உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 1/8 பக். 26-27
  • யார் பரலோகத்துக்குச் செல்வர்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யார் பரலோகத்துக்குச் செல்வர்?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பரலோகத்தில் இல்லாதவர்கள்
  • இயேசு வழியைத் திறந்தார்
  • ஒரு பரலோக ராஜ்யம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் குழு
  • யார் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்? ஏன்?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 1/8 பக். 26-27

பைபிளின் கருத்து

யார் பரலோகத்துக்குச் செல்வர்?

ஒரு பெரிய விமானம் பறந்து கொண்டிருக்கையில், பயங்கரவாதியின் குண்டு ஒன்று அதை வெட்டிப் பிளந்து உள்ளேயிருந்த அனைவரையும் கொன்று போட்டது. அந்த மோசமான சம்பவத்துக்குப் பலியானவர்களின் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இவ்வாறு சொல்லப்பட்டது: அவர்களுடைய அன்பானவர்கள் இப்போது பரலோகத்தில் இருக்கின்றனர், அது அவர்களுடைய எதிர்பாராத வன்முறையான மரணத்தை ஈடுசெய்வது போல் சொல்லப்பட்டது.

ஒரு பிரபலமான இசைக்கலைஞர் மரித்துப் போகிறார், ‘பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களோடு எக்காளம் வாசித்துக் கொண்டிருப்பதாக’ சொல்லப்படுகிறது.

நோய், பஞ்சம் அல்லது விபத்துக்கள் போன்றவை குழந்தைகள் ஒரு முழு வாழ்க்கையை அனுபவிக்காதபடி தடைசெய்து விடுகின்றன. அக்குழந்தைகள் இப்போது பரலோகப் பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று குருமார் சொல்கின்றனர், ஒருவேளை தேவதூதர்களாகவும்கூட இருக்கலாம்!

அப்படிப்பட்ட எல்லா ஆட்களையும் பரலோக சமாதானத்தில் தன்னோடு இருக்க எடுத்துக் கொள்வதன் மூலம் இளைஞருக்கும் வயதானவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அநீதியை கடவுள் திருத்திக் கொண்டிருக்கிறாரா? அப்படிப்பட்டவர்களைப் பரலோகத்துக்குள் அனுமதிப்பது, மனிதவர்க்கத்தில் இருக்கும் எல்லா நன்மையானவற்றையும் புகழுக்குரியவற்றையும் பாதுகாப்பதற்கு வெறுமனே கடவுளுடைய வழியாக இருக்கிறதா? பைபிளின் கருத்து என்ன?

பரலோகத்தில் இல்லாதவர்கள்

பைபிளின் கூற்று தெளிவாக உள்ளது: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?” (1 கொரிந்தியர் 6:9) என்றபோதிலும், அநேக நீதிமான்களும் அநீதிக்குப் பலியானவர்களும் பரலோகத்தைச் சுதந்தரிப்பதில்லை என்றும்கூட பைபிள் பேசுகிறது.

சீக்கிரத்தில் இரத்தசாட்சியாக மரிக்கப்போகும் யோவான்ஸ்நானனைக் குறித்து இயேசு சொன்னார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.” (மத்தேயு 11:11) துன்மார்க்க அரசனாயிருந்த ஏரோது குழந்தை இயேசுவை அழித்துப்போட முயற்சி செய்த போது பெத்லகேமிலும் அதன் மாகாணங்களிலுமிருந்த எல்லா இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் இரக்கமின்றி அவனால் கொல்லப்பட்டனர். (மத்தேயு 2:16) இருப்பினும் இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருந்திறங்கின மனுஷகுமாரனேயல்லாமல் [இயேசு] பரலோகத்துக்கு ஏறினவன் [அல்லது ஏறினவள் அல்லது ஏறின பிள்ளை] ஒருவனுமில்லை.” (யோவான் 3:13, NW) அநீதிக்குப் பலியான இவர்கள் பரலோகத்தில் இருப்பதாக இயேசு ஏன் சொல்லவில்லை?

