ஜூலை
செவ்வாய், ஜூலை 1
‘அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்தார், குணப்படுத்தினார்.’—அப். 10:38.
இயேசு என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, அவருடைய அப்பாவின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அப்படியே வெளிக்காட்டினார்; அவர் அற்புதங்கள் செய்தபோதும் அப்படித்தான்! (யோவா. 14:9) இயேசுவும் யெகோவாவும் நம்மை உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள். இயேசு பூமியில் இருந்தபோது மக்கள்மேல் ரொம்ப அன்பு வைத்திருந்ததைக் காட்டினார். அவர்களுக்கு இருந்த பிரச்சினைகளை அற்புதமாகத் தீர்த்து வைத்தார். ஒரு சந்தர்ப்பத்தில், பார்வையில்லாத இரண்டு பேர் இயேசுவிடம் வந்து பார்வை தரச் சொல்லிக் கெஞ்சினார்கள். (மத். 20:30-34) இயேசு அவர்களைப் பார்த்து “மனம் உருகி” அவர்களைக் குணப்படுத்தினார். “மனம் உருகி” என்பதற்கான கிரேக்க வினைச்சொல், நம் உடலுக்குள்ளிருந்து, அதுவும் அடிஆழத்திலிருந்து, பெருக்கெடுக்கும் கரிசனையைக் குறிக்கிறது. மக்கள்மேல் இருந்த அன்பினால்தான் இந்தளவுக்கு இயேசு கரிசனை காட்டினார். அதே கரிசனையால்தான் பசியில் வாடியவர்களுக்கு அவர் உணவு கொடுத்தார், தொழுநோயாளி ஒருவரைக் குணப்படுத்தினார். (மத். 15:32; மாற். 1:41) ‘கரிசனையுள்ள’ கடவுளான யெகோவாவும் அவருடைய மகனும் நம்மை ரொம்ப நேசிக்கிறார்கள், நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து துடித்துப்போகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. (லூக். 1:77; 1 பே. 5:7) உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அவர்கள் எந்தளவுக்கு ஏங்கிக்கொண்டிருப்பார்கள், இல்லையா? w23.04 3 ¶4-5
புதன், ஜூலை 2
யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள். தனக்கு உண்மையாக இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார். பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். —சங். 97:10.
சாத்தானுடைய உலகத்தில் பிரபலமாக இருக்கும் கெட்ட விஷயங்களைப் படிப்பதையோ கேட்பதையோ நாம் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, பைபிளைப் படித்து நம் மனதை நல்ல விஷயங்களால் நிரப்ப வேண்டும். கூட்டங்களில் கலந்துகொள்வதும் ஊழியம் செய்வதும்கூட நம் மனதைப் பாதுகாக்கும். இதையெல்லாம் நாம் செய்யும்போது, நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் யெகோவா அனுமதிக்க மாட்டார் என்று அவரே வாக்குறுதி கொடுத்திருக்கிறார்! (1 கொ. 10:12, 13) மோசமான கடைசிக் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாம் ஒவ்வொருவரும் எப்போதையும்விட இப்போது அதிகமாக ஜெபம் செய்ய வேண்டும். நம் ‘இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிட’ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (சங். 62:8) யெகோவா செய்யும் எல்லாவற்றுக்கும் அவரைப் புகழுங்கள், நன்றி சொல்லுங்கள். தைரியமாக ஊழியம் செய்ய அவரிடம் உதவி கேளுங்கள். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவி கேட்டு அவரிடம் கெஞ்சுங்கள். யெகோவாவிடம் தவறாமல் ஜெபம் செய்வதைத் தடுப்பதற்கு எதையுமே, யாரையுமே அனுமதிக்காதீர்கள்! w23.05 7 ¶17-18
வியாழன், ஜூலை 3
‘ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.’—எபி. 10:24, 25.
யெகோவாவைப் புகழ்வதற்காக நாம் கூட்டங்களுக்குப் போகிறோம். (சங். 26:12; 111:1) அதோடு, இந்தக் கஷ்டமான காலத்தில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்காகவும் போகிறோம். (1 தெ. 5:11) கூட்டங்களில் கையைத் தூக்கி நாம் பதில் சொல்லும்போது, இந்த இரண்டு விஷயங்களையுமே நம்மால் செய்ய முடிகிறது. ஆனால், பதில் சொல்ல நமக்கு ரொம்ப பயமாக இருக்கலாம் அல்லது நிறைய பதில் சொல்ல நாம் ஆசைப்பட்டாலும் சிலசமயம் சகோதரர்கள் நம்மைக் கேட்காமல் போய்விடலாம். இந்தப் பிரச்சினைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது’ ரொம்ப முக்கியம் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். நம் விசுவாசத்தை வெளிக்காட்டும் ஒருசில வார்த்தைகள்கூட மற்றவர்களை உற்சாகப்படுத்தும். இதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டால், பதில் சொல்ல அவ்வளவாகப் பயப்பட மாட்டோம். ஒருவேளை, பதில் சொல்ல நமக்கு அடிக்கடி வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், மற்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவோம்.—1 பே. 3:8. w23.04 20 ¶1-3
வெள்ளி, ஜூலை 4
‘எருசலேமுக்குப் போய், யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும்.’—எஸ்றா 1:3.
‘ஓர் சந்தோஷமான அறிவிப்பு! நீங்கள் எல்லாரும் உங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போகலாம்!’ ராஜா செய்த இந்த அறிவிப்பைக் கேட்டபோது, பாபிலோனில் கிட்டத்தட்ட 70 வருஷங்கள் கைதிகளாக இருந்த யூதர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். (எஸ்றா 1:2-4) நிச்சயமாகவே, யெகோவாதான் இதற்குப் பின்னால் இருந்திருப்பார்! ஏனென்றால், பாபிலோனியர்கள் அவ்வளவு லேசில் தங்கள் கைதிகளை விடுதலை செய்ததே இல்லை. (ஏசா. 14:4, 17) அப்படிப்பட்ட பாபிலோனையே ஒரு ராஜா வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்திருந்தார். அவர்தான், தாய்நாட்டுக்குத் திரும்பலாம் என்று யூதர்களுக்கு அறிவிப்பு செய்திருந்தார். அதனால் ஒவ்வொரு யூதரும், முக்கியமாக ஒவ்வொரு குடும்பத் தலைவரும், பாபிலோனைவிட்டுப் போவதா அல்லது அங்கேயே இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தது. அவர்களில் நிறைய பேர் வயதானவர்களாக இருந்திருப்பார்கள். அதனால், அவ்வளவு தூரம் பயணம் செய்வது கஷ்டம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இன்னொரு காரணம், அங்கிருந்த யூதர்களில் பெரும்பாலானோர் பாபிலோனில்தான் பிறந்து வளர்ந்திருந்தார்கள். அதனால், இஸ்ரவேலைத் தங்களுடைய சொந்த ஊராகப் பார்க்காமல் தங்கள் முன்னோர்களின் ஊராகத்தான் பார்த்தார்கள். அதுமட்டுமல்ல, சில யூதர்கள் பாபிலோனில் பெரிய பணக்காரர்களாக ஆகியிருக்கலாம். அதனால், வசதியான வீடுகளையும் தொழில்களையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாத இடத்துக்குப் போய் வாழ்வது கஷ்டம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். w23.05 14 ¶1-2
சனி, ஜூலை 5
‘நீங்கள் தயாராக இருங்கள்.’—மத். 24:44.
