உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lff பாடம் 8
  • யெகோவாவின் நண்பராகுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் நண்பராகுங்கள்!
  • இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆராய்ந்து பார்க்கலாம்!
  • சுருக்கம்
  • அலசிப் பாருங்கள்
  • நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • என் நண்பராகுங்கள் என கடவுள் அழைக்கிறார்
    கடவுளுடைய நண்பர்
  • நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • நீங்கள் கண்டடையலாமே நண்பர்களை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
lff பாடம் 8
பாடம் 8. ஒருவர் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பாடம் 08

யெகோவாவின் நண்பராகுங்கள்!

அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சடிக்கப்பட்ட பிரதி

யெகோவாவைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டால் அவருடைய நண்பராக வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். இதைத்தான் அவர் விரும்புகிறார். நீங்கள் உண்மையிலேயே அவருடைய நண்பராக முடியுமா? (சங்கீதம் 25:14-ஐ வாசியுங்கள்.) அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவரைப் போல் ஒரு நண்பர் உங்களுக்குக் கிடைக்கவே மாட்டார் என்று ஏன் சொல்லலாம்? பைபிள் பதில் சொல்கிறது.

1. யெகோவா உங்களுக்கு என்ன அழைப்பைக் கொடுக்கிறார்?

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள். அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8) அப்படியென்றால், யெகோவா தன்னுடைய நண்பராக ஆவதற்கு உங்களை அழைக்கிறார்! ‘கடவுள பார்க்கவே முடியாது, அப்புறம் எப்படி அவரோட நண்பராக முடியும்?’ என்று சிலர் யோசிக்கலாம். ஆனால், அவரைப் பற்றி எதையெல்லாம் தெரிந்துகொண்டால் அவருடைய நண்பராக முடியுமோ அதையெல்லாம் அவர் பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது, யெகோவாவை நாம் பார்த்ததே இல்லையென்றாலும் அவருடைய நண்பராக முடியும்.

2. யெகோவாபோல் ஒரு நண்பர் யாருமில்லை என்று ஏன் சொல்லலாம்?

வேறு யாரையும்விட யெகோவாதான் உங்கள்மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறார். நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் தன்னிடம் கேட்கச் சொல்கிறார். ‘அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடலாம்.’ (1 பேதுரு 5:7) யெகோவா தன் நண்பர்களுக்கு உதவி செய்ய... ஆறுதல் கொடுக்க... அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்க... எப்போதும் தயாராக இருக்கிறார்.​—சங்கீதம் 94:18, 19-ஐ வாசியுங்கள்.

3. தன் நண்பர்களிடம் யெகோவா என்ன எதிர்பார்க்கிறார்?

யெகோவா எல்லாரையும் நேசிக்கிறார். ஆனால், “நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.” (நீதிமொழிகள் 3:32) தான் நல்லது என்று சொல்வதைத் தன் நண்பர்கள் செய்ய வேண்டும், கெட்டது என்று சொல்வதை வெறுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதையெல்லாம் தங்களால் செய்ய முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், யெகோவாமேல் உண்மையான அன்பு வைத்து, அவர் சொல்கிறபடி நடக்க முழு முயற்சி எடுக்கும் எல்லாரையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு அவ்வளவு பெரிய மனது!​—சங்கீதம் 147:11; அப்போஸ்தலர் 10:34, 35.

ஆராய்ந்து பார்க்கலாம்!

யெகோவாவின் நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? அவரைப் போல் ஒரு சிறந்த நண்பர் உங்களுக்குக் கிடைக்கவே மாட்டார் என்று ஏன் சொல்லலாம்? பார்க்கலாம்.

4. ஆபிரகாம் யெகோவாவின் நண்பர்

ஆபிரகாம் (அல்லது, ஆபிராம்) என்பவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. கடவுளுடைய நண்பராவதற்கு என்ன செய்ய வேண்டும், அதனால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆபிரகாமைப் பற்றி ஆதியாகமம் 12:1-4-ல் படித்துப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவா ஆபிரகாமிடம் என்ன செய்யச் சொன்னார்?

  • யெகோவா அவருக்கு என்ன வாக்கு கொடுத்தார்?

  • யெகோவா செய்யச் சொன்னதை ஆபிரகாம் செய்தாரா?

5. யெகோவா தன்னுடைய நண்பர்களிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்

பொதுவாக, நம் நண்பர்களிடம் நாம் சில விஷயங்களை எதிர்பார்ப்போம்.

  • உங்கள் நண்பர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?

