நெகேமியா
11 ஜனங்களின் தலைவர்கள் எருசலேமில்+ குடியிருந்தார்கள். ஆனால் ஜனங்களைப் பொறுத்தவரை, பத்துப் பேரில் ஒருவர் அந்தப் பரிசுத்த நகரத்தில் குடியிருப்பதற்காக குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதி ஒன்பது பேர் அவரவர் நகரங்களிலேயே குடியிருந்தார்கள். 2 எருசலேமில் குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த ஆட்கள் எல்லாரையும் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+
4 அதோடு யூதா, பென்யமீன் ஜனங்களில் சிலர் எருசலேமில் குடியிருந்தார்கள்.) யூதா ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: பாரேசின் வம்சத்தில்+ வந்த மகலாலெயேலுக்குப் பிறந்த செப்பத்தியாவின் எள்ளுப்பேரனும் அமரியாவின் கொள்ளுப்பேரனும் சகரியாவின் பேரனும் உசியாவின் மகனுமான அத்தாயா, 5 சேலாவியனான சகரியாவுக்குப் பிறந்த யோயாரிபின் மகனான அதாயாவின் எள்ளுப்பேரனும் ஹசாயாயின் கொள்ளுப்பேரனும் கொல்லோசேயின் பேரனும் பாருக்கின் மகனுமான மாசெயா. 6 எருசலேமில் குடியிருந்த பாரேசின் வம்சத்தைச் சேர்ந்த திறமையான ஆண்கள் மொத்தம் 468 பேர்.
7 பென்யமீன் ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: யெசாயாவுக்குப் பிறந்த இத்தியேலின் மகனான மாசெயாவின் எள்ளுப்பேரனும் கொலாயாவின் கொள்ளுப்பேரனும் பெதாயாவின் பேரனும் யோவேத்தின் மகனுமான மெசுல்லாமின் மகன் சல்லு,+ 8 கப்பாய், சல்லாய் என மொத்தம் 928 பேர். 9 சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுடைய கண்காணியாக இருந்தார், நகரத்தின் அடுத்த கண்காணியாக அசெனூவாவின் மகன் யூதா இருந்தார்.
10 குருமார்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: யோயாரிபின் மகன் யெதாயா, யாகீன்,+ 11 உண்மைக் கடவுளுடைய ஆலய அதிகாரிகளில் ஒருவரான அகிதூப்புக்குப்+ பிறந்த மெராயோத்தின் எள்ளுப்பேரனும் சாதோக்கின் கொள்ளுப்பேரனும் மெசுல்லாமின் பேரனும் இல்க்கியாவின் மகனுமான செராயா, 12 ஆலய வேலை செய்த அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 822 பேர். மல்கீயாவுக்குப் பிறந்த பஸ்கூரின்+ மகனான சகரியாவின் எள்ளுப்பேரனும் அம்சியின் கொள்ளுப்பேரனும் பெல்லியாவின் பேரனும் எரோகாமின் மகனுமான அதாயா, 13 தந்தைவழிக் குடும்பத் தலைவர்களான அவருடைய சகோதரர்கள் என மொத்தம் 242 பேர். இம்மேரின் எள்ளுப்பேரனும் மெசில்லேமோத்தின் கொள்ளுப்பேரனும் அகசாயின் பேரனும் அசரெயேலின் மகனுமான அமாசசாய், 14 பலசாலிகளாகவும் தைரியசாலிகளாகவும் இருந்த அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 128 பேர். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த சப்தியேல் அவர்களுக்குக் கண்காணியாக இருந்தார்.
