உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 13
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நியாயாதிபதிகள் முக்கியக் குறிப்புகள்

      • மனோவாவையும் அவருடைய மனைவியையும் ஒரு தேவதூதர் சந்திக்கிறார் (1-23)

      • சிம்சோன் பிறக்கிறார் (24, 25)

நியாயாதிபதிகள் 13:1

இணைவசனங்கள்

  • +நியா 2:11, 19; 10:6
  • +யோசு 13:1-3; நியா 10:7

நியாயாதிபதிகள் 13:2

இணைவசனங்கள்

  • +ஆதி 49:16
  • +யோசு 15:20, 33; 19:41, 48
  • +நியா 16:31
  • +ஆதி 30:22, 23

நியாயாதிபதிகள் 13:3

இணைவசனங்கள்

  • +ஆதி 18:10; 1சா 1:20; லூ 1:11, 13

நியாயாதிபதிகள் 13:4

இணைவசனங்கள்

  • +எண் 6:2, 3; லூ 1:15
  • +லேவி 11:26, 27

நியாயாதிபதிகள் 13:5

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அர்ப்பணிக்கப்பட்டவனாக.”

இணைவசனங்கள்

  • +எண் 6:2, 5
  • +நியா 2:16; 13:1; நெ 9:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2476

    காவற்கோபுரம்,

    3/15/2005, பக். 25

நியாயாதிபதிகள் 13:6

இணைவசனங்கள்

  • +நியா 13:17, 18

நியாயாதிபதிகள் 13:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2015, பக். 3

    8/15/2013, பக். 16

நியாயாதிபதிகள் 13:10

இணைவசனங்கள்

  • +நியா 13:3

நியாயாதிபதிகள் 13:12

இணைவசனங்கள்

  • +நியா 13:8

நியாயாதிபதிகள் 13:13

இணைவசனங்கள்

  • +நியா 13:4

நியாயாதிபதிகள் 13:14

இணைவசனங்கள்

  • +எண் 6:2, 3
  • +லேவி 11:26, 27

நியாயாதிபதிகள் 13:15

இணைவசனங்கள்

  • +ஆதி 18:5, 7; நியா 6:18, 19; எபி 13:2

நியாயாதிபதிகள் 13:17

இணைவசனங்கள்

  • +ஆதி 32:29; நியா 13:6

நியாயாதிபதிகள் 13:21

இணைவசனங்கள்

  • +நியா 6:22, 23

நியாயாதிபதிகள் 13:22

இணைவசனங்கள்

  • +யாத் 33:20; யோவா 1:18

நியாயாதிபதிகள் 13:23

இணைவசனங்கள்

  • +நியா 13:16

நியாயாதிபதிகள் 13:24

இணைவசனங்கள்

  • +எபி 11:32

நியாயாதிபதிகள் 13:25

இணைவசனங்கள்

  • +யோசு 15:20, 33
  • +நியா 18:11, 12
  • +நியா 3:9, 10; 6:34; 11:29; 1சா 11:6

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நியா. 13:1நியா 2:11, 19; 10:6
நியா. 13:1யோசு 13:1-3; நியா 10:7
நியா. 13:2ஆதி 49:16
நியா. 13:2யோசு 15:20, 33; 19:41, 48
நியா. 13:2நியா 16:31
நியா. 13:2ஆதி 30:22, 23
நியா. 13:3ஆதி 18:10; 1சா 1:20; லூ 1:11, 13
நியா. 13:4எண் 6:2, 3; லூ 1:15
நியா. 13:4லேவி 11:26, 27
நியா. 13:5எண் 6:2, 5
நியா. 13:5நியா 2:16; 13:1; நெ 9:27
நியா. 13:6நியா 13:17, 18
நியா. 13:10நியா 13:3
நியா. 13:12நியா 13:8
நியா. 13:13நியா 13:4
நியா. 13:14எண் 6:2, 3
நியா. 13:14லேவி 11:26, 27
நியா. 13:15ஆதி 18:5, 7; நியா 6:18, 19; எபி 13:2
நியா. 13:17ஆதி 32:29; நியா 13:6
நியா. 13:21நியா 6:22, 23
நியா. 13:22யாத் 33:20; யோவா 1:18
நியா. 13:23நியா 13:16
நியா. 13:24எபி 11:32
நியா. 13:25யோசு 15:20, 33
நியா. 13:25நியா 18:11, 12
நியா. 13:25நியா 3:9, 10; 6:34; 11:29; 1சா 11:6
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
நியாயாதிபதிகள் 13:1-25