இயேசு வழியைத் திறந்தார்

இயேசு “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று தம்மை அழைத்துக் கொண்டார். மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் அவரை “மரித்தோரிலிருந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்” என்று குறிப்பிட்டார். (யோவான் 14:6; 1 கொரிந்தியர் 15:20) இதன் காரணமாக பரலோகத்துக்குள் வேறு எவரும் அவருக்கு முன் சென்றிருக்க முடியாது. ஆனால் இயேசு தம் உயிர்த்தெழுதலுக்குப் பின் 40 நாட்கள் கழித்து பரலோகத்துக்கு எழுந்தருளிப் போன போது, ஏற்கெனவே மரித்திருந்த விசுவாசமுள்ள தகுதிவாய்ந்த ஆண்கள் அவருக்குப் பின் பரலோகத்துக்குச் சென்றனரா? பத்து நாட்களுக்குப் பிறகு, அப்போஸ்தலனாகிய பேதுரு தாவீது ராஜாவைப் பற்றி பின்வருமாறு சொன்னார்: “அவன் மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது . . . தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே.”—அப்போஸ்தலர் 2:29, 34.

ஆக, பரலோகத்துக்குள் அனுமதிக்கப்படுவது ஒருவர் அனுபவித்த அநீதிகளுக்காக ஈடுசெய்வதைக் காட்டிலும் அல்லது தனிப்பட்டவிதமாக உண்மைத்தன்மையை காண்பித்ததற்கு ஒரு வெகுமதியாக இருப்பதைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது. மாறாக, ஆட்சியாளர் தொகுதி ஒன்று பரலோகத்தில் உருவாக்கப்படுவதை அது சாத்தியமாக்குகிறது. இந்தத் தொகுதி பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டு கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ் உள்ள பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் அமைந்த மனிதர்கள் அடங்கியது.—ரோமர் 8:15-17; வெளிப்படுத்துதல் 14:1-3.

ஒரு பரலோக ராஜ்யம்

இயேசு இந்த ஆட்சியை அல்லது அரசாங்கத்தை “பரலோக ராஜ்யம்” அல்லது “தேவனுடைய ராஜ்யம்” என்று குறிப்பிட்டார். (மத்தேயு 5:3, 20; லூக்கா 7:28) மனிதகுலத்தின் பெரும் ஜனத்திரள்கள் இந்த நிர்வகிக்கும் குழுவில் அடங்கியிருக்கும்படி உத்தேசிக்கப்படவில்லை. இவ்வாறாக இயேசு அதை “சிறுமந்தை” என குறிப்பிட்டார். (லூக்கா 12:32) பைபிளின் இந்தப் பகுதியில் உபயோகிக்கப்பட்டிருக்கும் மூல மொழியில் “சிறு” (mi·krosʹ) என்ற வார்த்தை பெரிய (meʹgas) என்பதற்கு எதிர்ப்பதமாக இருக்கிறது, லூக்கா 12:32-ல் அதன் உபயோகம் அளவில் அல்லது எண்ணிக்கையில் குறைவானதைக் குறிப்பிடுகிறது. எனவே ‘பரலோக ராஜ்யத்தின்’ அங்கத்தினர்களாயிருப்பது அளவில்லாத எண்ணிக்கையுள்ளவர்களுக்கு அல்ல. உதாரணமாக, ஒரு குவளையில் சிறிது தண்ணீர் ஊற்றும்படி உங்களிடம் கேட்டால், அது நிரம்பி வழியாதபடி கவனமாய்ப் பார்த்துக் கொள்வீர்கள். அதேவிதமாக ‘சிறுமந்தையும்’ நிரம்பி வழியும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அடங்கியதாக இருக்க முடியாது. கடவுளுடைய ராஜ்யம் ஒரு குறிப்பிட்ட (“சிறு”) எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்துவின் உடன் ஆட்சியாளர்களைக் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சியாளர்களின் சரியான எண்ணிக்கை 1,44,000 என்பது, அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 14:1, 4) வெளிப்படுத்துதலில் இதற்கு முந்திய பகுதியில் இதே நபர்கள் ‘சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் ஆக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அவர்கள் பரலோகத்திலிருந்து பூமியின் மேல் அரசாளுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (வெளிப்படுத்துதல் 5:9, 10) இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்த இந்த நிர்வகிக்கும் குழுவே அவர் தம்மைப் பின்பற்றுபவர்கள் ஜெபிக்கும்படி கற்பித்த ராஜ்யம் ஆகும். மேலும் இந்தப் பூமியின் மோசமான ஆட்சி இதன் மூலமாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மனிதனின் வீடாகிய இந்த பூமியில் நீதியும் சமாதானமும் நிலைநாட்டப்பட்டு, அதில் வாழ்வோருக்கு நித்திய உயிர்வாழ்வுத் திறன் அளிக்கப்படும்.—சங்கீதம் 37:29; மத்தேயு 6:9, 10.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் குழு