சகிப்புத்தன்மையையும் கரிசனையையும் அன்பையும் நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. “சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்” என்று லூக்கா 21:19 சொல்கிறது. ‘கரிசனையை . . . அணிந்துகொள்ளுங்கள்’ என்று கொலோசெயர் 3:12-ன் அடிக்குறிப்பில் பார்க்கிறோம். “ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நீங்களே கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் . . . சகோதரர்களே, அதை இன்னும் அதிகமாகக் காட்டும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்” என்று 1 தெசலோனிக்கேயர் 4:9, 10-ல் படிக்கிறோம். ஏற்கெனவே சகிப்புத்தன்மையையும் கரிசனையையும் அன்பையும் காட்டிவந்த சீஷர்களுக்காக இந்த வார்த்தைகள் எழுதப்பட்டவை. அவர்கள் தொடர்ந்து இந்தக் குணங்களை எல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. நாமும் இன்று அதைத்தான் செய்ய வேண்டும். ஆரம்ப காலத்தில் வாழ்ந்த அந்தக் கிறிஸ்தவர்கள் எப்படி இந்த குணங்களைக் காட்டினார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால், நீங்களும் அவர்களைப் போலவே நடந்துகொள்வீர்கள், மிகுந்த உபத்திரவத்தை சந்திக்கத் தயாராகவும் இருப்பீர்கள். மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது எப்படிச் சகித்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தொடர்ந்து சகித்திருப்பதற்கும் நீங்கள் உறுதியோடும் இருப்பீர்கள். w23.07 3 ¶4, 8
ஞாயிறு, ஜூலை 6
ஒரு நெடுஞ்சாலை இருக்கும். அது பரிசுத்தமான வழி. —ஏசா. 35:8.
நாம் பரலோக நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, ‘வேறே ஆடுகளாக’ இருந்தாலும் சரி, தொடர்ந்து அந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வேண்டும். (யோவா. 10:16) அந்த வழி இன்று நாம் ஆன்மீகப் பூஞ்சோலையில் இருப்பதற்கும் எதிர்காலத்தில் பூஞ்சோலை பூமியில் இருப்பதற்கும் வழிநடத்துகிறது. கி.பி. 1919-லிருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும், பொய் மத உலகப் பேரரசாக இருக்கும் மகா பாபிலோனைவிட்டு வெளியே வந்து, இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி வந்த பின்பு, அவர்களுக்கு தடையாக இருந்த எல்லாவற்றையும் யெகோவா நீக்கிவிட்டார். (ஏசா. 57:14) இன்று இருக்கும் ‘பரிசுத்தமான வழியை’ பற்றி என்ன சொல்லலாம்? மக்கள் மகா பாபிலோனைவிட்டு வெளியில் வருவதற்காக, யெகோவா தனக்குப் பயந்து நடந்தவர்களைப் பயன்படுத்தி இந்த வழியில் இருந்த தடைகளை நீக்கியிருக்கிறார். 1919-க்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். (ஏசாயா 40:3-ஐ ஒப்பிடுங்கள்.) நல்ல ஜனங்கள் மகா பாபிலோனைவிட்டு வெளியே வந்து யெகோவாவின் மக்களோடு சேர்ந்து அவரை வணங்குவதற்காக அந்த நெடுஞ்சாலை தயார்படுத்தப்பட்டது. w23.05 15-16 ¶8-9
திங்கள், ஜூலை 7
சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள். சந்தோஷ ஆரவாரத்தோடு அவருடைய சன்னிதிக்கு வாருங்கள்.—சங். 100:2.
நாம் சந்தோஷமாகவும் ஆசை ஆசையாகவும் சேவை செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (2 கொ. 9:7) அப்படியென்றால், நமக்கு ஆசை இல்லாதபோது ஒரு குறிக்கோளை அடைய உழைப்பது தவறா? பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். “என்னுடைய உடலை அடக்கியொடுக்கி அடிமைபோல் நடத்தி வருகிறேன்” என்று அவர் சொன்னார். (1 கொ. 9:25-27) சரியானதைச் செய்ய வேண்டுமென்ற உந்துவிப்பு இல்லாத சமயத்தில்கூட தன்னையே கட்டாயப்படுத்தி அதை அவர் செய்தார். அப்படிப்பட்ட சேவையை யெகோவா ஏற்றுக்கொண்டாரா? கண்டிப்பாக! பவுல் எடுத்த முயற்சிகளை அவர் ஆசீர்வதித்தார். (2 தீ. 4:7, 8) அதேபோல், குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை இல்லாதபோதுகூட அதற்காக நாம் உழைப்பதைப் பார்க்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். ஏனென்றால், நமக்கு அந்த விஷயத்தைச் செய்ய பிடிக்கவில்லை என்றாலும், யெகோவாவைப் பிடித்திருப்பதால் அதைச் செய்ய முயற்சி பண்ணுகிறோம் என்று அவருக்குத் தெரியும். அதனால், பவுலை ஆசீர்வதித்தது போலவே நம்மையும் அவர் ஆசீர்வதிப்பார். (சங். 126:5) அவருடைய ஆசீர்வாதத்தை ருசிக்க ருசிக்க, ஆசை என்ற தீ நமக்குள் பற்றியெரிய ஆரம்பிக்கும். w23.05 29 ¶9-10
செவ்வாய், ஜூலை 8
யெகோவாவின் நாள் வரும்.—1 தெ. 5:2.
யெகோவாவின் நாளில் யாரெல்லாம் தப்பிக்க மாட்டார்களோ அவர்களைத் தூங்குகிறவர்களோடு ஒப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் பேசுகிறார். தூங்குகிறவர்களுக்குத் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியாது, நேரம் போவதும் தெரியாது. அதனால் ஏதாவது முக்கியமான விஷயங்கள் அவர்களைச் சுற்றி நடந்தால் அதை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது, அதற்கு ஏற்ற மாதிரி நடக்கவும் முடியாது. இன்றைக்கு நிறைய பேர் அந்த மாதிரி ஒரு தூக்கத்தில்தான் இருக்கிறார்கள். (ரோ. 11:8) நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், மிகுந்த உபத்திரவம் சீக்கிரம் வரப்போகிறது என்பதையெல்லாம் ஆதாரத்தோடு நாம் சொன்னாலும் அவர்களுக்கு அதன்மேல் அக்கறையில்லை. (2 பே. 3:3, 4) நாம் அப்படியில்லை! ஒவ்வொரு நாளும் போகப்போக, பைபிள் சொல்கிற மாதிரி விழித்திருப்பது எவ்வளவு அவசியம், எவ்வளவு அவசரம் என்பதை நாம் புரிந்திருக்கிறோம். (1 தெ. 5:6) நாம் ஏன் பதட்டம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்? அப்போதுதான், அரசியல் அல்லது சமூக பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்போம். யெகோவாவின் நாள் நெருங்க நெருங்க, இந்த மாதிரி பிரச்சினைகளில் தலையிடுவதற்கான அழுத்தம் நமக்கு அதிகமாகிக்கொண்டே போகலாம். அந்தச் சமயத்தில் நாம் என்ன செய்வோம் என்று இப்போது கவலைப்படத் தேவையில்லை. பதட்டமோ தடுமாற்றமோ இல்லாமல் இருப்பதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் கடவுளுடைய சக்தி அப்போது நமக்கு உதவி செய்யும்.—லூக். 12:11, 12. w23.06 10 ¶6-7
புதன், ஜூலை 9
‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து என்னை நினைத்துப் பாருங்கள், என்னைப் பலப்படுத்துங்கள்.’—நியா. 16:28.
