சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; மிக்தாம்.* தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவரைக் கொல்வதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது+ தாவீது பாடிய பாடல்.
59 கடவுளே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+
எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+
2 அக்கிரமம் செய்கிற ஆட்களிடமிருந்தும்,
வன்முறையில் இறங்குகிற ஆட்களிடமிருந்தும்* என்னைக் காப்பாற்றுங்கள்.
3 இதோ! என்னைத் தாக்குவதற்காக அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.+
யெகோவாவே, நான் எந்தக் கலகமோ பாவமோ செய்யவில்லை.+
ஆனாலும், பலசாலிகள் என்னைத் தாக்குகிறார்கள்.
4 நான் எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும், என்னைத் தாக்குவதற்காக ஓடி வருகிறார்கள்.
என் குரலைக் கேட்டு எழுந்திடுங்கள், என்னைப் பாருங்கள்.
5 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள்.+
எல்லா தேசங்களையும் நியாயந்தீர்ப்பதற்காக எழுந்து வாருங்கள்.
கெட்ட எண்ணத்தோடு துரோகம் செய்கிற யாருக்கும் இரக்கம் காட்டாதீர்கள்.+ (சேலா)
6 ஒவ்வொரு சாயங்கால வேளையிலும் அவர்கள் வருகிறார்கள்.+
நாய்கள்போல் ஊளையிட்டுக்கொண்டு,*+ ஊரைச் சுற்றித் திரிகிறார்கள்.+
7 அவர்களுடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் எப்படிக் கொட்டுகிறதென்று பாருங்கள்.
அவர்களுடைய உதடுகள் வாள்களைப் போல இருக்கின்றன.+
“இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்?” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+
8 ஆனால் யெகோவாவே, நீங்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்கள்.+
எல்லா தேசங்களையும் பார்த்து ஏளனம் செய்வீர்கள்.+
10 எனக்கு மாறாத அன்பைக் காட்டுகிற கடவுள் என் உதவிக்கு வருவார்.+
எதிரிகளை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்க்கும்படி செய்வார்.+
11 அவர்களைக் கொன்றுவிடாதீர்கள்; அப்படிச் செய்தால், என் ஜனங்கள் அதை மறந்துவிடுவார்களே.
அதனால், உங்களுடைய பலத்தைப் பயன்படுத்தி அவர்களை அலைய விடுங்கள்.
யெகோவாவே, எங்கள் கேடயமே,+ அவர்களைத் தோற்கடியுங்கள்.
12 அவர்கள் தங்களுடைய வாயினாலும் தங்களுடைய உதடுகளின் வார்த்தைகளினாலும் பாவம் செய்கிறார்கள்.
அவர்கள் சபித்துப் பேசுகிறார்கள், பொய் பேசுகிறார்கள்.
அதனால், அவர்களுடைய பெருமையே அவர்களைச் சிக்க வைக்கட்டும்.+
13 உங்களுடைய கோபத்தால் அவர்களை ஒழித்துக்கட்டுங்கள்.+
அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுங்கள்.
கடவுள்தான் யாக்கோபையும் பூமி முழுவதையும் ஆளுகிறார் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.+ (சேலா)
16 ஆனால், நான் உங்களுடைய பலத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.+
காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிச் சந்தோஷமாகப் பேசுவேன்.