உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 14
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்

      • அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-6)

      • ஏதோமுடனும் இஸ்ரவேலுடனும் போர் (7-14)

      • இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் இறந்துபோகிறார் (15, 16)

      • அமத்சியா இறந்துபோகிறார் (17-22)

      • இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (23-29)

2 ராஜாக்கள் 14:1

இணைவசனங்கள்

  • +2ரா 13:10

2 ராஜாக்கள் 14:2

இணைவசனங்கள்

  • +2நா 25:1-4

2 ராஜாக்கள் 14:3

இணைவசனங்கள்

  • +1ரா 15:5
  • +2நா 24:2

2 ராஜாக்கள் 14:4

இணைவசனங்கள்

  • +1ரா 15:14
  • +2ரா 12:1, 3

2 ராஜாக்கள் 14:5

இணைவசனங்கள்

  • +2ரா 12:20; 2நா 24:25

2 ராஜாக்கள் 14:6

இணைவசனங்கள்

  • +உபா 24:16

2 ராஜாக்கள் 14:7

இணைவசனங்கள்

  • +2ரா 8:20
  • +2சா 8:13; 1நா 18:12
  • +2நா 25:11, 12

2 ராஜாக்கள் 14:8

இணைவசனங்கள்

  • +2நா 25:17-19

2 ராஜாக்கள் 14:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அரண்மனையிலேயே.”

இணைவசனங்கள்

  • +2ரா 14:7

2 ராஜாக்கள் 14:11

இணைவசனங்கள்

  • +2நா 25:15, 16
  • +யோசு 15:10, 12; 21:8, 16; 2நா 25:20-24

2 ராஜாக்கள் 14:12

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கூடாரங்களுக்கு.”

2 ராஜாக்கள் 14:13

அடிக்குறிப்புகள்

  • *

    சுமார் 584 அடி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +நெ 8:16; 12:38, 39
  • +எரே 31:38; சக 14:10

2 ராஜாக்கள் 14:16

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”

  • *

    அதாவது, “இரண்டாம் யெரொபெயாம்.”

இணைவசனங்கள்

  • +2ரா 10:35; 13:9
  • +ஓசி 1:1; ஆமோ 1:1; 7:10

2 ராஜாக்கள் 14:17

இணைவசனங்கள்

  • +2ரா 13:10
  • +2ரா 14:1
  • +2நா 25:25-28

2 ராஜாக்கள் 14:19

இணைவசனங்கள்

  • +2ரா 12:20

2 ராஜாக்கள் 14:20

இணைவசனங்கள்

  • +1ரா 2:10

2 ராஜாக்கள் 14:21

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “யெகோவா உதவி செய்தார்.” 2ரா 15:13; 2நா 26:1-23; ஏசா 6:1; சக 14:5 ஆகிய வசனங்களில் உசியா என்று அழைக்கப்படுகிறார்.

இணைவசனங்கள்

  • +2நா 26:1
  • +மத் 1:8
  • +2ரா 15:1, 2

2 ராஜாக்கள் 14:22

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அவருடைய அப்பா அமத்சியா.”

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”

இணைவசனங்கள்

  • +உபா 2:8; 1ரா 9:26; 2ரா 16:6
  • +2நா 26:2

2 ராஜாக்கள் 14:23

இணைவசனங்கள்

  • +ஓசி 1:1; ஆமோ 1:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 153

2 ராஜாக்கள் 14:24

இணைவசனங்கள்

  • +1ரா 12:28-30; 13:34; சங் 106:20

2 ராஜாக்கள் 14:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “காமாத்தின் நுழைவாசலிலிருந்து.”

  • *

    அதாவது, “உப்புக் கடல்; சவக் கடல்.”

இணைவசனங்கள்

  • +எண் 13:21; 34:2, 7, 8
  • +உபா 3:16, 17
  • +யோனா 1:1; மத் 12:39
  • +யோசு 19:10, 13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 108-109

    காவற்கோபுரம்,

    4/1/2009, பக். 28

    “வேதாகமம் முழுவதும்”, பக். 153

2 ராஜாக்கள் 14:26

இணைவசனங்கள்

  • +யாத் 3:7; நியா 10:16; சங் 106:43, 44

2 ராஜாக்கள் 14:27

இணைவசனங்கள்

  • +எரே 31:20
  • +2ரா 13:4, 5

2 ராஜாக்கள் 14:28

இணைவசனங்கள்

  • +2சா 8:6
  • +2நா 8:3

2 ராஜாக்கள் 14:29

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”

