உங்களுக்குத் தெரியுமா?
(இந்தக் கேள்விகளுக்கான பதில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனங்களில் காணப்படும், எல்லா பதில்களையும் கொண்ட பட்டியல் பக்கம் 22-ல் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலான விவரத்திற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டுள்ள “வேதாகமங்களின்பேரில் உட்பார்வை” என்ற ஆங்கில பிரசுரத்தை பாருங்கள்.)
1. சடப்பொருளாலான இப்பிரபஞ்சத்தை கடவுள் எதைக் கொண்டு படைத்தார்? (ஆதியாகமம் 1:2, NW)
2. ஆகாயவிரிவிலே சுடர்களை படைப்பதன்மூலம் எதற்கு யெகோவா வழிவகுத்தார்? (ஆதியாகமம் 1:14-ஐக் காண்க.)
3. எருசலேம் சுவர்மீதிருந்த யூதர்களிடம் சப்தமாகவும் யூதர்களின் சொந்த பாஷையிலும் பேசுவதன் மூலம் எதைச் சாதிக்க சனகெரிப்பின் ஊழியக்காரர் விரும்பினர்? (2 நாளாகமம் 32:18)
4. நிலத்திலுள்ள களைகளை அகற்றுவதற்கு பூர்வ காலங்களில் எந்த விவசாயக் கருவி பயன்படுத்தப்பட்டது? (ஏசாயா 7:25)
5. பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது பிரதான ஆசிரியர் தன் இருதயத்தின்மீது அணிந்துகொண்டதும் ஊரீமையும் தும்மீமையும் கொண்டதுமான எம்பிராய்டரி செய்யப்பட்ட பரிசுத்த பைக்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டது? (யாத்திராகமம் 28:29, 30)
6. கடவுளுடைய சட்டத்தின்படி, ஒரு காரியத்தை முடிவுசெய்ய குறைந்தபட்சம் எவ்வளவு சாட்சிகள் தேவைப்படுகின்றனர்? (எபிரெயர் 10:28)
7. கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்ற இஸ்ரவேல் போர் வீரனின் பெயரென்ன? (1 நாளாகமம் 20:5)
8. பொல்லாத ராணியாகிய அத்தாலியாளை வெட்டிப்போடும்படி கட்டளையிட்ட பிரதான ஆசாரியன் யார்? (2 இராஜாக்கள் 11:15, 16)
9. தயை காண்பிக்கும்படி கெஞ்சுகையில் யெகோவாவின் “முகத்தை” ஒரு நபர் என்ன செய்யலாமென்று பைபிள் சொல்கிறது? (யாத்திராகமம் 32:11, NW)
10. யாக்கோபின் எந்த மகனுக்கு, அவனது பிறப்பின்போது லேயாள் சொன்னதன் அடிப்படையில், “சுப காரியம்” என அர்த்தப்படுத்தும் பெயரிருக்கிறது? (ஆதியாகமம் 30:11, NW)
11. யெகோவாவின் ஆலயத்தை சாலொமோன் கட்டிய மலையின் பெயர் என்ன? (2 நாளாகமம் 3:1)
12. இயேசுவின் பட்டப்பெயரான “கிறிஸ்து” என்பதற்கு என்ன அர்த்தம்? (அப்போஸ்தலர் 4:26, NW)
13. “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்க” என்ன செய்யப்பட வேண்டுமென்று இயேசு சொன்னார்? (லூக்கா 13:24)
14. கடவுளின் பூமிக்குரிய கடைசி படைப்பிற்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டதாக பைபிள் பதிவு செய்கிறது? (ஆதியாகமம் 3:20)
15. ஆரம்பத்திலேயே, மனிதவர்க்கத்தின் இருதயங்களைக் குறித்து கடவுள் என்ன மதிப்பீடு செய்தார்? (ஆதியாகமம் 8:21)
16. இஸ்ரவேலின்மீதிருந்த கடவுளுடைய வாதையை ஒரு முடிவிற்கு கொண்டுவருவதாய், எந்த மீதியானிய ராஜாவின் மகள் பினெகாஸால் கொல்லப்பட்டாள்? (எண்ணாகமம் 25:15)
17. தாவீதைக் கொல்ல சவுல் அனுப்பியிருந்த சேவகரை எதைப் பயன்படுத்தி தாவீதின் மனைவியான மீகாள் வஞ்சித்தாள்? (1 சாமுவேல் 19:11-16)
18. கடவுளுடைய கோபத்தின் கலசத்தை ஏழாவது தூதன் எதன்மீது ஊற்றினான்? (வெளிப்படுத்துதல் 16:17)
19. இஸ்ரவேலர்களல்லாத மக்களைப் பற்றி பேசுகையில் என்ன பதத்தை பைபிள் பயன்படுத்துகிறது? (எஸ்றா 10:2)
20. யூதா வம்சத்தைச் சேர்ந்த எவர், மகன்கள் இல்லாததால் தன் வம்சத்தைக் காத்துக்கொள்ள தன் மகளை தன் வேலைக்காரனாகிய யர்காவிற்கு கொடுத்தார்? (1 நாளாகமம் 2:34, 35)
21. உடன்படிக்கைப் பெட்டி கொண்டுசெல்லப்பட்டபோது, அதைப் பிடிக்க ஊசாவைத் தூண்டியது எது? (1 நாளாகமம் 13:9, 10)
22. இஸ்ரவேல் அல்லாத ஒரு நகரத்தில் அழிவின் செய்தியை அறிவிக்கும்படி ஒரு தீர்க்கதரிசி பெற்ற வேலைநியமிப்பை பற்றி மாத்திரமே பேசும் ஒரே பைபிள் புத்தகம் எது?
23. கடவுளால் செய்ய முடியாதது எது? (எபிரெயர் 6:18)
24. யெகோவா ஆசீர்வாதத்தை கொடுக்கும்போது, அதோடுகூட எதைக் கூட்டமாட்டார்? (நீதிமொழிகள் 10:22)
25. சவுல் தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுக்கு தீங்கு செய்வதில்லை என்பதைக் காட்ட, அவனது தலைமாட்டிலிருந்து தாவீது எந்தெந்த பொருட்களை எடுத்துக்கொண்டு போனான்? (1 சாமுவேல் 26:12)
26. கல்லெறியப்படுவதைத் தவிர்க்க இயேசு என்ன செய்தார்? (யோவான் 8:59)
கேள்விகளுக்கான பதில்கள்
1. அவரது பரிசுத்த ஆவி
2. காலண்டர்
3. அவர்களை பயமுறுத்தி கலங்கப் பண்ணுவது
4. மண்வெட்டி
5. மார்ப்பதக்கம்
6. இரண்டு
7. எல்க்கானான்
8. யோய்தா
9. சாந்தப்படுத்த வேண்டும்
10. காத்
11. மோரியா மலை
12. அபிஷேகம் செய்யப் பட்டவர்
13. “பிரயாசப்படுங்கள்”
14. ஏவாள்
15. “சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது”
16. சூர்
17. ஒரு சுரூபமும் வெள்ளாட்டுத்தோலும்
18. ஆகாயம்
19. அந்நியர்
20. சேசான்
21. மாடுகள் இடறின
22. யோனா புத்தகம்
23. பொய்யுரைத்தல்
24. வேதனை
25. ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும்
26. அவர் மறைந்துகொண்டார்