சங்கீதம்
தாவீதின் ஜெபம்.
17 யெகோவாவே, நியாயம் கேட்டு நான் முறையிடுவதைக் கேளுங்கள்.
உதவிக்காக நான் கதறுவதைக் கவனியுங்கள்.
கள்ளம்கபடம் இல்லாமல் நான் செய்கிற ஜெபத்தைக் கேளுங்கள்.+
3 நீங்கள் என் இதயத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள், ராத்திரியில் என்னைச் சோதித்துப் பார்த்திருக்கிறீர்கள்.+
என்னைப் புடமிட்டிருக்கிறீர்கள்.+
நான் எந்தச் சதித்திட்டமும் தீட்டவில்லை என்றும்,
என் வாயால் பாவம் செய்யவில்லை என்றும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
4 மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி,
நான் உங்களுடைய வார்த்தையின்படியே,
திருடர்களின் பாதைகளில் போகாமல் இருப்பேன்.+
5 உங்களுடைய பாதைகளிலேயே நடக்க எனக்கு உதவி செய்யுங்கள்.
அப்போதுதான் என் கால்கள் தடுமாறாமல் இருக்கும்.+
6 கடவுளே, நீங்கள் எனக்குப் பதில் சொல்வீர்கள். அதனால்தான் உங்களைக் கூப்பிடுகிறேன்.+
நான் பேசுவதைக் கேளுங்கள், காதுகொடுத்து* கேளுங்கள்.+
7 உங்களுடைய வலது பக்கத்தில் தஞ்சம் தேடி வருகிறவர்களை மீட்கிறவரே,
உங்களை எதிர்க்கிற ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறவரே,
அற்புதமான விதத்தில் உங்களுடைய மாறாத அன்பைக் காட்டுங்கள்.+
8 கண்மணிபோல் என்னைப் பார்த்துக்கொள்ளுங்கள்.+
உங்களுடைய சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளுங்கள்.+
9 என்னைத் தாக்குகிற பொல்லாத ஆட்களிடமிருந்தும்,
என்னைக் கொல்வதற்காகவே சுற்றிவளைக்கிற எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள்.+
10 அவர்கள் கல்நெஞ்சக்காரர்களாக ஆகிவிட்டார்கள்.
அவர்கள் அகம்பாவத்தோடு பேசுகிறார்கள்.
11 இப்போது எங்களைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள்.+
எங்களை வீழ்த்துவதற்கு* சந்தர்ப்பம் தேடுகிறார்கள்.
12 அவர்கள் ஒவ்வொருவரும், கடித்துக் குதறுவதற்குக் காத்திருக்கிற சிங்கத்தைப் போல இருக்கிறார்கள்.
பதுங்கியிருக்கிற இளம் சிங்கத்தைப் போல இருக்கிறார்கள்.
13 யெகோவாவே, எழுந்து வாருங்கள், நேருக்குநேர் மோதி அவர்களை வீழ்த்துங்கள்.+
உங்களுடைய வாளால் பொல்லாதவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
14 யெகோவாவே, உங்கள் கையால் என்னை இந்த உலக ஆட்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.
அவர்கள் இந்த உலக வாழ்க்கையையே முக்கியமென நினைக்கிறார்கள்.+
நீங்கள் தருகிற நல்ல நல்ல காரியங்களை+ அனுபவித்துவிட்டு,
தங்கள் பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுவிட்டுப் போகிறார்கள்.