உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 ஜனவரி பக். 8-9
  • ஜனவரி 26-பிப்ரவரி 1

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 26-பிப்ரவரி 1
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 ஜனவரி பக். 8-9

ஜனவரி 26–பிப்ரவரி 1

ஏசாயா 28-29

பாட்டு 28; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. உங்கள் உதட்டாலும் இதயத்தாலும் யெகோவாவைப் புகழுங்கள்

(10 நிமி.)

ஏசாயாவின் காலத்தில் இருந்த மதத் தலைவர்கள் வெளிவேஷம் போட்டதற்காக ஏசாயா அவர்களைக் கண்டித்தார் (ஏசா 29:13; ip-1 பக். 299 பாரா 23)

ஏசாயாவின் இந்த வார்த்தைகளை முதல் நூற்றாண்டில் இருந்த மதத் தலைவர்களிடம் இயேசு சொன்னார் (மத் 15:7-9; w21.05 பக். 9 பாரா 7)

‘மனப்பூர்வமாகக் கீழ்ப்படிய’ வேண்டும் என்று யெகோவா தன்னை வணங்குகிறவர்களிடம் எதிர்பார்க்கிறார் (ரோ 6:17; w24.06 பக். 10 பாரா 8)

படங்களின் தொகுப்பு: 1. கூட்டத்தில் ஒரு சகோதரர் மேடையிலிருந்து பேச்சு கொடுக்கிறார். ஒரு குடும்பம் சந்தோஷமாக குடும்ப வழிபாடு செய்யும் ஒரு படம் அவருக்குப் பின்னால் இருக்கும் டிவியில் காட்டப்படுகிறது. 2. பேச்சுக் கொடுத்த அந்தச் சகோதரர் தன் குடும்பத்தோடு சந்தோஷமாக குடும்ப வழிபாடு செய்கிறார்.

நாம் சொல்லிக்கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி வாழும்போது யெகோவா அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 29:1—எருசலேமுக்கு அரியேல் என்ற பெயர் ஏன் பொருத்தமாக இருக்கிறது? (it “அரியேல்” பாரா 1; it “அரியேல்” எண் 3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 29:13-24 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் பேசும் ஒருவருக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள், அவரை மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தித்து அவர் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. சீஷர்களை உருவாக்குவது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 3)

7. சீஷர்களை உருவாக்குவது

(4 நிமி.) lff பாடம் 18 குறிப்புகள் 6-7 (lmd பாடம் 11 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 89

8. ‘நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’

(8 நிமி.) கலந்துபேசுங்கள்.

‘நான் எப்போதும் யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவா 8:29) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ நம்மால் முடிந்ததையெல்லாம் செய்கிறோம். இப்படிச் செய்வது எப்போதும் சுலபமாக, வசதியாக இருக்காது என்பது உண்மைதான். ஆனால், அது எப்போதும் நமக்கு நன்மையைத் தரும்.

படங்களின் தொகுப்பு: “யெகோவாவுக்கு பிடித்த மாதிரி செய்யுங்கள்” வீடிHS-.25யோவில் வரும் காட்சிகள். 1. ஜோல் ஆடெம்ஸ். 2. கேரிக் டியஸ். 3. லாஷ் கார்ல்சென்.

யெகோவாவுக்கு பிடித்த மாதிரி செய்யுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • துன்புறுத்தல் வரும்போது... ஒழுக்கக்கேடான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை வரும்போது... பெருமை வரும்போது... நாம் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த வீடியோவிலிருந்து கற்றுக்கொண்டீர்கள்?

9. சபைத் தேவைகள்

(7 நிமி.)

10. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடம் 56, பகுதி 10—முன்னுரை, பாடம் 57

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 55; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்