உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 1/1 பக். 15-20
  • யெகோவா எனக்குச் சகாயர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா எனக்குச் சகாயர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் உதவி தேவை
  • செயலில் சகோதர அன்பு
  • உபசரிக்கிறவர்களாயிருங்கள்
  • துன்புறுத்தப்படுகிறவர்களை நினைவுகூருங்கள்
  • விவாகம் கனமுள்ளதாயிருக்க வேண்டும்
  • உள்ளது போதுமென்றிருத்தல்
  • யெகோவாவில் நம்பிக்கையாயிரு
  • யெகோவாவுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • சகோதர அன்பைக் காட்ட தீர்மானமாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெகோவாவுக்குச் சாட்சிகொடுத்துச் சோர்ந்துபோகாதிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 1/1 பக். 15-20

யெகோவா எனக்குச் சகாயர்

“அதினாலே நாம் தைரியங்கொண்டு: ‘யெகோவா எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்?’ என்று சொல்.”—எபிரெயர் 13:6.

1, 2. (எ) சங்கீதக்காரன், அப்போஸ்தலனாகிய பவுல் ஆகிய இருவருமே யெகோவாவில் என்ன நம்பிக்கையை வெளியிட்டனர்? (பி) என்ன கேள்விகள் எழும்புகின்றன?

யெகோவா தேவன் குறைவுபடாத உதவியின் ஊற்றுமூலமாக இருக்கிறார். சங்கீதக்காரன் இதை அனுபவப்பூர்வமாக அறிந்திருந்து இவ்விதமாகச் சொல்லக்கூடியவனாக இருந்தான்: “யெகோவா என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங்கீதம் 118:6) அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஆவியால் ஏவப்பட்டு எழுதியக் கடிதத்தில் இது போன்றக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறான்.

2 கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து ஒருவேளை சங்கீதக்காரனின் வார்த்தைகளை மேற்கோள் காண்பிப்பவனாய், பவுல் எபிரெய உடன் வணக்கத்தாரிடம் சொன்னதாவது: “அதினாலே நாம் தைரியங்கொண்டு: ‘யெகோவா எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்?’” (எபிரெயர் 13:6) ஏன் அப்போஸ்தலன் இவ்விதமாக எழுதினான்? சூழமைவிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?

யெகோவாவின் உதவி தேவை

3. (எ) என்ன சூழ்நிலைமைகளின் கீழ் யெகோவா பவுலுக்குச் சகாயராக நிரூபித்தார்? (பி) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அவர்களுடைய சகாயராக யெகோவா ஏன் விசேஷமாகத் தேவைப்பட்டார்?

3 பவுல், யெகோவா தனக்குச் சகாயராயிருந்ததற்கு அத்தாட்சியைக் கொண்டிருந்த, தன்னையே தியாகம் செய்த ஒரு சாட்சியாக இருந்தான். கடவுள் அநேக துன்பங்களின் மத்தியில் அப்போஸ்தலனுக்கு உதவி செய்திருந்தார். பவுல் சிறையிலடைக்கப்பட்டான், அடிக்கப்பட்டான், கல்லெறியப்பட்டான். கிறிஸ்தவ ஊழியனாக அவனுடைய பிரயாணங்களின்போது அவன் கப்பற்சேதத்தையும் மற்ற அநேக ஆபத்துக்களையும் அனுபவித்தான். கடும் உழைப்பு, தூக்கமில்லா இரவுகள், பசி, தாகம், நிர்வாணமும்கூட அவனுக்குப் பழக்கப்பட்டவையாக இருந்தன. “இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது” என்றான் அவன். (2 கொரிந்தியர் 11:24–29) பவுல் எபிரெய கிறிஸ்தவர்களின்பேரில் அப்பேர்ப்பட்ட ஒரு கவலையைக் கொண்டிருந்தான். எருசலேமின் நாட்கள் எண்ணப்பட்டிருந்தன. யூதேயாவிலிருந்த அப்போஸ்தலனின் யூத சகோதர சகோதரிகள் விசுவாசத்தின் பெரும் சோதனைகளை எதிர்ப்படுவர். (தானியேல் 9:24–27; லூக்கா 21:5–24) ஆகவே அவர்கள் யெகோவாவை சகாயராகக் கொண்டிருப்பது அவசியமாக இருக்கும்.

4. எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் முழுவதிலுமாக என்ன அடிப்படையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது?