சிம்சோன் என்ற பெயரைக் கேட்டதுமே, அவர் பயங்கரமான ஒரு பலசாலி என்பது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். ஆனால், சிம்சோன் தன் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவை எடுத்தார். அதனால் வந்த பின்விளைவுகளால் அவர் ரொம்பக் கஷ்டப்பட்டார். இருந்தாலும், சிம்சோன் தனக்கு எப்படியெல்லாம் உண்மையாகச் சேவை செய்தார் என்பதைத்தான் யெகோவா முக்கியமாக நினைத்துப் பார்த்தார். நம்முடைய நன்மைக்காக சிம்சோனின் உதாரணத்தை பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். தன் மக்களான இஸ்ரவேலர்களுக்காக அதிசயமான விஷயங்களைச் செய்ய யெகோவா சிம்சோனைப் பயன்படுத்தினார். சிம்சோன் இறந்து நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு, விசுவாசத்துக்குப் பேர்போனவர்களின் பட்டியலில் சிம்சோனின் பெயரையும் எழுதுவதற்கு அப்போஸ்தலன் பவுலை யெகோவா தூண்டினார். (எபி. 11:32-34) ரொம்பக் கஷ்டமான சூழ்நிலைகளில்கூட சிம்சோன் யெகோவாவையே நம்பியிருந்தார். அவருடைய உதாரணம் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது, அதுமட்டுமல்ல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. w23.09 2 ¶1-2
வியாழன், ஜூலை 10
‘உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் கடவுளிடம் சொல்லுங்கள்.’—பிலி. 4:6.
நம்முடைய சகிப்புத்தன்மையை பலப்படுத்துவதற்கு யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும். நம்முடைய எல்லா கவலையையும் மனம்விட்டு அவரிடம் கொட்ட வேண்டும். (1 தெ. 5:17) ஒருவேளை இப்போது உங்களுக்குப் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், எப்போதெல்லாம் நீங்கள் கவலையாக இருக்கிறீர்களோ, குழப்பத்தில் இருக்கிறீர்களோ, வழி தெரியாமல் தவிக்கிறீர்களோ, அப்போதெல்லாம் யெகோவாவிடம் உதவி கேட்டு வேண்டுகிறீர்களா? தினம்தினம் வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவிடம் தவறாமல் உதவி கேளுங்கள். அப்போதுதான், பெரிய பெரிய பிரச்சினைகள் வரும்போது நீங்கள் அவரிடம் உதவி கேட்கத் தயங்க மாட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்தால், கடவுள்மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை வரும். உங்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், சரியாக எந்த நேரத்தில் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்று உறுதியாக நம்புவீர்கள். (சங். 27:1, 3) இப்போது வருகிற பிரச்சினைகளைச் சகித்து யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தால், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் வருகிற பிரச்சினைகளையும் பெரும்பாலும் சகித்திருக்க முடியும். (ரோ. 5:3) இப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சினையைச் சகித்திருக்கும்போது, அடுத்து வரும் பிரச்சினையைச் சகித்திருக்க தேவையான பலம் கிடைக்கிறது. நிறைய சகோதர சகோதரிகள் அதைத்தான் சொல்கிறார்கள். யெகோவாவுடைய உதவியோடு பிரச்சினையைச் சகித்திருக்கும்போது, தங்களுக்கு உதவி செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்ற விசுவாசம் அவர்களுக்கு அதிகமாகியிருக்கிறது. அந்த விசுவாசம், அடுத்து வருகிற சோதனையைச் சகிக்க அவர்களுக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள்.—யாக். 1:2-4. w23.07 3 ¶7-8
வெள்ளி, ஜூலை 11
உனக்குக் கருணை காட்டுகிறேன்.—ஆதி. 19:21.
யெகோவாவிடம் இருக்கிற மனத்தாழ்மையும் கரிசனையும்தான் வளைந்துகொடுப்பதற்கு அவரைத் தூண்டுகிறது. உதாரணத்துக்கு, சோதோமில் இருந்த கெட்ட மக்களை அழிக்கப் போகிற சமயத்தில், யெகோவா எந்தளவுக்கு மனத்தாழ்மையாக நடந்துகொண்டார் என்று பாருங்கள். அந்த ஊரில் இருந்த லோத்து என்ற நல்ல மனிதரை மலைகளுக்குத் தப்பி ஓடச் சொல்லி, தேவதூதர்கள் மூலமாக யெகோவா சொன்னார். ஆனால் அங்கு போவதற்கு லோத்து பயந்தார். அதனால் தானும் தன்னுடைய குடும்பமும் பக்கத்தில் இருந்த சோவார் என்ற சின்ன ஊருக்குத் தப்பித்து போகலாமா என்று லோத்து கெஞ்சிக் கேட்டார். சோவாரையும் அழிக்க வேண்டுமென்று யெகோவா நினைத்திருந்தார். ‘நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் நீ செய்’ என்று லோத்துவிடம் யெகோவா சொல்லியிருக்கலாம். ஆனால், யெகோவா லோத்து கேட்டதற்கு அனுமதி கொடுத்தார். அவருக்காக ஒரு ஊரையே யெகோவா அழிக்காமல் விட்டுவிட்டார். (ஆதி. 19:18-22) பல நூறு வருஷங்களுக்குப் பிறகு, நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யெகோவா கரிசனை காட்டினார். அந்த ஊரையும் அதில் வாழ்கிற பொல்லாத மக்களையும் அழிக்கப் போவதாக யோனா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். ஆனால் நினிவே மக்கள் மனம் திருந்தியதை பார்த்தபோது, அவர்களுக்காக யெகோவா பரிதாபப்பட்டார். அந்த நகரத்தை அழிக்காமல் விட்டுவிட்டார்.—யோனா 3:1, 10; 4:10, 11. w23.07 21 ¶5
சனி, ஜூலை 12
‘அவர்கள் யோவாஸை படுகொலை செய்தார்கள். ஆனால், அவர் ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை.’—2 நா. 24:25.
