கிட்ட சொன்னார். அந்த நாள்ல, ரொட்டியையும் திராட்சமதுவையும் பயன்படுத்தி எளிமையான ஒரு நிகழ்ச்சியை செய்ய சொன்னார். கடவுள்மேலயும் இயேசுமேலயும் அன்பு இருந்தா நாமளும் இந்த நிகழ்ச்சியில ஒவ்வொரு வருஷமும் கலந்துக்குவோம்.—லூக்கா 22:19, 20-ஐ வாசிங்க.

ரொட்டியையும் திராட்சமதுவையும் யாரெல்லாம் சாப்பிடலாம்?

சாகுறதுக்கு முந்தின இரவு, சீடர்களோடு இயேசு ஒரு ஒப்பந்தம் செஞ்சார். (மத்தேயு 26:26-28) அந்த ஒப்பந்தம் செஞ்சதுனால, சிலருக்கு பரலோகத்துக்கு போறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. பரலோகத்துக்கு போறவங்க, இயேசுவோட சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்வாங்க. ஒவ்வொரு வருஷமும் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான மக்கள் வருவாங்க. ஆனா, அந்த ஒப்பந்தத்தில இருக்கிறவங்கதான் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவாங்க.—வெளிப்படுத்துதல் 5:10-ஐ வாசிங்க.

இயேசுவோட யாரெல்லாம் ஆட்சி செய்யணும்னு, சுமார் 2,000 வருஷமா யெகோவா தேர்ந்தெடுத்திட்டு இருக்கிறார். (லூக்கா 12:32) அவங்க மட்டும்தான் பரலோகத்துக்கு போவாங்க. மத்தவங்க எல்லாரும் பூமியில வாழ்வாங்க.—வெளிப்படுத்துதல் 7:4, 9, 17-ஐ வாசிங்க. (w15-E 03/01)

இன்னும் நிறைய தெரிஞ்சுக்க, இந்த புத்தகத்தில 5-வது அதிகாரத்தை பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்

www.pr2711.com வெப்சைட்லயும் கிடைக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்