சங்கீதம்
ஒரு சங்கீதம்.
அவருடைய பரிசுத்தமான வலது கை மீட்பைத் தந்திருக்கிறது.*+
2 யெகோவா, தன் மீட்பைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.+
தன் நீதியைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.+
3 மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவதாக இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்திருக்கிறார்.+
நம் கடவுள் தந்த மீட்பை* பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள்.+
4 பூமியில் இருக்கிறவர்களே, யெகோவாவுக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்யுங்கள்.
சந்தோஷப் பூரிப்போடு ஆரவாரம் செய்யுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+
5 யாழ் இசைத்து யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.
யாழின் இசையோடும் இனிமையான பாடலோடும் அவரைப் புகழுங்கள்.
7 கடலும் அதில் நிறைந்திருப்பவையும்,
பூமியும் அதில் குடியிருப்பவர்களும் முழக்கம் செய்யட்டும்.