‘தயவுசெய்து எனக்கு 100 பிரதிகளைக் கொடுங்கள்’
ஜெர்மனியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஹில்டெகர்ட், அவரது பெண்நோய் மருத்துவருக்கு (gynecologist), பிப்ரவரி 22, 1995, விழித்தெழு! பிரதியை கொடுத்தார். அந்தப் பத்திரிகையில் “மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொடர்கள் இருந்தன.
பின்பு, ஹில்டெகர்டின் மகள் அதே டாக்டரை சந்தித்தபோது, அவர் அந்தக் கட்டுரைகளை வாசித்திருக்கிறார் என்பதை அவள் அறியவந்தாள். அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: “நூறு பிரதிகளை எனக்கு கொண்டுவந்து தரமுடியுமா என்று தயவுசெய்து உன் அம்மாவிடம் கேள்.”
பத்திரிகைகள் கொடுக்கப்பட்டபோது, டாக்டர் இவ்வாறு சொன்னார்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆகிவருகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனால் மாதவிடாய் முடிவுறும் பருவத்தைப் பற்றிய இந்தக் கட்டுரைகள் அவ்வளவு கட்டியெழுப்புவதாய் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக, என் நோயாளிகள் கண்டிப்பாக அதைப் படிக்க வேண்டும்.”
கொஞ்சம் நாட்களுக்குள்ளாகவே, பத்திரிகைகள் அவரது நோயாளிகளால் உடனடியாக பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதை ஹில்டெகர்ட் கேள்விப்பட்டார். உண்மையில், மாதவிடாய் முடிவுறும் பருவத்தின்பேரிலான கட்டுரைகளை மாத்திரமல்லாமல் அந்தப் பத்திரிகையிலிருந்த மற்ற கட்டுரைகளையும் தான் அனுபவித்து மகிழ்ந்ததாக ஒரு பெண் சொன்னாள். ஆகவே கூடுதலான பிரதிகள் வேண்டுமா என கேட்பதற்காக ஹில்டெகர்ட் டாக்டரின் ஆபீஸுக்கு ஃபோன் செய்தார். “இன்னொரு நூறு பிரதிகளை நாங்கள் பெற்றுக்கொள்ளலாமா?” என்று உதவியாளர் கேட்டார்.
விழித்தெழு! பத்திரிகையின் ஒரு பிரதியை நீங்கள் பெற விரும்பினாலோ இலவச வீட்டுப் பைபிள் படிப்பைக் கொண்டிருக்க விரும்பினாலோ, தயவுசெய்து, Watch Tower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.