உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 சாமுவேல் முக்கியக் குறிப்புகள்

      • நோபுவில் தாவீது படையல் ரொட்டியைச் சாப்பிடுகிறார் (1-9)

      • காத்தில் பைத்தியக்காரன்போல் தாவீது நடிக்கிறார் (10-15)

1 சாமுவேல் 21:1

இணைவசனங்கள்

  • +1சா 22:9, 19
  • +1சா 18:13

1 சாமுவேல் 21:4

இணைவசனங்கள்

  • +யாத் 25:30; லேவி 24:5, 9; மத் 12:3, 4
  • +யாத் 19:15; லேவி 15:16; 2சா 11:11

1 சாமுவேல் 21:5

இணைவசனங்கள்

  • +லேவி 15:18

1 சாமுவேல் 21:6

இணைவசனங்கள்

  • +லேவி 24:7-9; மாற் 2:25, 26; லூ 6:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இயேசு—வழி, பக். 76

    காவற்கோபுரம்,

    3/15/2005, பக். 30

    9/1/2002, பக். 18

    8/1/1988, பக். 24-25

1 சாமுவேல் 21:7

இணைவசனங்கள்

  • +1சா 22:9; சங் 52:மேல்குறிப்பு
  • +ஆதி 36:1

1 சாமுவேல் 21:9

இணைவசனங்கள்

  • +1சா 17:2, 50
  • +1சா 17:51, 54
  • +யாத் 28:6

1 சாமுவேல் 21:10

இணைவசனங்கள்

  • +1சா 27:1
  • +யோசு 11:22; 1சா 5:8; 17:4; 27:2; சங் 56:மேல்குறிப்பு

1 சாமுவேல் 21:11

இணைவசனங்கள்

  • +1சா 18:6-8; 29:4, 5

1 சாமுவேல் 21:12

இணைவசனங்கள்

  • +சங் 56:3, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/1987, பக். 24-25

1 சாமுவேல் 21:13

இணைவசனங்கள்

  • +சங் 34:மேல்குறிப்பு

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2024, பக். 2

    காவற்கோபுரம்,

    3/15/2005, பக். 24

    8/1/1987, பக். 24-25

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 சா. 21:11சா 22:9, 19
1 சா. 21:11சா 18:13
1 சா. 21:4யாத் 25:30; லேவி 24:5, 9; மத் 12:3, 4
1 சா. 21:4யாத் 19:15; லேவி 15:16; 2சா 11:11
1 சா. 21:5லேவி 15:18
1 சா. 21:6லேவி 24:7-9; மாற் 2:25, 26; லூ 6:3, 4
1 சா. 21:71சா 22:9; சங் 52:மேல்குறிப்பு
1 சா. 21:7ஆதி 36:1
1 சா. 21:91சா 17:2, 50
1 சா. 21:91சா 17:51, 54
1 சா. 21:9யாத் 28:6
1 சா. 21:101சா 27:1
1 சா. 21:10யோசு 11:22; 1சா 5:8; 17:4; 27:2; சங் 56:மேல்குறிப்பு
1 சா. 21:111சா 18:6-8; 29:4, 5
1 சா. 21:12சங் 56:3, 6
1 சா. 21:13சங் 34:மேல்குறிப்பு
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 சாமுவேல் 21:1-15

