விழித்தெழு! ஓர் உயிரைக் காப்பாற்ற உதவியது
ஈக்வடாரில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தன் காரை மெக்கானிக் பழுதுபார்த்து முடிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார்; மெக்கானிக்கின் மனைவி, சாட்சியிடம் தன்னுடைய ஆண் குழந்தை பைரனைக் குறித்து தான் கவலைப்படுவதாகச் சொன்னாள். வாரத்தில் ஐந்து அல்லது ஆறு முறையாவது அவனுக்கு வலிப்பு ஏற்படும்; டாக்டர்களால் நோயை அறிய முடியவில்லை. தலைநகரமான க்விடோவிலுள்ள நிபுணர்களிடம்கூட பைரன் கொண்டு செல்லப்பட்டிருந்தான்.
சாட்சி இவ்வாறு விளக்கினார்: “அந்தத் தாயுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு வேலையாள் ஒரு காரை பெயின்ட் செய்துகொண்டிருப்பதைக் கவனித்தேன்; ஈய நச்சூட்டுதலின்பேரிலான விழித்தெழு! கட்டுரை என் ஞாபகத்திற்கு வந்தது. ஈய நச்சூட்டுதலின் அறிகுறிகளில் ஒன்று வலிப்புகள் என்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. நான் அந்தக் கட்டுரையை எடுத்து வருவதாக அந்தப் பெண்ணிடம் சொன்னேன்.”
பைரனின் பெற்றோர் அந்தக் கட்டுரையை வாசித்தபோது, தங்களது மகனுக்கு ஈய நச்சூட்டுதலுக்கான பரிசோதனையைச் செய்தனர். பைரனின் இரத்தத்தில் அதிக அளவு ஈயம் காணப்பட்டது. மருத்துவ சிகிச்சையும், ஈயத்தின் பாதிப்புக்கு ஆளாவதைத் தவிர்த்ததும் பைரனின் ஆரோக்கியம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதில் விளைவடைந்தது. “கடந்த நான்கு மாதங்களாக ஒருமுறைகூட வலிப்பு அவனுக்கு வந்ததில்லை. அதுமுதற்கொண்டு அவனது அப்பா அநேக டாக்டர்களிடம் அந்த நோயைப் பற்றி பேசியிருக்கிறார், தனது மகனின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவர் எப்போதுமே விழித்தெழு!-வைப் பாராட்டுகிறார். இப்போது இந்த டாக்டர்களில் சிலரும்கூட விழித்தெழு!-வை வாசிக்கின்றனர்,” என்பதாக சாட்சி சொன்னார்.
விழித்தெழு!-வை வாசிப்பதிலிருந்து நீங்களும் நன்மையடைவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் ஒரு பிரதியைப் பெற விரும்பினாலோ உங்களுடன் பைபிளைக் கலந்தாலோசிக்க எவரேனும் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திக்க விரும்பினாலோ தயவுசெய்து, Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.