இணைவசனங்கள்

  • +2ரா 15:8

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 ரா. 14:12ரா 13:10
2 ரா. 14:22நா 25:1-4
2 ரா. 14:31ரா 15:5
2 ரா. 14:32நா 24:2
2 ரா. 14:41ரா 15:14
2 ரா. 14:42ரா 12:1, 3
2 ரா. 14:52ரா 12:20; 2நா 24:25
2 ரா. 14:6உபா 24:16
2 ரா. 14:72ரா 8:20
2 ரா. 14:72சா 8:13; 1நா 18:12
2 ரா. 14:72நா 25:11, 12
2 ரா. 14:82நா 25:17-19
2 ரா. 14:102ரா 14:7
2 ரா. 14:112நா 25:15, 16
2 ரா. 14:11யோசு 15:10, 12; 21:8, 16; 2நா 25:20-24
2 ரா. 14:13நெ 8:16; 12:38, 39
2 ரா. 14:13எரே 31:38; சக 14:10
2 ரா. 14:162ரா 10:35; 13:9
2 ரா. 14:16ஓசி 1:1; ஆமோ 1:1; 7:10
2 ரா. 14:172ரா 13:10
2 ரா. 14:172ரா 14:1
2 ரா. 14:172நா 25:25-28
2 ரா. 14:192ரா 12:20
2 ரா. 14:201ரா 2:10
2 ரா. 14:212நா 26:1
2 ரா. 14:21மத் 1:8
2 ரா. 14:212ரா 15:1, 2
2 ரா. 14:22உபா 2:8; 1ரா 9:26; 2ரா 16:6
2 ரா. 14:222நா 26:2
2 ரா. 14:23ஓசி 1:1; ஆமோ 1:1
2 ரா. 14:241ரா 12:28-30; 13:34; சங் 106:20
2 ரா. 14:25எண் 13:21; 34:2, 7, 8
2 ரா. 14:25உபா 3:16, 17
2 ரா. 14:25யோனா 1:1; மத் 12:39
2 ரா. 14:25யோசு 19:10, 13
2 ரா. 14:26யாத் 3:7; நியா 10:16; சங் 106:43, 44
2 ரா. 14:27எரே 31:20
2 ரா. 14:272ரா 13:4, 5
2 ரா. 14:282சா 8:6
2 ரா. 14:282நா 8:3
2 ரா. 14:292ரா 15:8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 ராஜாக்கள் 14:1-29

2 ராஜாக்கள்

14 இஸ்ரவேலின் ராஜா யோவாகாசின் மகன் யோவாஸ்+ ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவான யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானார். 2 அப்போது, அவருக்கு 25 வயது. அவர் எருசலேமில் 29 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் யொவதானாள், அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.+ 3 யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களை அமத்சியா செய்துவந்தார்; ஆனால், தன்னுடைய மூதாதையான தாவீது செய்த அளவுக்குச் செய்யவில்லை.+ தன்னுடைய அப்பாவான யோவாசைப் போலவே எல்லா காரியங்களையும் செய்தார்.+ 4 இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை;+ மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.+ 5 ஆட்சி அதிகாரம் முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், ராஜாவாக இருந்த தன் அப்பாவைக் கொன்றுபோட்ட ஊழியர்களை அமத்சியா கொன்றுபோட்டார்.+ 6 ஆனால், அந்தக் கொலைகாரர்களின் மகன்களைக் கொல்லவில்லை. ஏனென்றால், மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில், “பிள்ளைகள் செய்த பாவத்துக்காக அப்பாவுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது, அப்பா செய்த பாவத்துக்காகப் பிள்ளைகளுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது. ஒருவன் செய்த பாவத்துக்காக அவனுக்கு மட்டுமே மரண தண்டனை கொடுக்க வேண்டும்”+ என்று எழுதப்பட்டிருந்த யெகோவாவின் கட்டளைக்கு அவர் கீழ்ப்படிந்தார். 7 ஏதோமைச்+ சேர்ந்த 10,000 வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில்+ கொன்றுபோட்டார். அந்தப் போரில் சாலா நகரத்தைக் கைப்பற்றினார்.+ அது இந்நாள்வரை யோக்தெயேல் என்று அழைக்கப்படுகிறது.

8 பின்பு, இஸ்ரவேலின் ராஜாவான யெகூவின் பேரனும் யோவாகாசின் மகனுமான யோவாசிடம் அமத்சியா தூதுவர்களை அனுப்பி, “போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதலாம் வா”+ என்று சொன்னார். 9 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் யூதாவின் ராஜாவான அமத்சியாவுக்கு இப்படிச் செய்தி அனுப்பினார்: “லீபனோனில் இருக்கிற முட்செடி அங்கிருக்கிற தேவதாரு மரத்துக்குச் செய்தி அனுப்பி, ‘உன்னுடைய மகளை என் மகனுக்குக் கல்யாணம் செய்து கொடு’ என்று கேட்டதாம். ஆனால், லீபனோனில் இருக்கிற காட்டு மிருகம் அந்த வழியாகப் போனபோது அந்த முட்செடியை மிதித்துப் போட்டதாம். 10 நீ ஏதோமைத் தோற்கடித்தது+ என்னவோ உண்மைதான். அதனால் தலைக்கனத்தோடு ஆடுகிறாய். நீ பெருமைப்பட்டுக்கொள், ஆனால் ஒழுங்காக உன் வீட்டிலேயே* இரு. நீ ஏன் உனக்கு அழிவைத் தேடிக்கொள்கிறாய், உன்னோடு சேர்த்து ஏன் யூதாவையும் அழிக்கப் பார்க்கிறாய்?” 11 ஆனால் அமத்சியா அவர் பேச்சைக் கேட்கவில்லை.+

