2 கடவுளைப் போலவே எனக்கும் உங்கள்மேல் உள்ளப்பூர்வமான அக்கறை இருக்கிறது. ஏனென்றால், கிறிஸ்து என்ற ஒரே மணமகனுக்கு நான் உங்களை நிச்சயம் செய்துகொடுத்தேன். அதனால் உங்களைக் கற்புள்ள* கன்னிப்பெண்ணாக அவர் முன்னால் நிறுத்த விரும்புகிறேன்.+
9 கடைசி ஏழு தண்டனைகளால் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு தேவதூதர்களில்+ ஒருவர் என்னிடம் வந்து, “இங்கே வா, நான் உனக்கு மணமகளை,+ ஆட்டுக்குட்டியானவரின் மனைவியை, காட்டுகிறேன்” என்று சொன்னார்.