பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 18-19
சத்தியத்தைப் பற்றி இயேசு சாட்சி கொடுத்தார்
கடவுளுடைய விருப்பங்களைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து இயேசு சாட்சி கொடுத்தார்
சொல்லில்: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை அவர் ஆர்வமாகப் பிரசங்கித்தார்
செயலில்: கடவுள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் உண்மை என்பதை அவருடைய வாழ்க்கை நிரூபித்துக் காட்டியது
இயேசுவின் சீஷர்களாகிய நாமும் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறோம்
சொல்லில்: கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை, கேலி கிண்டலுக்கு மத்தியிலும் நாம் ஆர்வமாகப் பிரசங்கிக்கிறோம்
செயலில்: நடுநிலைமையைக் காத்துக்கொள்வதன் மூலமும், கடவுளுக்குப் பிரியமாக நடந்துகொள்வதன் மூலமும் இயேசுவின் ஆட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்