மன இறுக்கத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவி
அ.ஐ.மா.-வின் நியூ ஜெர்ஸியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண் மன சங்கடத்தினால் வகுப்பறையைவிட்டு ஓடினாள். அவளுடைய வகுப்பு மாணவி ஒருத்தி பெண்கள் கழிவறைக்கு அவளைப் பின்தொடர்ந்து சென்றாள். அந்த வகுப்பு மாணவி சொன்னாள்: “நான் சென்றபோது அவள் அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய குடும்பப் பிரச்சினைகளில் கொஞ்சத்தை என்னிடம் சொன்னாள். அவளுடைய பெற்றோர்கள் மணவிலக்கு செய்யவிருந்தனர், அதன் காரணமாக பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்துவது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக சொன்னாள். வீட்டைவிட்டு ஓடிவிடவேண்டும் போலிருந்ததாக என்னிடம் சொன்னாள்.”
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற தனது புத்தகத்தை துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தப் பெண்ணுக்காகக் கொண்டுவர ஆசைப்படுவதாக அந்த வகுப்பு மாணவி அவளிடம் சொன்னாள். அடுத்த நாள் அவள் அதைக் கொண்டுவந்தாள். “நான் ஏன் ‘என் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணவேண்டும்’?,” “அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?,” “சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்?,” “நான் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லவேண்டுமா?” போன்ற அதிகாரங்களின் தலைப்புகளை அவளுக்காக அடையாளமிட்டிருந்தாள்.
அந்த வகுப்பு மாணவி சொன்னதாவது: “அவளுக்கு நான் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தபோது, வேறு இரண்டு இளம்பெண்கள் அதைப் பார்த்து ஆர்வமடைந்தனர். அவர்களுக்கும்கூட ஒரு பிரதி கிடைக்குமா என்று கேட்டனர். ஆகவே அவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் பிரதியை ஆளுக்கொன்று கொடுத்தேன். என்னுடைய வகுப்பில் இருந்த மற்ற பிள்ளைகள் மாணவிகளில் ஒருத்தி அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவர்கள் அனைவரும் அதைப் பார்க்க விரும்பினர். ஆசிரியரின் அனுமதியோடு அந்தப் புத்தகம் அந்த வகுப்பறையில் உள்ள எல்லாருடைய கைகளுக்கும் சுற்றிவருவதில் முடிவடைந்தது.”
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தின் ஒரு பிரதியை நீங்கள் பெற விரும்பினால் அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என்று விரும்பினால், தயவுசெய்து Watch Tower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.