நியாயாதிபதிகள்

13 மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+ யெகோவா அவர்களை 40 வருஷங்களுக்கு பெலிஸ்தியர்களின் கையில் விட்டுவிட்டார்.+

2 அந்தக் காலகட்டத்தில், தாண் கோத்திரத்தைச்+ சேர்ந்த ஒருவர் சோரா என்ற ஊரில்+ வாழ்ந்துவந்தார். அவருடைய பெயர் மனோவா.+ அவருடைய மனைவிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.+ 3 ஒருநாள் யெகோவாவின் தூதர் அவள் முன்னால் வந்து, “இதுவரை உனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், சீக்கிரத்தில் நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.+ 4 அதுவரை திராட்சமதுவையோ வேறெந்த மதுவையோ நீ குடிக்கக் கூடாது.+ தீட்டான எதையும்+ சாப்பிடக் கூடாது. 5 நீ கர்ப்பமாகி கண்டிப்பாக ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுடைய தலைமுடியை நீ வெட்டவே கூடாது.+ ஏனென்றால், பிறக்கும் சமயத்திலிருந்தே அவன் கடவுளுக்கு நசரேயனாக* இருப்பான். பெலிஸ்தியர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களை அவன் காப்பாற்றுவான்”+ என்று சொன்னார்.

6 உடனே அவள் தன் கணவனிடம் போய், “உண்மைக் கடவுளின் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். நான் அவரைப் பார்த்து அப்படியே பிரமித்துப்போய்விட்டேன், ஏனென்றால் அவர் உண்மைக் கடவுளின் தூதரைப் போலவே இருந்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் கேட்கவில்லை, அவரும் தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை.+ 7 ஆனால் அவர் என்னிடம், ‘நீ கர்ப்பமாகி கண்டிப்பாக ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அதுவரை திராட்சமதுவையோ வேறெந்த மதுவையோ நீ குடிக்கக் கூடாது. தீட்டான எதையும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், பிறக்கிற நாளிலிருந்து சாகிற நாள்வரை அவன் கடவுளுக்கு நசரேயனாக இருப்பான்’ என்று சொன்னார்” என்றாள்.

8 அப்போது மனோவா, “யெகோவாவே, என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் கொஞ்ச நேரத்துக்கு முன்பு அனுப்பிய உங்களுடைய ஊழியரைத் தயவுசெய்து மறுபடியும் அனுப்புங்கள். பிறக்கப்போகிற குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவர் எங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்று யெகோவாவிடம் கெஞ்சினார். 9 மனோவாவின் வேண்டுதலை உண்மைக் கடவுள் கேட்டார். அவருடைய மனைவி வெளியில் உட்கார்ந்திருந்த சமயத்தில், உண்மைக் கடவுளின் தூதர் மறுபடியும் அவளிடம் வந்தார். அவளுடைய கணவன் மனோவா அப்போது அவளோடு இல்லை. 10 அதனால் அவள் சட்டென்று தன் கணவனிடம் ஓடிப்போய், “அன்றைக்கு என்னைப் பார்க்க வந்த மனுஷர் திரும்பவும் வந்திருக்கிறார்!”+ என்று சொன்னாள்.