சரியாக வேர்பிடிக்காமல் ஒரு கம்பத்தின் உதவியோடு நிற்கிற ஒரு மரம்போல் யோவாஸ் இருந்தார். யோய்தாதான் அந்தக் கம்பம். அந்தக் கம்பம் இல்லாமல்போன பிறகு, விசுவாசதுரோகம் என்ற காற்று அடித்ததுமே அந்த மரம் ஒரேயடியாகச் சாய்ந்துவிட்டது. இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். நம் குடும்பத்தில் இருப்பவர்களும், சபையில் இருக்கும் மற்றவர்களும் கடவுளுக்குப் பயந்து நடக்கிறார்கள் என்பதற்காக மட்டும் நாம் அப்படி நடக்கக் கூடாது. நாம் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்றால், தனிப்பட்ட விதமாகக் கடவுள்மேல் பயத்தையும் பக்தியையும் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காகத் தவறாமல் பைபிளைப் படிக்க வேண்டும், படித்ததை ஆழமாக யோசிக்க வேண்டும், விடாமல் ஜெபம் செய்யவும் வேண்டும். (எரே. 17:7, 8; கொலோ. 2:6, 7) நம்மால் செய்ய முடியாததையெல்லாம் யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பது கிடையாது. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான்: “உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.” (பிர. 12:13) நாம் யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போது, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் சரி யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை யாராலும், எதுவாலும், முறிக்க முடியாது! w23.06 19 ¶17-19
ஞாயிறு, ஜூலை 13
இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன். —வெளி. 21:5.
“சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்” என்ற வார்த்தைகளோடு அந்த உத்தரவாதம் ஆரம்பிக்கிறது. (வெளி. 21:5அ) இந்த உத்தரவாதத்தைக் கொடுத்தது சக்திபடைத்த ஒரு தேவதூதரோ, உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ அல்ல, யெகோவாவே கொடுத்திருக்கிறார். யெகோவாவால் ‘பொய் சொல்ல முடியாது.’ (தீத். 1:3) யெகோவாவே பேசியதாக வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மூன்று தடவைதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது. அதனால், இந்த வார்த்தைகளை நாம் முழுமையாக நம்பலாம். “இதோ!” என்ற வார்த்தையைப் பற்றிப் பார்க்கலாம். “இதோ!” என்பதற்கான கிரேக்க வார்த்தை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அடிக்கடி வருகிறது. “இதோ!” என்ற வார்த்தைக்குப் பிறகு என்ன வார்த்தைகள் இருக்கின்றன? “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று யெகோவா சொல்கிறார். இங்கே எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றித்தான் யெகோவா சொல்கிறார். இருந்தாலும் அவை ஏற்கெனவே நடந்துவருவது போல் சொல்கிறார். ஏனென்றால், அவை கண்டிப்பாக நடக்கும் என்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இருக்கிறார்.—ஏசா. 46:10. w23.11 3-4 ¶7-8
திங்கள், ஜூலை 14
அவர் வெளியே போய்க் கதறி அழுதார்.—மத். 26:75.
அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய பலவீனங்களோடு போராடிக்கொண்டு இருந்தார். அதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம். பைபிள் தீர்க்கதரிசனங்கள் சொல்வதுபோல் இயேசு கஷ்டப்பட்டுதான் சாக வேண்டியிருக்கும் என்பதை அவர் விளக்கி சொன்னபோது, இயேசுவை பேதுரு அதட்டினார். (மாற். 8:31-33) திரும்பத் திரும்ப, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் ‘நான்தான் பெரியவன்’ என்று வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தார்கள். (மாற். 9:33, 34) இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, பேதுரு அவசரப்பட்டு ஒரு மனுஷனுடைய காதை வெட்டிவிட்டார். (யோவா. 18:10) கொஞ்ச நேரத்திலேயே, அவர் பயந்துபோய், அவருடைய உயிர் நண்பன் இயேசுவை தெரியாது என்று மூன்று தடவை சொல்லிவிட்டார். (மாற். 14:66-72) அதை நினைத்து பேதுரு கதறி அழுதார். மனம் உடைந்துபோன இந்த அப்போஸ்தலனை இயேசு அப்படியே விட்டுவிடவில்லை. அவர் உயிர்த்தெழுந்து வந்தபிறகு தன்மேல் இருக்கும் அன்பை காட்டுவதற்கு பேதுருவுக்கு வாய்ப்பு கொடுத்தார். தன்னுடைய ஆடுகளை தாழ்மையாக மேய்க்கும் வேலையையும் இயேசு பேதுருவுக்கு கொடுத்தார். (யோவா. 21:15-17) இயேசு சொன்னதை செய்ய பேதுரு தயாராக இருந்தார். அதனால் பெந்தெகோஸ்தே நாள் அன்று அவர் எருசலேமில் இருந்தார். முதன்முதலாக கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் பேதுருவும் ஒருவர். w23.09 22 ¶6-7
செவ்வாய், ஜூலை 15
என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும். —யோவா. 21:16.
“கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு மற்ற மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். (1 பே. 5:1-4) ஒரு மூப்பராக, சகோதர சகோதரிகள்மேல் உங்களுக்கு அன்பு இருக்கும். அவர்களை நன்றாக மேய்க்க வேண்டும் என்று நிச்சயமாக நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஆனாலும் சில நேரங்களில் நீங்கள் பிஸியாக, களைப்பாக இருப்பதால் இந்த நியமிப்பை உங்களால் முழுமையாக செய்ய முடியாமல் போகலாம். நீங்கள் செய்ய நினைத்தும் அதை செய்ய முடியாமல் போகும்போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். பேதுரு இப்படி எழுதினார்: “ஒருவன் சேவை செய்தால், கடவுள் கொடுக்கிற பலத்தில் சார்ந்திருந்து சேவை செய்ய வேண்டும்.” (1 பே. 4:11) சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. ஒருவேளை அதெல்லாம் இந்த உலகத்தில் முழுமையாக தீராத பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். யாராலும் செய்ய முடியாத உதவியை “முதன்மை மேய்ப்பர்” இயேசு கிறிஸ்துவால், அவர்களுக்கு செய்ய முடியும். அதை அவர் இன்றும் செய்வார், பூஞ்சோலை பூமியிலும் செய்வார். மூப்பர்களே, யெகோவா உங்களிடம் எதிர்பார்ப்பது இதுதான்: சகோதர சகோதரிகளிடம் அன்பாக இருங்கள், அவர்களை பாசமாக கவனித்துக்கொள்ளுங்கள், “மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.” w23.09 29-30 ¶13-14
புதன், ஜூலை 16
ஞானிகளுடைய யோசனைகள் வீண் என்பது யெகோவாவுக்கு தெரியும்.—1 கொ. 3:20.
