தீர்மானங்களைச் செய்வதில் உங்களுக்குப் பிரச்னை இருக்கிறதா?
“உனக்குப் பிடித்திருக்கிறதா? நான் அதை வாங்கட்டுமா?” என்பதாக தன் மேலே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த கறுப்பு நிற மேற்சட்டையை காண்பித்தபடியே கேட்டாள் ஃப்ளோரா. “எனக்குப் பிடித்திருக்கிறது” என்று சொன்னாள் அவள் சிநேகிதி ஆனா. “ஆனால் தெரிவு உன்னுடையது.” முடிவுக்கு வர முடியாததால் சோர்வுற்று ஃப்ளோரா மேற்சட்டையை நிலையடுக்கில் திரும்ப வைத்துவிட்டு கடையைவிட்டு புறப்பட்டாள்.
வீட்டுக்கு வந்து 15 நிமிடத்திற்குள் ஃப்ளோரா, “நான் அந்த மேற்சட்டையை வாங்கியிருக்க வேண்டும்” என்று உணர்ச்சியோடு சொன்னாள்! அடுத்த நாள் காலை அந்தக் கடைக்கு அவர்கள் திரும்பிவந்தார்கள். ஆனால் அது மிகவும் பிந்திவிட்டது. மேற்சட்டை போய்விட்டது—வேறு ஒருவருக்கு விற்கப்பட்டுவிட்டது.
தனிப்பட்ட ஒரு தீர்மானத்தை நீங்கள் எதிர்ப்படுகையில், நீங்கள் வருத்தத்தோடு போரடி, காலந்தாழ்த்தி, கடைசியாக வேறு ஒருவரை உங்களுக்காகத் தீர்மானிக்கும்படி கேட்கிறீர்களா? தீர்மானம் செய்யப்பட்ட பின்னர், வித்தியாசமான ஒரு தெரிவு மேலானதாக இருந்திருக்கும் என்பதாக நீங்கள் யோசிப்பதுண்டா? அப்படியானால் ஒருவேளை மேலே சொல்லப்பட்ட ஃப்ளோராவின் அனுபவமும் உங்களுடையதும் ஒன்றே என நீங்கள் காணமுடியும். தீர்மானம் செய்வது எத்தனை கடினமானது என்பது உங்களுக்குத் தெரியும்.
இருந்தபோதிலும், நீங்கள் அதிக இலகுவாகவும் இன்பமாகவும் தீர்மானங்களைச் செய்ய கற்றுக்கொள்ள முடியும். எவ்விதமாக?
உங்கள் கவலையைக் குறைத்துக் கொள்ளுங்கள்
ஒரு தீர்மானத்தோடு போரடுகையில், ஒரே ஒரு தெரிவு மாத்திரமே வெற்றிபெறும் என்பது போல சரியான தெரிவை செய்வது குறித்து நீங்கள் கவலையோடு மட்டுக்குமீறி அமளி செய்கிறீர்களா? அப்படியென்றால், இது அபூர்வமாகவே அவசியமாக இருக்கிறது என்பதைக் கற்றறிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். முடிவெடுக்க தயங்கும் நிலையை மேற்கொள்ளுதல் புத்தகத்தில், டாக்டர் தியோடர் ஐசக் ரூபின் குறிப்பிடுவதாவது: “தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது பெரும்பாலும் எப்பொழுதும் தீர்மானம் செய்பவராகவே இருக்கிறாரே அல்லாமல், குறிப்பிட்ட தெரிவு அல்ல. . . . ஒரு தீர்மானத்தின் தோல்வி தெரிவை சம்பந்தப்பட்டதாக இல்லை. ஆர்வமுள்ள ஈடுபாடு குறைவுபடுவதே தோல்விக்கு நேரடியாக காரணமாயும் அதோடு தொடர்புடையதாயும் இருக்கிறது.”
ஆம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு தெரிவு உறுதியுடன் தொடரப்படுமேயானால் அது வெற்றிபெற முடியும். ஆகவே செய்யப்பட்ட தீர்மானத்தை முழு இருதயத்தோடு ஆதரியுங்கள். இது, தீர்மானம் செய்வதோடு சம்பந்தப்பட்ட அதிகமான பதற்றத்தைக் குறைத்துவிடும்.
ஆனால் நீங்கள் எவ்விதமாக உண்மையில் தீர்மானத்தைச் செய்யக்கூடும்?
