-
1 ராஜாக்கள் 19:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதற்கு அவர், “பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்து வந்திருக்கிறேன்.+ ஆனால், இஸ்ரவேல் மக்கள் உங்களுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள்,+ உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள், உங்களுடைய தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றுவிட்டார்கள்,+ நான் ஒருவன் மட்டும்தான் மீதியிருக்கிறேன். இப்போது என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்”+ என்று சொன்னார்.
-
-
மத்தேயு 21:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பின்பு இயேசு ஆலயத்துக்குள் போய், அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.+ 13 பின்பு அவர்களிடம், “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது.+ ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்”+ என்று சொன்னார்.
-
-
மாற்கு 11:15-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பின்பு, அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் ஆலயத்துக்குள் போய், அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்தவர்களை வெளியே துரத்த ஆரம்பித்தார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.+ 16 ஆலயத்தின் வழியாக எதையும் எடுத்துக்கொண்டு போக அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. 17 அதேசமயம், அவர் தொடர்ந்து கற்பித்து, “‘என்னுடைய வீடு எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக இருக்கும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது,+ இல்லையா? ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்கிவிட்டீர்கள்”+ என்றார்.
-
-
யோவான் 2:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிவிட்டதால் இயேசு எருசலேமுக்குப் போனார். 14 ஆலயத்தில் ஆடு, மாடு, புறா+ விற்பவர்களையும், இருக்கைகளில் உட்கார்ந்திருந்த காசுத் தரகர்களையும் பார்த்தார். 15 உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்து, ஆடு மாடுகளோடு சேர்த்து அவர்கள் எல்லாரையும் ஆலயத்திலிருந்து விரட்டினார்; காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.+ 16 புறா விற்பவர்களிடம், “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!”+ என்று சொன்னார். 17 அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்”+ என்று எழுதப்பட்டிருக்கிற வசனத்தை அவருடைய சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
-