மனித யோசனைகளுக்கு இசைவாக நடப்பதை நாம் தவிர்க்க வேண்டும். இன்று நிறைய மக்கள் யெகோவாவின் சட்டங்களை மதிப்பதில்லை. நாமும் அவர்களைப் போலவே யோசிக்க ஆரம்பித்தோம் என்றால், யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் ஒதுக்கித்தள்ள ஆரம்பித்துவிடுவோம். (1 கொ. 3:19) “இந்த உலகத்தின் ஞானம்” கெட்ட ஆசைகளுக்குத் தீனி போட்டு மக்களை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வைக்கிறது. பெர்கமுவிலும் தியத்தீராவிலும் இருந்த நிறைய மக்கள் ரொம்ப ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தார்கள், சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சில கிறிஸ்தவர்கள் அவர்களைப் போலவே நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பொறுத்துக்கொண்டதால், இந்த இரண்டு ஊர்களில் இருந்த சபைகளுக்கும் இயேசு கடுமையான ஆலோசனை கொடுத்தார். (வெளி. 2:14, 20) இன்றும் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் தங்களுடைய தவறான கருத்துகளை நம்மேல் திணிக்கப் பார்க்கலாம். நம் குடும்பத்தில் இருக்கிறவர்களும் நம்மோடு பழகுகிறவர்களும் நம்முடைய மனதை மாற்றப் பார்க்கலாம். நாம் இவ்வளவு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை என்று சொல்லி யெகோவாவுடைய சட்டங்களை மீறத் தூண்டலாம். உதாரணத்துக்கு, ஒழுக்கம் சம்பந்தமாக பைபிள் சொல்வதெல்லாம் நம் காலத்துக்கு ஒத்துவராது, அப்படியெல்லாம் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்லலாம். சில சமயங்களில், யெகோவா கொடுக்கிற வழிநடத்துதல் அவ்வளவு தெளிவாக இல்லை என்று நாம் காரணம் சொல்லலாம். “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சி” போவதற்குக்கூட நமக்குத் தோன்றலாம்.—1 கொ. 4:6. w23.07 16 ¶10-11
வியாழன், ஜூலை 17
உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.—நீதி. 17:17.
இயேசுவின் அம்மா மரியாளுக்குக் கண்டிப்பாகப் பலம் தேவைப்பட்டிருக்கும். அப்போது அவருக்குக் கல்யாணம் ஆகவில்லை. ஆனால், அவர் கர்ப்பமாவார் என்று தேவதூதர் சொன்னார். பிள்ளைகளை வளர்ப்பதில் அனுபவமே இல்லாத ஒரு பெண், மேசியாவாக ஆகப்போகிற குழந்தையை வளர்க்க வேண்டியிருந்தது. அதோடு, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கல்யாணம் செய்துகொள்ளப்போகும் யோசேப்பிடம் சொல்ல வேண்டியிருந்தது. இதெல்லாம் அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! (லூக். 1:26-33) மரியாளுக்கு எப்படிப் பலம் கிடைத்தது? அவர் மற்றவர்களுடைய உதவியை எடுத்துக்கொண்டார். உதாரணத்துக்கு, இந்த நியமிப்பைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லச் சொல்லி காபிரியேலிடம் கேட்டார். (லூக். 1:34) அதுமட்டுமல்ல, சீக்கிரத்திலேயே தன்னுடைய சொந்தக்கார பெண் எலிசபெத்தைப் பார்ப்பதற்காக ‘மலைப்பகுதியில் இருந்த யூதாவுக்கு’ போனார். எலிசபெத் மரியாளைப் பாராட்டினார். மரியாளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்ல எலிசபெத்தை யெகோவா தூண்டினார். (லூக். 1:39-45) அதைக் கேட்டபோது மரியாளுக்கு ரொம்ப உற்சாகமாக இருந்திருக்கும். ஏனென்றால், யெகோவா “தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார்” என்று மரியாள் சொன்னார். (லூக். 1:46-51) காபிரியேலையும் எலிசபெத்தையும் பயன்படுத்தி யெகோவா மரியாளுக்குப் பலம் தந்தார். w23.10 14-15 ¶10-12
வெள்ளி, ஜூலை 18
ராஜாக்களாகவும், தன்னுடைய கடவுளும் தகப்பனுமானவருக்குச் சேவை செய்கிற குருமார்களாகவும் நம்மை நியமித்தார்.—வெளி. 1:6.
சில கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் யெகோவாவுக்கும் இடையே ஒரு விசேஷ உறவு இருக்கிறது. இந்த 1,44,000 பேர் பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து குருமார்களாக சேவை செய்வார்கள். (வெளி. 14:1) இவர்கள் பூமியில் இருக்கும்போதே, கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு கடவுளுடைய மகன்களாக இருப்பதை பரிசுத்த அறை குறிக்கிறது. (ரோ. 8:15-17) மகா பரிசுத்த அறை, பரலோகத்தை, அதாவது யெகோவா இருக்கும் இடத்தை, குறிக்கிறது. பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்த ‘திரைச்சீலை’ இயேசுவின் மனித உடலை குறிக்கிறது. இயேசு மனிதராக இருந்தபோது, ஆன்மீக ஆலயத்தின் மாபெரும் தலைமைக் குருவாக பரலோகத்துக்குள் அவரால் போக முடியவில்லை. அந்த உடலை தியாகம் செய்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, அவரால் பரலோகத்துக்குள், அதாவது ஆன்மீக ஆலயத்தின் மகா பரிசுத்த அறைக்குள், போக முடிந்தது. அவர் பரலோகத்துக்கு போன பிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட மற்றவர்களும் பரலோகத்துக்கு போவதற்கான வழியை திறந்துவைத்தார். இவர்களும் பரலோகத்துக்குள் போக வேண்டுமென்றால், இயேசுவைப் போலவே தங்களுடைய மனித உடலை விட்டுவிட்டுதான் போக வேண்டும்.—எபி. 10:19, 20; 1 கொ. 15:50. w23.10 28 ¶13
சனி, ஜூலை 19
‘கிதியோன் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது.’—எபி. 11:32.
எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தன்னைக் குறை சொன்னபோது கிதியோன் எரிந்துவிழாமல் நிதானமாகப் பதில் சொன்னார். (நியா. 8:1-3) அவர்கள் எதற்காகக் குறை சொல்கிறார்கள் என்பதைப் பொறுமையாகக் கேட்பதன் மூலம் மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். இப்படி, பெரிதாக வெடிக்கவிருந்த ஒரு பிரச்சினையை அவர் சாதுரியமாகச் சமாளித்துவிட்டார். இந்த விஷயத்தில், ஒரு நல்ல மூப்பர் கிதியோனைப் போலவே நடந்துகொள்வார். மற்றவர்கள் குறை சொல்லும்போது, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனமாகக் கேட்பார், அவர்களிடம் பொறுமையாகப் பதில் சொல்வார். (யாக். 3:13) இப்படி, சபை சமாதானமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். மீதியானியர்களை ஜெயித்ததற்காக எல்லாரும் கிதியோனைப் புகழ்ந்தபோது, மக்களின் கவனத்தை யெகோவாவின் பக்கம் கிதியோன் திருப்பினார். (நியா. 8:22, 23) மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போலவே நடந்துகொள்ளலாம்? அவர்கள் என்ன செய்தாலும் அதற்கான புகழ் யெகோவாவுக்குப் போய்ச் சேரும்படி அவர்கள் பார்த்துக்கொள்ளலாம். (1 கொ. 4:6, 7) நன்றாகக் கற்றுக்கொடுக்கும் திறன் இருப்பதற்காக ஒரு மூப்பரை மற்றவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சமயத்தில் மற்றவர்களுடைய கவனத்தை அவர் கடவுளுடைய வார்த்தையிடம் திருப்பலாம் அல்லது கடவுளுடைய அமைப்பு தரும் பயிற்சிக்குத் திருப்பலாம். தாங்கள் சொல்லித்தரும் விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறதா அல்லது தங்களுக்குப் புகழ் சேர்க்கிறதா என்று மூப்பர்கள் அவ்வப்போது யோசித்துப் பார்க்க வேண்டும். w23.06 4 ¶7-8
ஞாயிறு, ஜூலை 20
என்னுடைய யோசனைகள் வேறு, உங்களுடைய யோசனைகள் வேறு.—ஏசா. 55:8.
