பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 6-7
தாராளமாக அளந்து கொடுங்கள்
தாராள குணமுள்ள ஒருவர், மற்றவர்களுக்கு உதவவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் தன்னிடம் இருக்கும் நேரம், சக்தி, வளம் என எல்லாவற்றையுமே சந்தோஷமாக செலவு செய்வார்.
“கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்பதற்கான கிரேக்க வினைச்சொல், தொடர்ச்சியாக செய்யப்படும் ஒரு செயலைக் குறிக்கிறது
கொடுப்பதை நாம் பழக்கமாக்கிக்கொள்ளும்போது, மற்றவர்கள் ‘அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து நம்முடைய மடியில் போடுவார்கள்.’ இந்த வார்த்தைகள், சில வியாபாரிகளின் மத்தியில் இருந்த வழக்கத்தைக் குறிக்கலாம். தாங்கள் விற்ற பொருள்களை வாடிக்கையாளர்களுடைய மேலங்கியின் மடிப்புக்குள் போடுவது அன்றைய வழக்கமாக இருந்தது