உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 68:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 தன்னந்தனியாக இருக்கிறவர்களுக்குக் குடியிருக்க வீடு தருகிறார்.+

      கைதிகளை விடுதலையாக்கி சீரும் சிறப்புமாக வாழ வைக்கிறார்.+

      ஆனால், வறட்டுப் பிடிவாதமுள்ளவர்கள்* வறண்ட இடத்தில்தான் குடியிருப்பார்கள்.+

  • சங்கீதம் 146:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 மோசடி செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குகிறார்.

      பசியில் வாடுகிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.+

      கைதிகளை யெகோவா விடுதலை செய்கிறார்.+

  • ஏசாயா 49:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      “அனுக்கிரகக் காலத்தில் நான் உனக்குப் பதிலளித்தேன்.+

      மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்.+

      ஜனங்களுக்கு உத்தரவாதமாக* கொடுப்பதற்காக உன்னைப் பாதுகாத்து வந்தேன்.+

      நீ தேசத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவரவும்,

      பாழாகிப்போன நிலங்களில் ஜனங்களைத் திரும்ப வாழ வைக்கவும்,+

       9 சிறையில் இருப்பவர்களிடம், ‘வெளியே வாருங்கள்!’+ என்று சொல்லவும்,

      இருட்டில் இருப்பவர்களிடம்,+ ‘வெளிச்சத்துக்கு வாருங்கள்!’ என்று சொல்லவும் அப்படிச் செய்தேன்.

      வழியோரங்களில் அவர்கள் மேய்வார்கள்.

      பாதைகளின்* இரண்டு பக்கங்களிலும் அவர்களுடைய மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.

  • ஏசாயா 61:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+

      ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+

      உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*

      சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,

      கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்