உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 1:12, 13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 இருந்தாலும், அவரை ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் கடவுளுடைய பிள்ளைகளாகும் உரிமையைக் கொடுத்தார்.+ ஏனென்றால், அவருடைய பெயரில் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தார்கள்.+ 13 அவர்கள் இரத்தத்தாலோ இயற்கையான ஆசையாலோ ஆண்மகனின் விருப்பத்தாலோ பிறந்தவர்கள் அல்ல, கடவுளால் பிறந்தவர்கள்.+

  • ரோமர் 8:28
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 கடவுள் தன்னை நேசிக்கிறவர்களுடைய, அதாவது தன் நோக்கத்தின்படி+ அழைக்கப்பட்டவர்களுடைய, நன்மைக்காகத் தன்னுடைய எல்லா செயல்களையும் ஒன்றுக்கொன்று இசைந்துபோக வைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

  • எபேசியர் 1:13, 14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 ஆனால் சத்தியத்தின் செய்தியை, அதாவது உங்கள் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை, கேட்ட பின்பு நீங்களும் அவர்மேல் நம்பிக்கை வைத்தீர்கள். அப்படி நம்பிக்கை வைத்த பின்பு, வாக்குறுதி கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் அவர் மூலம் நீங்கள் முத்திரை போடப்பட்டீர்கள்.+ 14 கடவுளுக்குச் சொந்தமானவர்கள்+ மீட்புவிலையால்+ விடுதலையாகி தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவார்கள் என்பதற்கு அவருடைய சக்தியே உத்தரவாதமாக* இருக்கிறது.+ கடவுள் தனக்கு மகிமையும் புகழும் சேருவதற்காக இப்படியெல்லாம் செய்தார்.

  • 2 தெசலோனிக்கேயர் 2:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 இருந்தாலும், யெகோவாவின்* அன்பைப் பெற்ற சகோதரர்களே, உங்களுக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; நீங்கள் சத்தியத்தின்மீது விசுவாசம் வைத்ததால் அவர் தன்னுடைய சக்தியால் உங்களைப் பரிசுத்தமாக்கி,+ மீட்பதற்காக ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார்.+

  • 1 பேதுரு 1:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 ஏனென்றால், அழியக்கூடிய விதையால் அல்ல,+ அழியாத விதையால்,* என்றென்றும் இருக்கிற உயிருள்ள கடவுளுடைய வார்த்தையின் மூலம்+ நீங்கள் புதிய பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்