நாம் செய்த ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், ‘நான் சரியான விஷயத்துக்காக ஜெபம் செய்கிறேனா?’ என்று நாம் யோசித்துப் பார்க்கலாம். பெரும்பாலும், நமக்கு நல்லதென்று நாம் நினைப்பது உண்மையிலேயே நமக்கு நல்லதாக இருக்காது. நாம் எதிர்பார்ப்பது போல் ஒரு பிரச்சினையை தீர்த்து வைக்க சொல்லி ஜெபம் செய்வோம். ஆனால், அதற்கு வேறொரு நல்ல தீர்வு இருக்கலாம். அல்லது, நாம் கேட்கிற விஷயங்கள் யெகோவாவின் விருப்பத்துக்கு ஏற்றபடி இல்லாமல் இருக்கலாம். (1 யோ. 5:14) ஒரு பெற்றோரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஜெபம் செய்தார்கள். அவர்கள் கேட்பது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், தனக்கு சேவை செய்ய சொல்லி யெகோவா யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். நம் பிள்ளைகள் உட்பட, நாம் எல்லாருமே அவரை ஆசைப்பட்டு வணங்க வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்க்கிறார். (உபா. 10:12, 13; 30:19, 20) அதனால், பெற்றோர்கள் அப்படி ஜெபம் செய்வதற்குப் பதிலாக, பிள்ளைகளுடைய மனதைத் தொடும் விதத்தில் கற்றுக்கொடுக்க உதவ சொல்லி யெகோவாவிடம் கேட்கலாம். அப்படிக் கற்றுக்கொடுத்தால், பிள்ளைகளுக்குத் தானாகவே யெகோவாமேல் அன்பு வளரும்; அவருடைய நண்பராக ஆசைப்படுவார்கள்.—நீதி. 22:6; எபே. 6:4. w23.11 21 ¶5; 23 ¶12
திங்கள், ஜூலை 21
ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்துங்கள்.—1 தெ. 4:18.
“ஆறுதல்” என்று பவுல் பயன்படுத்திய வார்த்தையின் அர்த்தத்தைப் பற்றி, ஒரு பைபிள் ஆராய்ச்சி புத்தகம் இப்படி சொல்கிறது: “ஒருவர் ரொம்ப கஷ்டமான சோதனையை அனுபவிக்கும்போது, அவருக்குப் பக்கத்திலேயே நின்று அவரை உற்சாகப்படுத்துவதை” அது குறிக்கிறது. வாழ்வுக்கான பாதையில் ஓட முடியாமல் சோர்ந்துபோய் இருக்கிற ஒருவரை ஆறுதல்படுத்தும்போது, அவரை எழுப்பிவிட்டு தொடர்ந்து ஓடுவதற்கு உதவுவதுபோல் இருக்கும். மற்றவர்கள் சாய்ந்து அழுவதற்கு நாம் தோள் கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்மேல் அன்பு காட்டுகிறோம் என்று அர்த்தம். (2 கொ. 7:6, 7, 13) கரிசனை காட்டுவதற்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. கரிசனை உள்ள ஒருவர் மற்றவர்களை எப்படியாவது ஆறுதல்படுத்த வேண்டும், அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று ஏங்குவார். நமக்குள்ளே கரிசனை இருந்தால்தான், நம்மால் மற்றவர்களை ஆறுதல்படுத்த முடியும். யெகோவா கரிசனையுள்ள கடவுளாக இருப்பதால்தான் மற்றவர்களை ஆறுதல்படுத்துகிறார் என்று பவுல் சொன்னார். யெகோவா “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” என்று எழுதினார்.—2 கொ. 1:3. w23.11 9-10 ¶8-10
செவ்வாய், ஜூலை 22
‘உபத்திரவங்களில் சந்தோஷப்படலாம்.’—ரோ. 5:3.
கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிற எல்லாருக்கும் உபத்திரவங்கள் கண்டிப்பாக வரும். அப்போஸ்தலன் பவுலும் உபத்திரவங்களை சந்தித்தார். தெசலோனிக்கேயர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: “நமக்குக் கண்டிப்பாக உபத்திரவம் வரும் என்று உங்களோடு இருந்தபோதே நாங்கள் பல தடவை சொன்னோம்; அதன்படியே உபத்திரவம் வந்துவிட்டது.” (1 தெ. 3:4) கொரிந்தியர்களுக்கு இப்படி எழுதினார்: “எங்களுக்கு வந்த சோதனையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம் . . . பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.” (2 கொ. 1:8; 11:23-27) இன்று நமக்கும், ஏதோவொரு விதத்தில் உபத்திரவம் வரும் என்று எதிர்பார்க்கலாம். (2 தீ. 3:12) இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய சீஷராக ஆனதால் நண்பர்களோ சொந்தக்காரர்களோ உங்களை மோசமாகக்கூட நடத்தியிருக்கலாம். நேர்மையாக நடந்துகொண்டதால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குப் பிரச்சினை வந்திருக்கலாம். (எபி. 13:18) ஊழியம் செய்வதால் அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கலாம். இப்படி, எந்த மாதிரி உபத்திரவங்கள் வந்தாலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பவுல் சொன்னார். w23.12 10-11 ¶9-10
புதன், ஜூலை 23
என்னை எவ்வளவு பெரிய பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டீர்கள்! —ஆதி. 34:30.
