ஜனவரி 19-25
ஏசாயா 24-27
பாட்டு 159; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “இவர்தான் நம் கடவுள்!”
(10 நிமி.)
நம்முடைய கடவுளான யெகோவாவை நினைத்துப் பெருமைப்பட நமக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன (ஏசா 25:9; cl பக். 15 பாரா 21)
புதிய உலகத்தில் நமக்கு விதவிதமான உணவையும் மற்ற நல்ல நல்ல விஷயங்களையும் யெகோவா அள்ளிக் கொடுக்கப்போகிறார் (ஏசா 25:6; w24.12 பக். 6 பாரா 14)
நமக்கு முடிவில்லாத வாழ்வையும் கொடுக்கப்போகிறார் (ஏசா 25:7, 8; w25.01 பக். 28-29 பாரா. 11-12)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வாரம், யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றி நான் யாரிடமெல்லாம் சொல்லலாம்?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 24:2—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இந்த வசனம் ஏன் கவிதை நடையில் கொடுக்கப்பட்டிருக்கிறது? (w15 12/15 பக். 15 பாரா 3–பக். 17 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 25:1-9 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) பொது ஊழியம். நீங்கள் பேசும் ஒருவருக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். அதை jw.org-ல் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று காட்டுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) நடிப்பு. ijwbq கட்டுரை 160—பொருள்: இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்? (th படிப்பு 3)
பாட்டு 144
7. மருத்துவ சிகிச்சைக்காக அல்லது அறுவை சிகிச்சைக்காக தயாராகும்போது யெகோவாவைச் சார்ந்திருங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
தன்னை “முழுமையாகச் சார்ந்திருக்கிறவர்களை” யெகோவா பாதுகாக்கிறார். (ஏசாயா 26:3-ஐ வாசியுங்கள்.) மருத்துவ அவசரநிலைக்கு முன்கூட்டியே தயாராகும்போது, யெகோவா செய்திருக்கிற ஏற்பாடுகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரை முழுமையாகச் சார்ந்திருப்பதைக் காட்ட முடியும்.
மருத்துவ அவசரநிலைக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
என்ன மூன்று ஏற்பாடுகள் மருத்துவ அவசரநிலைக்குத் தயாராக நமக்கு உதவி செய்யும்?
மருத்துவ தகவல் ஆவணங்கள்a எப்படி நமக்கு உதவி செய்கின்றன?
மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவை எப்போது தொடர்புகொள்வது சரியாக இருக்கும்?
இந்த அன்பான ஏற்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நம்மை “எப்போதும் சமாதானத்தோடு” வாழ வைப்பதாக ஏசாயா 26:3-ல் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக, நமக்கு உடல்நலப் பிரச்சினைகளே வராது என்று அர்த்தமில்லை. உடல்நலப் பிரச்சினைகள் வந்தாலும், அவருடைய அமைப்பு மூலமாக அவர் செய்திருக்கிற அன்பான ஏற்பாடுகள் நமக்கு மன சமாதானத்தையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும்.
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 54-55
முடிவான குறிப்புகள் (3 நிமி.) | ஜெபம்
a தேவைப்படும் சமயத்தில் இந்த ஆவணங்களை நீங்கள் மூப்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்: கர்ப்பிணி பெண்களுக்கான தகவல்கள் (S-401), அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி தேவைப்படும் நோயாளிகளுக்கான தகவல்கள் (S-407), மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பிள்ளையின் பெற்றோர்களுக்கான தகவல் (S-55).