இந்த ராஜ்யம் நீக்கப்போகிற மனித ஆட்சிகள் அவ்வளவு அதிகமாக ஊழல் நிரம்பியதாய் இருப்பதால், அந்தப் பரலோக அரசாங்கத்தில் சேர்க்கப்படுபவர்கள் கடவுளால் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரீட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் காண முடிகிறதல்லவா? மனிதகுலத்தின் தற்போதைய நிலைமையை மோசமான வானிலையில் சிக்கியுள்ள பழுதடைந்த ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளின் நிலைமைக்கு ஒப்பிடலாம். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில் விமான ஓட்டிகள் அனுபவமில்லாத இளைஞராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா? நிச்சயமாகவே அல்ல! அப்படிப்பட்ட நிலைமை கண்டிப்பானத் தகுதிகளுக்கு ஏற்ப தெரிந்தெடுக்கப்பட்ட விமான ஓட்டிகளின் தொகுதி ஒன்றைத் தேவைப்படுத்தும்.

பரலோகத்தில் கிறிஸ்து இயேசுவுடன் சேவிக்கப் போகிறவர்களைக் குறித்து “தேவன் தமது சித்தத்தின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்தில் வைத்தார்” என்பதை அறிவது நமக்கு நிம்மதி அளிக்கிறது. (1 கொரிந்தியர் 12:18) இராஜ்யத்தில் ஸ்தானத்தை ஒரு தனிப்பட்ட நபர் விரும்புவதையோ அல்லது நாடுவதையோப் பொறுத்து இது நிர்ணயிக்கப்படுவதல்ல. (மத்தேயு 20:20-23) தகுதியற்றவர்கள் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக விசுவாசம் மற்றும் நடத்தை போன்றவற்றிற்குத் திட்டவட்டமான தராதரங்கள் தேவனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. (யோவான் 6:44; எபேசியர் 5:5) இயேசுவின் மலைப்பிரசங்கத்தின் ஆரம்ப வார்த்தைகள் கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்வோர் ஆவிக்குரிய-மனப்பான்மையுள்ளவர்களாகவும் சாந்தகுணமுள்ளவர்களாகவும் நீதியை நேசிப்பவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாகவும் சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் நிரூபிக்க வேண்டும் என்று காண்பிக்கின்றன.—மத்தேயு 5:3-9; வெளிப்படுத்துதல் 2:10-ஐயும் பார்க்கவும்.

மகிழ்ச்சிகரமாக, இந்தப் பரலோகப் பிரதிநிதித்துவ ஆட்சியாளர் குழுவில் இருப்பதற்கு கடவுளால் தெரிந்தெடுக்கப்படாதபோதிலும், மனிதகுலத்தின் பெரும்பான்மையானோர் நம்பிக்கையின்றி விடப்படுவதில்லை. இந்த அழகான பூமியில் அவர்கள் வாழ்ந்து அவருடைய தெய்வீக அரசாட்சியின் நன்மைகளை அனுபவிப்பர். கடந்தகால அநீதிகளுக்கு இலக்காகி வெகு காலத்துக்கு முன்பு மரித்த நபர்கள் உயிரடையும்படி செய்யப்பட்டு கடவுளுடைய ராஜ்யம் முழுமையான அர்த்தத்தில் ‘வருவதை’ காணும்படி தப்பிப்பிழைப்பவர்களோடு சேர்ந்து வாழ்வர். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்” என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும்.—மத்தேயு 6:9, 10; நீதிமொழிகள் 2:21; அப்போஸ்தலர் 24:15.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்