முறையாகச் சிந்தியுங்கள்
விசேஷமாக நீண்ட–கால அம்சங்களைக் கொண்ட ஒரு தீர்மானத்தை எடுக்கையில் இது முக்கியமாகும்: விலைகொடுத்து முக்கியத்துவமுள்ள ஒரு பொருளை வாங்குவது; ஒரு வீட்டை, ஒரு வாழ்க்கைப் பணியை, ஒரு வாழ்க்கைத் துணையை தெரிந்து கொள்வது. உங்கள் மனது ஒரு சிந்தனையிலிருந்து மற்றொன்றுக்கு கவலையோடு தாவிக்கொண்டிருப்பதற்கு இருக்கும் எந்த ஒரு மனச்சாய்வையும் எதிர்த்துப் போரடுங்கள். முதலாவதாக உங்களுக்குத் தேவையான உண்மைகளைச் சேகரியுங்கள். பின்னர், ஒரு தாளில், உங்கள் தெரிவுகளைப் பட்டியல் போட்டுப் பாருங்கள். ஒவ்வொரு தெரிவையும் எடுத்துக்கொண்டு அதன் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் பட்டியலாகத் தயாரித்து உங்கள் தேவைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்தவர்களாக இருந்தால்—உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள், மதிப்பீடுகள், முந்துரிமைகள், பலங்கள் மற்றும் பலவீனங்கள்—எந்தத் தெரிவு உங்கள் அதிமுக்கியமான தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதைக் காணும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
உடனடியாக ஒரு கால வரம்பை நீங்கள் எதிர்ப்பட்டாலொழிய, உங்கள் மெய்யான உணர்வுகள் மேலெழுந்து வர அனுமதிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். செயல்முறையில் அவசரப்பட்டு முன்னேறுவது தீர்மானிக்கும் உங்கள் திறமைகளை வெறுமென உள்ளடக்கி வைக்க மட்டுமே செய்யும். உண்மையில் ஒரு சமயத்தில் ஒன்று என்பதாக ஒவ்வொரு தெரிவோடும் மனதில் பல நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள்கூட வாழ்க்கை நடத்துவது இன்பமாக இருக்கக்கூடும். டாக்டர் ஹரால்ட் H. ப்ளூம்ஃபீல்டு குறிப்பிடுகிறார்: “ஒரு பிரச்னை அல்லது தீர்மானத்தோடு அவர்கள் போரடிக்கொண்டிருக்கும் வரை கவலை, கஷ்டம் மற்றும் பதற்றம் தவிர்க்க முடியாதது என்பதாக அநேக ஆட்கள் நினைக்கிறார்கள்.” ஆனால் உங்கள் தீர்மானம் உறுதிப்படும்வரை நீங்கள் மகிழ்ச்சியைத் தள்ளிப் போட வேண்டியதில்லை. தீர்மானம் செய்யும் அந்தச் செயல்முறையையே அனுபவித்துக் களிப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அது வாழ்க்கையின் ஒரு பாகமாக, துணிவைக் கேட்பதாயும் பயனளிப்பதாயும் இருக்கிறது.
‘ஆனால் எனக்கு இன்னும் குழப்பமாயிருக்கிறது!’
உங்கள் தெரிவுகளை முறையாகச் சிந்தித்தப் பின்பு இன்னும் நீங்கள் தீர்மானிக்காதவர்களாகவே இருந்தால் அப்போது என்ன? நீங்கள் என்ன செய்யக்கூடும்? நண்பர் ஒருவருடைய உதவியை நீங்கள் நாட வேண்டுமா?
தன்னம்பிக்கையில் குறைவுபட்டவர்களாகச் சிலர் எப்போதும் மற்றவர்கள் தங்களுக்காக தீர்மானிப்பதை விரும்புகிறார்கள். நிச்சயமாகவே, உங்களுடைய அறிவு மற்றும் அனுபவத்தின் செயற்பரப்பைக் காட்டிலும் அதிகத்தைத் தேவைப்படுத்தும் ஒரு காரியத்தை நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், தகுதியுள்ள ஒரு நபரிடமிருந்து ஆலோசனையை நீங்கள் நாடுவது பொறுப்பை கடத்திவிடுவதாகாது. உங்களுடையதைப் போன்ற தீர்மானங்களை வெற்றிகரமாகச் செய்திருப்பவர்கள் உங்களுக்கு உதவிசெய்ய கூடுதலான தெரிவுகளையும் உண்மைகளையும் உங்களுக்குத் தரக்கூடும். (நீதிமொழிகள் 15:22) என்றபோதிலும், காரியங்களை முழுமையாக உங்கள் திறமைக்கு ஏற்ப சிறந்த முறையில் சிந்தித்துவிட்டிருப்பீர்களேயானால் நீங்கள் உதவிக்காக தேடிக் செல்லும் நபர் உங்கள் வேண்டுகோளை அதிக உள்ளார்ந்த அக்கறையோடு எடுத்துக்கொள்வார்.