1 யோவான் 5:3-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவா தன்னுடைய நண்பர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

யெகோவாவுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமென்றால் நாம் நடந்துகொள்கிற விதத்தையோ நம் குணங்களையோ மாற்ற வேண்டியிருக்கலாம். ஏசாயா 48:17, 18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • தன்னுடைய நண்பர்கள் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

கட்டுமான வேலை செய்பவர் தன்னோடு வேலை பார்ப்பவருக்குத் தலைக்கவசத்தைக் கொடுக்கிறார்.

ஒரு நல்ல நண்பர் நமக்கு எது நல்லதோ அதைச் செய்யச் சொல்வார். யெகோவாவும் தன்னுடைய நண்பர்களுக்கு அதைத்தான் சொல்கிறார்

6. கடவுள் தன் நண்பர்களுக்கு உதவுகிறார்

பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா தன் நண்பர்களுக்கு உதவுகிறார். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

வீடியோ: யெகோவா எனக்கு நிறைய செய்திருக்கிறார் (3:20)

  • வேண்டாத யோசனைகளையும் கவலைகளையும் விட்டுவிட ஒரு பெண்ணுக்கு யெகோவா எப்படி உதவினார்?

ஏசாயா 41:10, 13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவா தன்னுடைய நண்பர்களுக்கு என்ன செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்?

  • யெகோவா உங்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பார் என்று நம்புகிறீர்களா? ஏன்?

படங்களின் தொகுப்பு: நெருங்கிய நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்கள். 1. ஒரு பெரிய டேபிளை நகர்த்துவதற்கு ஒருவர் இன்னொருவருக்கு உதவுகிறார். 2. ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் மனம் திறந்து பேசுகிறார். 3. ஊன்றுகோலைப் பிடித்திருக்கும் ஒருவர் நடப்பதற்கு இன்னொருவர் உதவி செய்கிறார்.

நெருக்கமான நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் நமக்கு உதவி செய்வார்கள். அதே போலத்தான் யெகோவாவும் நமக்கு உதவி செய்வார்

7. யெகோவாவின் நண்பராவதற்குப் பேச்சுத்தொடர்பு அவசியம்

பேசப் பேசத்தான் நட்பு பலமாகும். சங்கீதம் 86:6, 11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் எப்படி யெகோவாவிடம் பேசலாம்?

  • யெகோவா எப்படி நம்மிடம் பேசுகிறார்?

படங்களின் தொகுப்பு: 1. ஒரு பெண் ஜெபம் செய்கிறார். மேல்நோக்கிய ஒரு அம்புக்குறி அவருடைய தலைக்கு மேலே காட்டப்பட்டுள்ளது. 2. ஒரு பெண் பைபிளைப் படிக்கிறார். கீழ்நோக்கிய ஒரு அம்புக்குறி அவருடைய தலைக்கு மேலே காட்டப்பட்டுள்ளது.

நாம் ஜெபம் பண்ணும்போது யெகோவாவிடம் பேசுகிறோம். நாம் பைபிளைப் படிக்கும்போது யெகோவா நம்மிடம் பேசுகிறார்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுளோட நண்பராகறதா? அதெல்லாம் நடக்காத விஷயம்.”

  • நம்மால் யெகோவாவின் நண்பராக முடியும் என்று சொல்வதற்கு நீங்கள் எந்த வசனத்தைக் காட்டுவீர்கள்?

சுருக்கம்

யெகோவா உங்களுடைய நண்பராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நீங்கள் அவரிடம் நெருங்கிப் போவதற்கு அவர் உதவி செய்வார்.

ஞாபகம் வருகிறதா?

  • யெகோவா தன்னுடைய நண்பர்களுக்கு எப்படி உதவி செய்கிறார்?

  • தன் நண்பர்கள் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

  • தன் நண்பர்களிடம் யெகோவா அதிகமாக எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறீர்களா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

யெகோவாவின் நண்பராக ஆவதால் உங்களுக்கு என்ன நன்மை?

“யெகோவா—அறிய வேண்டிய கடவுள்” (காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2003)

நாம் எப்படிக் கடவுளுடைய நண்பராகலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“நான் கடவுளுடைய நண்பராக ஆவது எப்படி?” (ஆன்லைன் கட்டுரை)

யெகோவாவின் நண்பராக ஆனதால் வாழ்க்கை நல்லபடியாக மாறியதாக ஒரு பெண் நினைக்கிறார். ஏன் என்று பாருங்கள்.

“நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன்” (காவற்கோபுரம் எண் 1, 2017)

யெகோவாவைப் பற்றிச் சில டீனேஜ் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

என்னால் கடவுளுடைய நண்பராக ஆக முடியுமா? (1:46)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்