உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 9/8 பக். 17-18
  • அழகான மரங்களின் ஓர் உலகை ஆராய்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அழகான மரங்களின் ஓர் உலகை ஆராய்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அழகும் கம்பீரமும்
  • பருவகாலத்திற்குரிய உவகைகள்
  • விஞ்ஞான நிர்வாகம்
  • கடலோரக் காடுகளின் இராட்சதர்களைப் பெருக்குதல்
    விழித்தெழு!—1993
  • ‘யெகோவாவின் மரங்கள் திருப்தியடைகின்றன’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • காலத்தின் பரீட்சையை தாங்கிநிற்கும் மரங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
விழித்தெழு!—1996
g96 9/8 பக். 17-18

அழகான மரங்களின் ஓர் உலகை ஆராய்தல்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்

இங்லிஷ் காட்ஸ்வோல்ட்ஸில் உள்ள ஒரு கிராமமாகிய வெஸ்டன்பர்ட், அதன் தாவரவியல் தோட்டத்திற்கு (arboretum) புகழ்பெற்றது. a இது, உலகிலுள்ள மரங்கள் மற்றும் குத்துச்செடிகளின் மிகப் பழமையான, மிகப் பெரிதான, மிக நேர்த்தியான தொகுப்புகளில் ஒன்று. இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நாம் அதைப் பார்ப்போமாக.

அழகும் கம்பீரமும்

“இந்தத் தொகுப்பின் அழகினாலும் கம்பீரத்தினாலும் நேர்த்தியினாலும் கவரப்படாதவர்கள் எவருமே இல்லை,” என்பதாக அதன் காப்பாளரான ஹயூ ஆங்கஸ் சொல்கிறார். மறுபடியும் மறுபடியுமாக வந்துபார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, அவர் சொல்வது சரியென தோன்றுகிறது.

தாவரவியல் தோட்டம் 18,000 மரங்களையும் குத்துச்செடிகளையும் கொண்டுள்ளது; அது, உலகின் நடுவெப்பநிலை மண்டலங்களில் வளரும் 9,000 இனங்களில் மற்றும் வகைகளில் கிட்டத்தட்ட பாதியளவை பிரதிநிதித்துவம் செய்கிறது. 600 ஏக்கர் பூங்காவினூடே வருகையாளர்கள் உல்லாசமாக சுற்றிப்பார்க்கலாம்; ஆனால் முழுமையான சந்தோஷத்தைப் பெற அவர்களுக்கு உதவுவதற்கு, “தாவரவியல் தோட்டத்தை நான்கு பகுதிகளாக பிரித்திருக்கிறோம், ஒவ்வொன்றையும் சென்றுபார்ப்பதற்கு பொருத்தமான சமயங்களை பரிந்துரைக்கிறோம்,” என்பதாக காரியாலயத்திற்குரிய வழிகாட்டி புத்தகம் விளக்குகிறது. கூடுதலாக, இலையுதிர்கால வண்ண தடம், மலைகளின் செரி தொகுப்பு, உள்ளூர் இனங்களின் தொகுப்பு போன்ற சிறப்பம்சங்களும் இருக்கின்றன; அவை அனைத்திற்கும் பெயர்ப்பலகைகளும் திசைகாட்டும் வரைபடங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

பருவகாலத்திற்குரிய உவகைகள்

வட அரைக்கோளத்தின் பருவகால சுழற்சி இயற்கையான உவகையாக இருக்கிறது. தாவரவியல் தோட்டத்தில், ஒவ்வொரு பருவகாலமும் அதற்கே உரிய கவர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. பல்வகைப்பட்ட ஊசியிலை மரங்களை ரசிப்பதற்கும் இலைகளின்றி இருக்கும் சமயத்தில் இலையுதிர் மரங்களின் நளினமான வடிவங்கள், கவரத்தக்க இழை அமைப்புகள், வியப்பூட்டும் வண்ணங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதற்கும் குளிர்காலம் மிகச் சிறந்த சமயமாக இருக்கிறது. பின்பு, இளவேனிற்காலத்தில் பூக்கும் குத்துச்செடிகளும் மரங்களும்—அசேலியாக்கள் (azaleas), கமெல்லியாக்கள் (camellias), செரிகள் (cherries), மக்னோலியாக்கள் (magnolias), ரோடோடென்ட்ரான்கள் (rhododendrons)—நேர்த்தியாக காட்சியளிக்கின்றன; வனபூக்களின் தரைவிரிப்பு அந்த அமைப்பிற்கு அழகைக் கூட்டுகிறது.

இலையுதிர் காலம் அல்லது கனிதரும் பருவத்தின் பிரமிக்கத்தக்க தாவரவியல் காட்சிக்குப் முன்னர், கோடை காலத்தின்போது அமைதலான இலைத்தொகுதி தாவரவியல் தோட்டத்தில் காணப்படும். மிகவும் புகழ்பெற்ற இந்தக் கண்கவரும் காட்சியைப் பார்ப்பதற்காக சுமார் 90,000 வருகையாளர்கள் வெஸ்டன்பர்ட்டுக்கு திரண்டு செல்கின்றனர். கருஞ்சிவப்பு நிற ஜப்பானிய மேப்பிள்களின் பல்வகை, கண்காட்சியில் எடுப்பாக காட்சியளிக்கின்றன.

