‘அவர்கள் பழக்கமாய்ச் சிரிப்பதுண்டு’
சிறிது காலத்துக்கு முன்பாக ஆட்கள், பைபிளைப்பற்றிப் பேசுவோரைப் பார்த்து சிரிப்பதுண்டு. ஆனால் காலங்கள் மாறிவிட்டன என்று ஹங்கேரியில் படையில் சேவித்துக்கொண்டிருந்த ஒருவர் கூறுகிறார். இந்தப் போர்ச்சேவகர் சமீபத்தில் புடபெஸ்ட்டிலுள்ள உவாட்ச் டவர் சொஸயிட்டியின் அலுவலகத்துக்கு எழுதி, பின்வருமாறு கூறினார்:
“சில நாட்களுக்கு முன்னால், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற உங்கள் பிரசுரத்தை நான் வாசித்தேன். நான் அதைப் படித்து முடிக்கும் வரை அதை எனக்குக் கடனாக ஒருவர் தந்தார். அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது என் உள்ளத்தை ஆழமாய்த் தொட்டு என்னைச் சிந்திக்கும்படி செய்திருக்கிறது.” இந்தப் போர்ச்சேவகர் ஒரு பைபிளும் மேலுமான தகவலும் வேண்டுமெனக் கோரினார். இத்தகைய பிரதிபலிப்பு கிழக்கத்திய ஐரோப்பாவில் இப்பொழுது சாதாரணமாயுள்ளது.
புடபெஸ்ட் அலுவலகம் பெற்ற மற்றொரு கடிதம் பின்வருமாறு சொல்லுகிறது: “நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். இந்தப் புத்தகம் என் உள்ளத்தை வெகு ஆழமாய் உறுத்தியுள்ளது, என்னோடு ஒழுங்காய் பைபிள் படிக்கக்கூடும்படி ஒரு சாட்சி என் வீட்டுக்கு வரவேண்டுமெனக் கேட்பதற்காக நான் உங்களுக்கு எழுதுகிறேன்.”
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகமானது பைபிளின் பதில்களை உங்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டுவதால் நம்பிக்கை அளிக்கிறது. பலருடைய வாழ்க்கைகளை மாற்றுவதில் இது கருவியாகப் பயன்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், பின்வரும் கூப்பனைத் தயவுசெய்து நிரப்பி தபாலில் அனுப்புங்கள்.
[பக்கம் 32-ன் படம்]
நல்ல காரணத்துடனேயே, பெற்றோர், மிகவும் நேசிக்கப்படுகிற பிள்ளை வேதனையான இரண சிகிச்சைக்கு உட்படும்படி அனுமதிப்பர். கடவுளுங்கூட, மனிதர் துன்பப்படும்படி தற்காலிகமாக அனுமதிப்பதற்கு நல்ல காரணங்களை உடையவராய் இருக்கிறார்