கடைசி தெரிவைச் செய்வது கடினமாக இருக்குமானால், தீர்மானங்களைச் செய்வது பெரும்பாலும் எப்பொழுதும் எதிர்பாரா இன்னல்களை உட்படுத்துகிறது என்பதை நினைவில் வையுங்கள். வெற்றியைக் குறித்து நீங்கள் முழுமையாக நிச்சயமாயிருக்கும் வரை ஒரு தெரிவை செய்ய உங்களுக்கு பயமாக இருந்தால், நீங்கள் தீர்மானம் செய்யாதவர்களாகவே இருப்பீர்கள், ஏனென்றால் அநேக தீர்மானங்கள் அநிச்சயத்தை உட்படுத்துகின்றன. அவை நிகழக்கூடியதன் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். (பிரசங்கி 11:4) பெரும்பாலான விஷயங்களில், எந்த ஒரு தெரிவும் எல்லா அனுகூலங்களையும் உடையதாயிருப்பதில்லை. நீங்கள் எந்தத் தெரிவைச் செய்தாலும், எதையாவது தியாகம் செய்யவேண்டியதாயிருக்கும். ஆகவே பெரும்பாலும் சிறந்ததாக இருக்கும் ஒரு தெரிவைச் செய்து மேலும், . . .
உங்கள் தீர்மானத்தை ஆதரியுங்கள்!
நீங்கள் தீர்மானம் ஒருமுறை செய்துவிட்டீர்களேயானால், இரண்டாம் முறை ஊகிப்பு செய்வதற்கான சோதனையை எதிர்த்திடுங்கள். ‘ஒருவேளை நாம் இப்படி செய்திருக்க வேண்டும்’ என்பதாக உங்கள் மனம்போன போக்கில் நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு சமயமும் நீங்கள் உங்களுடைய தீர்மானத்தை ஆதரித்து அதை செயல்பட வைப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடிய ஆற்றலை நீங்கள் உங்களிடமிருந்து பறித்துக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே வித்தியாசமான ஒரு தெரிவை நீங்கள் செய்திருந்தால், காரியங்கள் எவ்விதமாக இருந்திருக்கும் என்பதாக நினைத்துப் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டிராதேயுங்கள். மனமாற்றம் தேவையாக இருப்பதை நிரூபிக்கும் தெளிவான அத்தாட்சி வெளிப்பட்டுத் தோன்றினாலொழிய நீங்கள் தள்ளிவிட்ட தெரிவுகளை பின்வைத்து விடுங்கள். உங்கள் தீர்மானத்துக்கு முன்னால் உங்கள் சக்தியை வையுங்கள்.
சுருக்கமாகச் சொல்ல: முறையாகச் சிந்தித்து, பெரும்பாலும் வெற்றிப்பெறக்கூடிய தெரிவைத் தெரிந்துகொண்டு முழு இருதயத்தோடு செய்யப்பட்ட தெரிவை ஆதரியுங்கள். உங்களுடைய ஒருசில தீர்மானங்கள் மற்றவைகளைக் காட்டிலும் மேம்பட்ட விளைவுகளை உண்டுபண்ணுவது தவிர்க்கமுடியாததாகும். என்றபோதிலும், தனிப்பட்ட தீர்மானங்களைச் செய்யும் மற்றும் ஆதரிக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கையில் உங்கள் திறமையும் நம்பிக்கையும் வளரும். (g90 2/8)
[பக்கம் 19-ன் பெட்டி]
தீர்மானம் செய்கையில் ஒருசில அடிப்படைக் கட்டங்கள்
1: தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயத்தில் உட்பட்டிருக்கும் சாத்தியங்களை, விருப்பங்களை, அல்லது தெரிவுகளைப் பட்டியல் போடுவதும் கூர்ந்து கவனிப்பதும்
2: சாத்தியமான ஒவ்வொரு தெரிவையும் குறித்து தாராளமாக உணர்ச்சிகளும் எண்ணங்களும் தடைபடாது எழுவதை விடாது ஊக்குவிப்பது
3: நிர்ணயிக்கப்பட்ட முந்துரிமைகளைத் தெரிவுகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பது
4: ஒரே ஒரு தெரிவை தனிப்பட குறிப்பிடுவதன் மூலம் முடிவுக்கு வருவதும் தெரிந்துகொள்ளாதவற்றை தள்ளுபடிசெய்ய ஆரம்பிப்பதும்
5: உணர்ச்சிகள், எண்ணங்கள், நேரம் மற்றும் சக்தியை ஈடுபடுத்த உறுதியாக இருப்பதும் உபயோகப்படுத்தப்படாத விருப்பங்களை விலக்கிவிடுவதை நிறைவேற்றுவதும்
6: தீர்மானங்களை நல்நம்பிக்கையுள்ள செயல்களாக மாற்றுவது