16 அதனால், அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை நாம் தயக்கமில்லாமல் அணுகுவோமாக.+ அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம்.
14 கடவுளுடைய விருப்பத்துக்கு* ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்+ என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.*+