25 போட்டியில் கலந்துகொள்கிற எல்லாரும்* எல்லாவற்றிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அழிந்துபோகிற கிரீடத்தைப் பெறுவதற்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்,+ ஆனால் நாம் அழிந்துபோகாத கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம்.+
12 சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்;+ ஏனென்றால், யெகோவாவினால்* ஏற்றுக்கொள்ளப்படும்போது, வாழ்வு என்ற கிரீடம் அவனுக்குக் கிடைக்கும்.+ தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களுக்கு அதைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.+