-
மாற்கு 7:18-23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அதற்கு அவர், “நீங்களுமா அவர்களைப் போல் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியே இருந்து ஒரு மனுஷனுக்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது உங்களுக்குத் தெரியாதா? 19 அது அவனுடைய இதயத்துக்குள் போகாமல் வயிற்றுக்குள் போய் பின்பு கழிப்பிடத்துக்குப் போய்விடுகிறது, இல்லையா?” என்று கேட்டார்; இப்படி, எல்லா உணவுகளும் சுத்தமானவைதான் என்பதைத் தெரியப்படுத்தினார். 20 அதோடு அவர்களிடம், “ஒரு மனுஷனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றன.+ 21 ஏனென்றால் கெட்ட எண்ணங்கள்,+ அதாவது பாலியல் முறைகேடு,* திருட்டு, கொலை, 22 மணத்துணைக்குத் துரோகம், பேராசை, அக்கிரமம், வஞ்சகம், வெட்கங்கெட்ட நடத்தை,* பொறாமை,* நிந்தனை, கர்வம், வறட்டுப் பிடிவாதம் ஆகியவை மனுஷர்களுடைய இதயத்திலிருந்துதான் வெளியே வருகின்றன. 23 இந்தப் பொல்லாத விஷயங்களெல்லாம் ஒருவனுக்குள்ளிருந்து வந்து அவனைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று சொன்னார்.
-