யாக்கோபுக்கு நிறைய பிரச்சினைகள் வந்தன. யாக்கோபின் இரண்டு மகன்களான சிமியோனும் லேவியும் குடும்பத்தின் பெயரைக் கெடுத்தார்கள், யெகோவாவின் பெயரையும் களங்கப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, யாக்கோபின் ஆசை மனைவி ராகேல் இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டாள். இதெல்லாம் போதாதென்று, கடுமையான பஞ்சத்தினால் யாக்கோபு வயதான காலத்தில் எகிப்துக்குக் குடிமாறிப்போக வேண்டியிருந்தது. (ஆதி. 35:16-19; 37:28; 45:9-11, 28) இவ்வளவு நடந்தும், யெகோவா மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை யாக்கோபு விடவே இல்லை. அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார். யாக்கோபுக்கு நிறைய சொத்துகளைக் கொடுத்து யெகோவா ஆசீர்வதித்தார். நிறைய வருஷங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக அவர் நினைத்துக்கொண்டிருந்த அவருடைய மகன் யோசேப்பை மறுபடியும் பார்க்கும் சந்தோஷத்தை யெகோவா அவருக்குக் கொடுத்தார். யெகோவாவோடு நெருக்கமான பந்தம் இருந்ததால்தான் யாக்கோபினால் எல்லா பிரச்சினைகளையுமே சமாளிக்க முடிந்தது. (ஆதி. 30:43; 32:9, 10; 46:28-30) நாமும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொண்டால், திடீரென்று வரும் பிரச்சினைகளை நம்மாலும் நல்லபடியாகச் சமாளிக்க முடியும். w23.04 15 ¶6-7
வியாழன், ஜூலை 24
யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார். எனக்கு ஒரு குறையும் வராது.—சங். 23:1.
யெகோவா எப்போதுமே அன்பு காட்டுவார் என்பதை தாவீது உறுதியாக நம்பினார். அவருடைய நம்பிக்கையை சங்கீதம் 23-ல் பார்க்க முடியும். தனக்கும் தன்னுடைய மேய்ப்பரான யெகோவாவுக்கும் எவ்வளவு நெருக்கமான பந்தம் இருக்கிறது என்பதை தாவீது அதில் விவரித்திருக்கிறார். யெகோவா தன்னை வழிநடத்துவதால் பாதுகாப்பாக உணர்வதாக தாவீது சொல்கிறார். யெகோவாவையே முழுமையாக நம்பியிருப்பதாகவும், யெகோவாவின் மாறாத அன்பு வாழ்நாளெல்லாம் தனக்குக் கிடைக்கும் என்றும் தாவீது சொன்னார். அவருக்கு எப்படி இந்தளவுக்கு நம்பிக்கை வந்தது? தன்னுடைய எல்லா தேவைகளையும் யெகோவா கவனித்துக்கொண்டதை தாவீது உணர்ந்தார். யெகோவாவின் நட்பும் அங்கீகாரமும் தனக்கு இருந்ததையும் அவர் உணர்ந்தார். அதனால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் சரி யெகோவா தன்னை பார்த்துக்கொள்வார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். தாவீதுக்கு இருந்த பயங்களை விட, யெகோவா எப்போதுமே அன்பு காட்டுவார் என்ற நம்பிக்கைதான் அதிகமாக இருந்தது. அதனால் அவருடைய இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது.—சங். 16:11. w24.01 29 ¶12-13
வெள்ளி, ஜூலை 25
இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.—மத். 28:20.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, யெகோவாவின் மக்களால் நிறைய நாடுகளில் சுதந்திரமாக ஊழியம் செய்ய முடிந்தது. இப்போது இந்த வேலை மிகப் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. இன்று ஆளும் குழுவில் இருக்கும் சகோதரர்கள் வழிநடத்தலுக்காக இயேசுவை நம்பியிருக்கிறார்கள். யெகோவாவும் இயேசுவும் என்ன ஆலோசனையைக் கொடுக்க நினைக்கிறார்களோ அதையே இவர்களும் கொடுக்க நினைக்கிறார்கள். வட்டாரக் கண்காணிகளையும் மூப்பர்களையும் பயன்படுத்தி சபைகளுக்கு இவர்கள் வழிநடத்தலை கொடுக்கிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள், ஒருவிதத்தில் எல்லா மூப்பர்களும், இயேசுவின் “வலது கையில்” இருக்கிறார்கள். (வெளி. 2:1) இந்த மூப்பர்கள் எல்லாரும் குறையுள்ளவர்கள்தான்; சிலசமயங்களில் அவர்கள் தவறுகள் செய்யலாம். மோசே, யோசுவா மற்றும் அப்போஸ்தலர்களும் சிலசமயங்களில் தவறுகள் செய்தார்கள். (எண். 20:12; யோசு. 9:14, 15; ரோ. 3:23) ஆனாலும், உண்மையுள்ள அடிமையையும் சபையில் இருக்கிற மூப்பர்களையும் இயேசு கவனமாக வழிநடத்தி வருகிறார். இந்த சகோதரர்கள் மூலமாக இயேசு கொடுக்கும் வழிநடத்தலை நாம் தாராளமாக நம்பலாம். w24.02 23-24 ¶13-14
சனி, ஜூலை 26
அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.—எபே. 5:1.
யெகோவாமேல் இருக்கும் அன்பாலும் நன்றியுணர்வாலும் அவரைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்கிறோம். மக்கள் யெகோவாவிடம் நெருங்கி வரவேண்டும் என்ற ஆசையால்தான் நாம் ஊழியம் செய்கிறோம். நம்மைப் போல் அவர்களும் யெகோவாவை ஒரு பாசமான அப்பாவாக பார்க்க உதவுகிறோம். (யாக். 4:8) அதனால்தான், யெகோவாவுடைய அன்பு, நீதி, ஞானம், வல்லமை போன்ற குணங்களைப் பற்றி மக்களிடம் சந்தோஷமாகப் பேசுகிறோம். நாம் யெகோவாவைப் போலவே நடந்துகொள்வதன் மூலமும் அவரைப் புகழ்கிறோம், சந்தோஷப்படுத்துகிறோம், இந்த உலகத்தில் இருந்தும் தனியாகத் தெரிகிறோம். நாம் வித்தியாசமாக இருப்பதை மக்களும் பார்ப்பார்கள்; ஏன் அப்படி இருக்கிறோம் என்று யோசிப்பார்கள். (மத். 5:14-16) அவர்களிடம் பேசும்போது நாம் ஏன் அப்படி இருக்கிறோம் என்பதை விளக்க முடியும். இதனால் நல்ல மனதுள்ளவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவார்கள். இப்படியெல்லாம் நம் அப்பாவைப் புகழும்போது அவரை சந்தோஷப்படுத்துகிறோம்.—1 தீ. 2:3, 4. w24.02 10 ¶7
ஞாயிறு, ஜூலை 27
‘மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் கண்டிக்கவும் அவரால் முடியும்.’—தீத். 1:9.
முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரராக ஆக வேண்டும் என்றால், வாழ்க்கைக்குத் தேவையான சில திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்வது முக்கியம். சபையில் சில பொறுப்புகளை செய்ய அது உங்களுக்கு உதவும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்கு உங்களுக்கு ஒரு வேலை தேவை. அதைக் கண்டுபிடிக்கவும், மற்றவர்களோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ளவும் இந்த மாதிரியான திறமைகள் தேவை. உதாரணத்துக்கு, நன்றாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொள்ளுங்கள். தினமும் பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசிக்கும் ஒரு நபர் சந்தோஷமாக இருப்பார். அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். (சங். 1:1-3) தினமும் பைபிளை வாசிக்கும்போது யெகோவா எப்படி யோசிக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அப்போது, நாம் தெளிவாக யோசிப்போம். பைபிள் வசனங்களை எந்த சூழ்நிலையில் எப்படிப் பொருத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வோம். (நீதி. 1:3, 4) பைபிளில் இருந்து கற்றுக்கொடுக்க தெரிந்த, ஆலோசனை கொடுக்க தெரிந்த சகோதரர்களிடம்தான் சபையில் இருக்கிறவர்கள் உதவி கேட்டு வருவார்கள். உங்களுக்கு நன்றாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்தால், பேச்சுகளை நன்றாக தயாரித்துக் கொடுக்க முடியும், பதில்களையும் சொல்ல முடியும். இது மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும், உங்கள் விசுவாசத்தையும் பலப்படுத்தும். w23.12 26-27 ¶9-11
திங்கள், ஜூலை 28
‘உலகத்தோடு ஒன்றுபட்டிருக்கிற பிசாசைவிட உங்களோடு ஒன்றுபட்டிருக்கிற கடவுள் உயர்ந்தவராக இருக்கிறார்.’ —1 யோ. 4:4.
உங்களுக்குப் பயமாக இருக்கும்போது, சாத்தான் இல்லாத காலத்தில் யெகோவா என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பற்றி யோசியுங்கள். 2014 மண்டல மாநாட்டில் ஒரு நடிப்பு இருந்தது. அதில் ஒரு அப்பா தன் குடும்பத்தோடு 2 தீமோத்தேயு 3:1-5-ல் இருப்பதைக் கலந்துபேசுவார். புதிய உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி அந்த வசனங்கள் சொல்லியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் வாசிப்பார்கள்: “புதிய உலகத்தில் மிகவும் சந்தோஷமான காலம் வரும் என்று தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் மற்றவர்களை நேசிப்பவர்களாக, ஆன்மீக காரியங்களை விரும்புகிறவர்களாக, அடக்கமுள்ளவர்களாக, மனத்தாழ்மையுள்ளவர்களாக, கடவுளைத் துதிக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக, நன்றியுள்ளவர்களாக, உண்மையுள்ளவர்களாக, பந்தபாசமுள்ளவர்களாக, ஒத்துப்போகிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி எப்போதும் நல்ல விதமாக பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக, மென்மையானவர்களாக, நல்ல காரியங்களை விரும்புகிறவர்களாக, நம்பகமானவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக, தலைக்கனம் இல்லாதவர்களாக, சுகபோக வாழ்க்கையை நேசிக்காமல் கடவுளை நேசிக்கிறவர்களாக, கடவுள் பக்தியுள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு நீ நெருங்கி இரு.” புதிய உலகத்தில் நம் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் குடும்பத்தில் இருக்கிறவர்களிடமும் சகோதர சகோதரிகளிடமும் அடிக்கடி பேசுகிறீர்களா? w24.01 6 ¶13-14
செவ்வாய், ஜூலை 29
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன். —லூக். 3:22.
ஒரு தொகுதியாக யெகோவா தன்னுடைய மக்களை ஏற்றுக்கொள்கிறார். அவர்களை “பார்த்து சந்தோஷப்படுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 149:4) ‘ஆனால் என்னைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவாரா? என்னை ஏற்றுக்கொள்வாரா?’ என்ற சந்தேகம் சிலசமயம் நமக்கு வரலாம். பைபிள் காலங்களில் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பேருக்குக்கூட இப்படிப்பட்ட சந்தேகம் வந்திருக்கிறது. (1 சா. 1:6-10; யோபு 29:2, 4; சங். 51:11) பாவ இயல்புள்ள மனிதர்களை யெகோவா ஏற்றுக்கொள்கிறார் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுமேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (யோவா. 3:16) ஞானஸ்நானம் எடுக்கும்போது, நாம் செய்த பாவங்களிலிருந்து மனம் திருந்தி இருக்கிறோம் என்பதையும் யெகோவாவின் விருப்பத்தை செய்ய வாக்கு கொடுத்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாக காட்டுகிறோம். (அப். 2:38; 3:19) இப்படி, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள நாம் முயற்சிகள் எடுக்கும்போது அவர் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அர்ப்பணித்த சமயத்தில் நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்தால் யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வார், நம்மை அவருடைய நெருங்கிய நண்பராக பார்ப்பார்.—சங். 25:14. w24.03 26 ¶1-2
புதன், ஜூலை 30
நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது.—அப். 4:20.
பிரசங்கிக்கக் கூடாதென்று அரசாங்க அதிகாரிகள் சொன்னாலும் தொடர்ந்து பிரசங்கிப்பதன் மூலம், முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போலவே நாமும் நடந்துகொள்ளலாம். ஊழியத்தை நல்லபடியாகச் செய்து முடிக்க யெகோவா உதவி செய்வார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். அதனால் தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யலாம். பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நம்மில் நிறைய பேருடைய உடல் அல்லது மனம் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்... அன்பானவர்களை மரணத்தில் இழந்து நாம் தவித்துக்கொண்டு இருக்கலாம்... குடும்பப் பிரச்சினைகளால், துன்புறுத்தலால், அல்லது வேறு சில பிரச்சினைகளால்கூட நாம் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம். அதுவும், கொள்ளைநோய், போர் போன்றவை வந்துவிட்டால் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பது நமக்கு இன்னும் கஷ்டமாகிவிடலாம். அந்த மாதிரி சூழ்நிலையில், ஒரு நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். யெகோவா ‘உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்’ என்று நம்பிக்கையோடு இருங்கள். (சங். 37:3, 5) விடாமல் ஜெபம் செய்வது, ‘உபத்திரவத்தில் சகித்திருக்க’ நமக்கு உதவும். (ரோ. 12:12) நாம் படும் பாடுகள் யெகோவாவுக்குத் தெரியும், ‘உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார்.’—சங். 145:18, 19. w23.05 5-6 ¶12-15
வியாழன், ஜூலை 31
நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.—எபே. 5:10.
முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில், “யெகோவாவின் விருப்பம் என்னவென்று” நாம் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கேற்ற மாதிரி செயல்பட வேண்டும். (எபே. 5:17) நம் சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் நியமங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, அந்த சூழ்நிலையைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்வோம். அந்த நியமங்களின்படி செய்யும்போது, நல்ல தீர்மானங்களை எடுப்போம். இந்த உலகத்தில் இருக்கும் விஷயங்களில் நாம் மூழ்கிவிட வேண்டும், கடவுளுக்கு சேவை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்கக் கூடாது என்று ‘பொல்லாதவனான’ சாத்தான் நினைக்கிறான். (1 யோ. 5:19) யெகோவாவுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக பணம் பொருள், கல்வி, வேலை என்று இவற்றுக்குப் பின்னால் ஒரு கிறிஸ்தவர் ஓட ஆரம்பித்துவிடலாம். ஆனால் அவர் அப்படிச் செய்தால், உலகத்தில் இருக்கிறவர்கள் மாதிரி அவர் யோசிக்கிறார் என்று அர்த்தம். இந்த விஷயங்கள் எல்லாம் தவறு இல்லைதான். ஆனால், அதெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வந்துவிடக் கூடாது. w24.03 24 ¶16-17