1 சாமுவேல்

21 அதன்பின் தாவீது, நோபு நகரத்தில் இருக்கிற குருவாகிய அகிமெலேக்கிடம் போனார்.+ அவரைப் பார்த்ததும் அகிமெலேக்கு பதற்றத்தோடு அவரிடம் வந்து, “தனியாக வந்திருக்கிறீர்களே, வேறு யாரும் உங்களோடு வரவில்லையா?”+ என்று கேட்டார். 2 அதற்கு தாவீது, “ராஜா எனக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஆனால், அதைப் பற்றியோ அது சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைப் பற்றியோ யாரிடமும் சொல்லக் கூடாது என்று கட்டளை கொடுத்திருக்கிறார். ஒரு இடத்தில் வந்து என்னைச் சந்திக்கும்படி என் ஆட்களிடம் சொல்லியிருக்கிறேன். 3 இப்போது உங்களிடம் ஐந்து ரொட்டிகள் இருந்தால் கொடுங்கள் அல்லது என்ன இருக்கிறதோ அதைக் கொடுங்கள்” என்று கேட்டார். 4 அதற்கு அவர், “என்னிடம் பரிசுத்த ரொட்டிகள்தான் இருக்கின்றன,+ வேறெந்த ரொட்டியும் இல்லை. உங்கள் ஆட்கள் தங்களுடைய மனைவியோடு உறவுகொள்ளாமல் இருந்திருந்தால் அவற்றைத் தருகிறேன்”+ என்றார். 5 அப்போது தாவீது, “போருக்குப் போகும் சமயங்களில் எங்கள் மனைவியோடு உறவுகொள்ளவே மாட்டோம்.+ சாதாரண வேலைக்குப் போகும்போதே என் ஆட்கள் சுத்தமாயிருப்பார்கள் என்றால், இன்றைக்கு இன்னும் எவ்வளவு சுத்தமாயிருப்பார்கள்!” என்றார். 6 அதனால், குருவானவர் பரிசுத்த ரொட்டிகளை அவருக்குக் கொடுத்தார்.+ பரிசுத்தமான அந்தப் படையல் ரொட்டிகளைத் தவிர வேறெந்த ரொட்டியும் அவரிடம் இல்லை. வழக்கம் போலவே அவர் யெகோவாவின் சன்னிதியில் புதிய ரொட்டிகளை வைத்தபோது அந்தப் பழைய ரொட்டிகளை எடுத்து வைத்திருந்தார்.

7 அன்றைக்கு சவுலின் ஊழியர்களில் ஒருவன் ஏதோவொரு கட்டாயத்தினால் அங்கே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்தான். அவன் பெயர் தோவேக்.+ அவன் ஓர் ஏதோமியன்,+ சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன்.

8 பின்பு தாவீது அகிமெலேக்கிடம், “உங்களிடம் ஈட்டியோ வாளோ இருக்குமா? ராஜா அவசரமாகப் போகச் சொன்னதால் என்னுடைய வாளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு வரவில்லை” என்று சொன்னார். 9 அதற்கு அவர், “ஏலா பள்ளத்தாக்கில் நீங்கள் கொன்றுபோட்ட+ அந்தப் பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள்+ இங்கே இருக்கிறது. அதை ஒரு துணியில் சுற்றி ஏபோத்துக்குப்+ பின்னால் வைத்திருக்கிறேன். வேண்டுமானால் அதை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஒன்றுதான் இங்கே இருக்கிறது” என்றார். அதற்கு தாவீது, “அதைவிட நல்ல வாள் கிடையாது. அதையே எனக்குக் கொடுங்கள்” என்றார்.

10 அதன்பின், அவர் மறுபடியும் சவுலிடமிருந்து தப்பித்து ஓடி,+ கடைசியில் காத் ராஜாவாகிய ஆகீசிடம் போய்ச் சேர்ந்தார்.+ 11 ஆகீசின் ஊழியர்கள் அவனிடம், “இவன் தாவீதுதானே, இஸ்ரவேலின் ராஜாதானே?

‘சவுல் கொன்றது ஆயிரம்,

தாவீது கொன்றது பல்லாயிரம்’

என்று இவனைப் பற்றித்தானே பெண்கள் ஆடிப்பாடி புகழ்ந்தார்கள்?”+ என்று சொன்னார்கள். 12 அவர்கள் சொன்னதை தாவீது யோசிக்க யோசிக்க, காத் ராஜாவாகிய ஆகீஸ் தன்னை என்ன செய்வானோ என்று ரொம்பவே பயந்துபோனார்.+ 13 அதனால், புத்தி பேதலித்தவன் போல அவர்கள் முன்னால் நடித்தார்.+ ஒரு பைத்தியக்காரன் போலக் கதவுகளில் கீறிக்கொண்டும் எச்சிலைத் தாடியில் ஒழுகவிட்டுக்கொண்டும் இருந்தார். 14 அதைப் பார்த்த ஆகீஸ் தன்னுடைய ஊழியர்களிடம், “இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் கொண்டுவந்தீர்கள்? 15 இங்கே இருக்கும் பைத்தியக்காரர்கள் போதாதென்று இவன் வேறா? இந்தக் கிறுக்கனை எதற்காக என் வீட்டுக்குள் கொண்டுவந்தீர்கள்?” என்று கேட்டான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்