வெஸ்டன்பர்ட்டிலுள்ள ஜப்பானிய மேப்பிள்களின் பழங்காலத்திய ரகங்களில் அநேகம், 1603-1867 வரை நீடித்த எடோ காலத்தின்போது இறக்குமதி செய்யப்பட்ட அசல் செடிகளாக இருக்கலாம். வருந்தத்தக்க விதத்தில், இப்படிப்பட்ட பழங்காலத்திய வகைகளுடைய ஜப்பானிய பெயர்களின் பதிவுகள் எதுவுமில்லை. ஐரோப்பாவில் கொண்டுவரப்பட்டவுடன் மேப்பிள்கள் ஜப்பானில் பிரபலத்தை இழந்தன; ஆகவே இப்போதிருக்கும், முந்தி இறக்குமதி செய்யப்பட்டவற்றை ஜப்பானிய தொகுப்புகளோடோ நர்சரி செடிகளோடோ ஒத்துப்பார்க்க முடியாது. பழங்காலத்திற்குரிய ஜப்பானிய மேப்பிள்கள் அருகிவரும் சமயத்தில், இளம் கன்றுகள் காட்டினுடையே உள்ள வெட்டவெளிகளில் நடப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு மரமும் வித்தியாசமான இலை வடிவத்தையும் வண்ணத்தையும் கொண்டுள்ளன. பழங்காலத்திய மேப்பிள் மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட விதைகளை வைத்து மரங்கள் வளர்க்கப்பட்டன; அவற்றின் இலையுதிர் வண்ணங்களுக்காக அவை தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றிற்கு பாதுகாப்பையும் நிழலையும் அளிப்பதற்காக, மேப்பிள்கள் முதிர்ச்சியான சிந்தூர மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்களிடையே நடப்படுகின்றன. இவை தங்கநிற மற்றும் பச்சைநிற பின்னணியையும் அளிக்கின்றன; இவற்றினூடே இலையுதிர்கால சூரிய ஒளித் தண்டுகள் மேப்பிள்களை பிரகாசிக்க வைக்கின்றன.

விஞ்ஞான நிர்வாகம்

வெஸ்டன்பர்ட் தாவரவியல் தோட்டம் தனிப்பட்ட பொழுதுபோக்காக 1829-ல் துவங்கப்பட்டது, 1956-ல் பிரிட்டிஷ் வனவியல் ஆணயத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டது. இன்பமாய் நேரத்தைக் கழிக்க பொதுமக்களுக்கு உதவுவது மாத்திரமே அதன் குறிக்கோள் அல்ல. உண்மையில், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற ஒரு விஞ்ஞான தொகுப்பை ஏற்படுத்துவதே அதன் முக்கிய குறிக்கோளாகும். இந்த நோக்கத்திற்காக, இனப்பெருக்க முறைகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, அதன் விளைவுகள்—வெற்றிகளும் தோல்விகளும்—மற்ற தாவரவியல் பூங்காக்களோடு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

வெஸ்டன்பர்ட், கம்ப்யூட்டர்மயமான விவரப்பட்டியல் முறை ஒன்றை பயன்படுத்துவதில் முன்னோடியாக இருக்கிறது; அது ஒவ்வொரு ரகத்தின் விவரங்களையும்—அதன் ஆரம்பம், விதையிலிருந்து முதிர்ச்சியடையும் வரையான அதன் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வியாதிக்கான ஏதாவதொரு சிகிச்சை, செத்துப்போவதன் காரணத்தையும்கூட—பதிவுசெய்கிறது. மற்றொரு முக்கியமான வேலை அரிதான அல்லது அசாதாரணமான இனங்களை விருத்தி செய்வதாகும்; அவற்றின் இயற்கை சுற்றுப்புறங்களில் தொடர்ந்திருப்பதில் ஆபத்தை எதிர்ப்படுபவையாக, இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச கூட்டுக்குழுவினால் பட்டியலிடப்பட்டிருப்பவையும் இதில் உட்படும். இனச்சேர்க்கையை தவிர்ப்பதற்காக, விதைகள் நம்பத்தக்க மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன; ரகங்கள் மற்ற தாவரவியல் தோட்டங்களுக்கு கிடைக்கும்படி செய்யப்படுகின்றன.

வெஸ்டன்பர்ட் கல்விபுகட்டும் ஒரு மையமாகவும் இருக்கிறது. மர அடையாளப்படுத்துதல், வன அழிப்பின்பேரில் பேச்சுக்கள், சொற்பொழிவு சுற்றுப்பயணங்கள், மற்றும் ஸ்லைடு ஷோக்கள் ஆகியவற்றின்பேரில் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. வருடத்தின் குறிப்பிட்ட சில சமயங்களில், வருகைதரும் பள்ளிமாணாக்கர்களுக்கு எடுத்துக்காட்டுகளோடு கலந்தாலோசிப்புகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன.

தாவரவியல் தோட்டத்தை நாம் தயக்கத்தோடு விட்டுச்செல்லும்போது, மறக்கமுடியாத அனுபவத்தால் வளமூட்டப்பட்டவர்களாய், மற்ற காலப்பருவங்களின் சிறப்புகளை அனுபவிக்க மறுபடியும் திரும்பிச்செல்ல தூண்டப்படுவதை நாம் உணருகிறோம். மரங்களின் இந்த அழகிய உலகை ஆராய்ந்தது, அவற்றின் கம்பீரத்தையும் பூமியின் உயிர் வாழ்வுமுறையில் அவற்றின் முக்கியத்துவத்தையும்கூட நமக்கு அதிகளவில் உணர்த்தியிருக்கிறது.

[அடிக்குறிப்பு]

a ஆர்பர் (arbor) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது; அதன் அர்த்தம் “மரம்.”

[பக்கம் 17-ன் படங்கள்]

மேலே: லாசனின் ஸிப்ரெஸ்கள்

நடுவே: ஜப்பானிய மேப்பிள்

கீழே: லீபனோனின் கேதுரு மரம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்