15 லேவியர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: புன்னியின் எள்ளுப்பேரனும் அஷபியாவின் கொள்ளுப்பேரனும் அசரீக்காமின் பேரனும் அசூப்பின் மகனுமான செமாயா,+ 16 உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் வெளிவேலைகளைக் கவனித்துவந்த லேவியர்களின் தலைவர்களான சபெதாய்+ மற்றும் யோசபத்;+ 17 ஆசாபின்+ கொள்ளுப்பேரனும் சப்தியின் பேரனும் மீகாவின் மகனும் ஜெப நேரத்தில் கடவுளைத் துதித்துப் பாடும் பாடகர் குழுவின்+ இயக்குநருமான மத்தனியா,+ இவருடைய இரண்டாவது சகோதரனான பக்புக்கியா, எதித்தூனின்+ கொள்ளுப்பேரனும் காலாலின் பேரனும் சம்முவாவின் மகனுமான அப்தா. 18 பரிசுத்த நகரத்திலிருந்த லேவியர்கள் எல்லாரும் 284 பேர்.
19 வாயிற்காவலர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: அக்கூப், தல்மோன்,+ அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 172 பேர்.
20 மீதியிருந்த இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் யூதாவின் மற்ற நகரங்களில் அவரவருடைய சொந்த நிலங்களில் குடியிருந்தார்கள். 21 ஆலயப் பணியாளர்கள்*+ ஓபேலில் குடியிருந்தார்கள்.+ சீகாவும் கிஸ்பாவும் ஆலயப் பணியாளர்களுக்கு* அதிகாரிகளாக இருந்தார்கள்.
22 பாடகர்களான ஆசாபின் வம்சத்தில் வந்த மிக்காவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின்+ கொள்ளுப்பேரனும் அஷபியாவின் பேரனும் பானியின் மகனுமான உசீ, எருசலேமில் லேவியர்களின் கண்காணியாக இருந்தார். இவர் உண்மைக் கடவுளுடைய ஆலய வேலைகளைக் கவனித்துவந்தார். 23 பாடகர்களுக்கு அந்தந்த நாள் தேவைப்படுவதை* கொடுக்க வேண்டும் என்று ராஜா கட்டளை கொடுத்திருந்தார்.+ 24 யூதாவின் மகனான சேராகுவின் வம்சத்தில் வந்த மெஷெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களுடைய விவகாரங்கள் எல்லாவற்றிலும் ராஜாவுக்கு ஆலோசனை சொல்பவராக இருந்தார்.
25 யூதா ஜனங்களில் சிலர் கீரியாத்-அர்பாவிலும்+ அதன் சிற்றூர்களிலும்,* தீபோனிலும் அதன் சிற்றூர்களிலும், எகாப்செயேலிலும்+ அதன் கிராமங்களிலும், 26 யெசுவாவிலும், மொலாதாவிலும்,+ பெத்-பாலேத்திலும்,+ 27 ஆத்சார்-சுவாலிலும்,+ பெயெர்-செபாவிலும் அதன் சிற்றூர்களிலும், 28 சிக்லாகுவிலும்,+ மேகோனாவிலும் அதன் சிற்றூர்களிலும், 29 என்-ரிம்மோனிலும்,+ சோராவிலும்,+ யர்மூத்திலும், 30 சனோவாவிலும்,+ அதுல்லாமிலும் அதன் கிராமங்களிலும், லாகீசிலும்+ அதன் நிலங்களிலும், அசெக்காவிலும்+ அதன் சிற்றூர்களிலும் வாழ்ந்துவந்தார்கள். பெயெர்-செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்குவரை+ அவர்கள் குடியிருந்தார்கள்.
31 பென்யமீன் ஜனங்கள் கெபாவிலும்,+ மிக்மாஷிலும், ஆயாவிலும், பெத்தேலிலும்+ அதன் சிற்றூர்களிலும், 32 ஆனதோத்திலும்,+ நோபுவிலும்,+ அனனெயாவிலும், 33 ஆத்சோரிலும், ராமாவிலும்,+ கித்தாயீமிலும், 34 ஆதீத்திலும், செபோயிமிலும், நெபலாத்திலும், 35 லோதுவிலும், கைத்தொழிலாளிகளின் பள்ளத்தாக்காகிய ஓனோவிலும்+ குடியிருந்தார்கள். 36 யூதாவில் வாழ்ந்துவந்த லேவியர்களில் சில பிரிவினர் பென்யமீன் பகுதியில் குடியேறினார்கள்.