உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 24:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நீ நைசான மாவை எடுத்து அதில் 12 வட்ட ரொட்டிகள் சுட வேண்டும். ஒவ்வொரு ரொட்டியையும், ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவில் செய்ய வேண்டும். 6 சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டு யெகோவாவின் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிற மேஜையின்+ மேல் அவற்றை இரண்டு அடுக்காக அடுக்கிவைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ரொட்டிகளை வைக்க வேண்டும்.+

  • 1 சாமுவேல் 21:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதனால், குருவானவர் பரிசுத்த ரொட்டிகளை அவருக்குக் கொடுத்தார்.+ பரிசுத்தமான அந்தப் படையல் ரொட்டிகளைத் தவிர வேறெந்த ரொட்டியும் அவரிடம் இல்லை. வழக்கம் போலவே அவர் யெகோவாவின் சன்னிதியில் புதிய ரொட்டிகளை வைத்தபோது அந்தப் பழைய ரொட்டிகளை எடுத்து வைத்திருந்தார்.

  • 1 நாளாகமம் 9:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 ஒவ்வொரு ஓய்வுநாளிலும் படையல் ரொட்டிகளைத்+ தயாராக வைக்கிற பொறுப்பு+ அவர்களுடைய சகோதரர்களான கோகாத்தியர்கள் சிலருக்கு இருந்தது.

  • 2 நாளாகமம் 13:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தினமும் காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குத் தகன பலிகளைக் கொடுத்து,+ நறுமண தூபம் காட்டுகிறார்கள்;+ சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட மேஜையில் படையல் ரொட்டிகளை வைக்கிறார்கள்;+ தினமும் மாலையில் தங்க விளக்குத்தண்டில்+ இருக்கிற அகல் விளக்குகளை ஏற்றுகிறார்கள்;+ இப்படி, எங்கள் கடவுளான யெகோவா கொடுத்த பொறுப்புகளை நாங்கள் கண்ணும்கருத்துமாகச் செய்துவருகிறோம். ஆனால், நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள்.

  • மத்தேயு 12:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவர் கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை+ தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்