சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் பாடல். நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது.
61 கடவுளே, உதவிக்காக நான் கூப்பிடும்போது கேளுங்கள்.
என் ஜெபத்தைக் கவனித்துக் கேளுங்கள்.+
2 என் நெஞ்சம் வேதனையில் தவிக்கும்போது,*+
நான் பூமியின் ஒரு முனையில் இருந்தாலும் உங்களைக் கூப்பிடுவேன்.
உயரமான கற்பாறைமேல் என்னைக் கொண்டுபோய் விடுங்கள்.+
4 நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்.+
உங்களுடைய சிறகுகளின் மறைவில் தஞ்சம் அடைவேன்.+ (சேலா)
5 ஏனென்றால் கடவுளே, ஜெபத்தில் நான் நேர்ந்துகொண்டவற்றை நீங்கள் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறீர்கள்.
உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களின் சொத்தை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.+