11 உடனே மனோவா எழுந்து தன்னுடைய மனைவியுடன் போய், அந்த மனிதரைப் பார்த்து, “அன்றைக்கு நீங்கள்தான் என் மனைவியிடம் பேசினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம்” என்றார். 12 அப்போது மனோவா, “நீங்கள் சொன்னபடியே நடக்கட்டும்! அந்தக் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? அவன் என்ன வேலை செய்வான்?”+ என்று கேட்டார். 13 அதற்கு யெகோவாவின் தூதர், “நான் உன்னுடைய மனைவியிடம் சொன்னதையெல்லாம்+ அவள் அப்படியே செய்ய வேண்டும். 14 திராட்சைக் கொடியில் விளைகிற எதையும் அவள் சாப்பிடக் கூடாது. திராட்சமதுவையோ வேறெந்த மதுவையோ குடிக்கக் கூடாது,+ தீட்டான எதையும் சாப்பிடக் கூடாது.+ நான் கொடுத்த எல்லா கட்டளைகளையும் அவள் கடைப்பிடிக்க வேண்டும்” என்று சொன்னார்.

15 அப்போது மனோவா யெகோவாவின் தூதரிடம், “தயவுசெய்து இங்கேயே இருங்கள். உங்களுக்காக ஒரு வெள்ளாட்டுக் குட்டியை வெட்டி சமைத்துக்கொண்டு வருகிறோம்”+ என்று சொன்னார். 16 ஆனால் யெகோவாவின் தூதர் மனோவாவிடம், “நான் இங்கே இருந்தாலும் நீங்கள் கொடுக்கிற உணவைச் சாப்பிட மாட்டேன். நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த விரும்பினால் செலுத்தலாம்” என்றார். அவர் யெகோவாவின் தூதர் என்ற விஷயம் மனோவாவுக்குத் தெரியவில்லை. 17 அப்போது மனோவா யெகோவாவின் தூதரிடம், “நீங்கள் சொன்னதெல்லாம் நிறைவேறும்போது நாங்கள் உங்களைக் கௌரவிக்க வேண்டும். அதனால் தயவுசெய்து உங்கள் பெயரைச் சொல்லுங்கள்”+ என்றார். 18 ஆனால் யெகோவாவின் தூதர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்? அது அற்புதமானது என்று உனக்குத் தெரியாதா?” என்றார்.

19 பின்பு, மனோவா வெள்ளாட்டுக் குட்டியையும் உணவுக் காணிக்கையையும் பாறைமேல் வைத்து அவற்றை யெகோவாவுக்குச் செலுத்தினார். மனோவாவும் அவருடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருந்தபோதே கடவுள் ஓர் அற்புதத்தைச் செய்தார். 20 அந்தப் பலிபீடத்திலிருந்து தீ ஜுவாலை வானத்துக்கு நேராக எழும்பியது. மனோவாவும் அவருடைய மனைவியும் பார்க்கப் பார்க்கவே அந்தத் தீ ஜுவாலையில் யெகோவாவின் தூதர் மேலே போனார். உடனே அவர்கள் இரண்டு பேரும் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். 21 அதன்பின், மனோவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் முன்னால் யெகோவாவின் தூதர் வரவில்லை. அவர் யெகோவாவின் தூதர் என்பதை மனோவா அப்போது புரிந்துகொண்டார்.+ 22 உடனே தன்னுடைய மனைவியிடம், “நாம் கடவுளையே பார்த்துவிட்டோம், அதனால் கண்டிப்பாகச் சாகப்போகிறோம்”+ என்று சொன்னார். 23 ஆனால் அவருடைய மனைவி, “யெகோவா நம்மைக் கொல்ல நினைத்திருந்தால், நாம் செலுத்திய தகன பலியையும் உணவுக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.+ இதையெல்லாம் நமக்குக் காட்டியிருக்க மாட்டார், சொல்லியிருக்கவும் மாட்டார்” என்றாள்.

24 பிற்பாடு, அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு சிம்சோன்+ என்று பெயர் வைத்தாள். சிம்சோன் வளர்ந்துவந்த காலமெல்லாம் யெகோவா அவரை ஆசீர்வதித்துக்கொண்டே இருந்தார். 25 பின்பு, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும்+ இடையில் உள்ள மக்னி-தாணில்+ அவர் இருந்தபோது, யெகோவாவின் சக்தி அவரைச் செயல்படத் தூண்டியது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்