அதனால், இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் போருக்குப் போனார். அவரும் யூதாவின் ராஜாவான அமத்சியாவும் யூதாவுக்குச் சொந்தமான பெத்-ஷிமேசில்+ நேருக்கு நேர் சண்டை போட்டார்கள். 12 யூதாவைச் சேர்ந்த வீரர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போய், அவரவருடைய வீடுகளுக்கு* தப்பித்து ஓடினார்கள். 13 அகசியாவின் பேரனும் யோவாசின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய அமத்சியாவை இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் பெத்-ஷிமேசில் பிடித்தார். பின்பு, அவரும் அவருடைய படையினரும் எருசலேமுக்கு வந்தார்கள். எருசலேம் மதில் சுவரை ‘எப்பிராயீம் நுழைவாசல்’+ தொடங்கி ‘மூலை நுழைவாசல்’+ வரை 400 முழ* நீளத்துக்கு யோவாஸ் இடித்துப்போட்டார். 14 யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டார். சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப் போனார்.

15 யோவாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள், யூதாவின் ராஜாவான அமத்சியாவுடன் செய்த போர் ஆகியவற்றைப் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 16 பின்பு யோவாஸ் இறந்துபோனார்,* மற்ற இஸ்ரவேல் ராஜாக்களைப் போல சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யெரொபெயாம்*+ ராஜாவானார்.

17 இஸ்ரவேலின் ராஜாவான யோவாகாசின் மகன் யோவாஸ்+ இறந்த பின்பு, யூதாவின் ராஜாவான யோவாசின் மகன் அமத்சியா+ 15 வருஷங்களுக்கு உயிரோடு இருந்தார்.+ 18 அமத்சியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 19 பிற்பாடு, எருசலேமிலிருந்த சிலர் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினார்கள்.+ அதனால், அவர் லாகீசுக்குத் தப்பித்துப் போனார். ஆனாலும், அவருக்குப் பின்னாலேயே ஆட்களை அனுப்பி லாகீசில் அவரைக் கொன்றுபோட்டார்கள். 20 குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அவருடைய உடலை எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்தார்கள்.+ அங்குதான் அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். 21 யூதா மக்கள் எல்லாரும், அமத்சியாவுக்கு+ அடுத்து அவருடைய மகன் அசரியாவை*+ ராஜாவாக்கினார்கள். அப்போது, அவருக்கு 16 வயது.+ 22 ராஜா* இறந்த* பின்பு, அவர் ஏலாத்தைத்+ திரும்பக் கட்டி, அதை யூதா தேசத்துடன் மீண்டும் இணைத்துக்கொண்டார்.+

23 யூதாவின் ராஜா யோவாசின் மகன் அமத்சியா ஆட்சி செய்த 15-ஆம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜா யோவாசின் மகன் யெரொபெயாம்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 41 வருஷங்கள் ஆட்சி செய்தார். 24 யெகோவா வெறுக்கிற காரியங்களையே தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு அவர் விலகவே இல்லை.+ 25 லெபோ-காமாத்திலிருந்து*+ அரபா கடல்*+ வரை இருந்த பகுதிகளை அவர் மீண்டும் இஸ்ரவேலுடன் இணைத்துக்கொண்டார். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசி யோனா+ மூலம், அதாவது காத்-தேப்பேரைச்+ சேர்ந்த அமித்தாயின் மகன் மூலம், சொன்னது இப்படி நிறைவேறியது. 26 ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அனுபவித்த படுபயங்கரமான கொடுமைகளை யெகோவா பார்த்திருந்தார்.+ அவர்களுக்கு உதவி செய்ய யாருமே அங்கே மீதியிருக்கவில்லை, ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும்கூட இல்லை. 27 இந்தப் பூமியிலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிக்க மாட்டேன் என்று யெகோவா வாக்குறுதி கொடுத்திருந்தார்.+ அதனால், யோவாசின் மகன் யெரொபெயாம் மூலம் அவர்களைக் காப்பாற்றினார்.+

28 யெரொபெயாமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவருடைய வீரதீர செயல்களைப் பற்றியும், அவர் போர் செய்த விதத்தைப் பற்றியும், தமஸ்கு,+ காமாத்+ நகரங்களை மீண்டும் யூதா மற்றும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த விதத்தைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 29 பின்பு யெரொபெயாம் இறந்துபோனார்,* இஸ்ரவேலின் ராஜாக்களைப் போல அடக்கம் செய்யப்பட்டார். அடுத்ததாக, அவருடைய மகன் சகரியா+ ராஜாவானார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்