4 பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தை ஆரம்பிக்கையில், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவர்கள் செவி கொடுத்தால் மாத்திரமே தெய்வீக உதவியை அனுபவிக்க முடியும் என்பதைக் காண்பித்தான். (எபிரெயர் 1:1, 2) இந்தக் குறிப்பு கடிதத்தில் அதிகத் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, இந்தப் புத்திமதிக்கு ஆதாரமாக, இஸ்ரவேலர் கீழ்ப்படியாமைக்காக வனாந்தரத்தில் தண்டிக்கப்பட்டதை அப்போஸ்தலன் அவனுடைய வாசகர்களுக்கு நினைப்பூட்டினான். எபிரெய கிறிஸ்தவர்கள் இயேசுவின் மூலமாக கடவுள் அவர்களுக்குச் சொன்னவற்றைத் தள்ளிவிட்டு கிறிஸ்துவினுடைய பலியினால் தள்ளுபடி செய்யப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்தையே பற்றிக் கொண்டு விசுவாச துரோகிகளானால் அவர்கள் எவ்வாறு தண்டனையிலிருந்து தப்பமுடியும்!—எபிரெயர் 12:24–27.

செயலில் சகோதர அன்பு

5. (எ) எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் வேறு என்ன புத்திமதி கொடுக்கப்பட்டது? (பி) அன்பைப் பற்றி பவுல் என்ன சொன்னான்?

5 எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம், தங்கள் முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவை எவ்விதமாக பின்பற்றுவது, ‘பயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவை செய்து,’ யெகோவாவை அவர்களுடைய சகாயராகக் கொண்டிருப்பது என்பதன் பேரில் பரலோக ராஜ்யத்தின் எதிர்கால வாரிசுகளுக்குப் புத்திமதியைக் கொடுத்தது. (எபிரெயர் 12:1–4, 28, 29) பவுல் உடன்விசுவாசிகளை, ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவும்படி’ ஒழுங்காகக் கூடிவரும்படியாக துரிதப்படுத்தினான். (எபிரெயர் 10:24, 25) இப்பொழுது அவன் புத்திமதி சொன்னதாவது: “சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.”—எபிரெயர் 13:1.

6. எந்த அர்த்தத்தில் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு அன்பின் சம்பந்தமாக “புதிதான கட்டளை”யைக் கொடுத்தார்?

6 இயேசு, தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இப்படிப்பட்ட அன்பையே கட்டளையிட்டார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) “உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனில் [அல்லது அயலான்] அன்புகூருவாயாக” என்று சொன்ன மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் அதிகத்தைக் கேட்ட காரணத்தால் இது “புதிதான கட்டளை”யாக இருந்தது. (லேவியராகமம் 19:18) “புதிதான கட்டளை” ஓர் ஆள் தன்னில் அன்புகூருவது போல தன்னுடைய அயலானில் அன்புகூருவதைக் கேட்பதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்தது. ஒருவர் வேறு ஒருவருக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் அளவுக்குத் தன்னையே தியாகம் செய்யும் அன்பைக் கேட்பதாயிருந்தது. இயேசுவின் வாழ்க்கையும் மரணமும் அவ்வகையான ஓர் அன்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. கிறிஸ்தவர்களைப் பற்றிய உலகப்பிரகாரமான ஆட்களின் கருத்தை மேற்கோள் காண்பிக்கையில், டெர்டூலியன், குறிப்பாக இந்த அடையாளத்தைக் குறிப்பிட்டான்: “‘இதோ’ அவர்கள் சொல்கிறார்கள். ‘எவ்வாறு அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். . . . எவ்வாறு அவர்கள் ஒருவருக்காக ஒருவர் மரிக்க தயாராக இருக்கிறார்கள்.’”—மன்னிப்பு (Apology) அதிகாரம் XXXIX, 7.

7. பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தேவிற்குப் பின்பு சகோதர அன்பு எவ்விதம் தெளிவாக காணப்பட்டது?

7 பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவுக்குப் பின்னர் இயேசுவின் சீஷர்களின் மத்தியில் சகோதர அன்பு தெளிவாகக் காணப்பட்டது. தொலைத் தூரங்களிலுமிருந்து வந்திருந்த புதிதாக முழுக்காட்டப்பட்ட அநேக விசுவாசிகள், எருசலேமில் தங்கள் குடியிருப்புக் காலத்தை நீடிக்கச் செய்து கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றி அதிகத்தைக் கற்றுக் கொள்ளும் பொருட்டு, “விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.”—அப்போஸ்தலர் 2:43–47; 4:32–37.

8. இன்று யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சகோதர அன்பு இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

8 இப்படிப்பட்ட சகோதர அன்பு, நம்முடைய காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணப்படுகிறது. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, இப்படிப்பட்ட அன்பு கடவுளுடைய மக்களை, இரண்டரை ஆண்டுக் கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தூண்டியது. கானடா, ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய மாகாணங்கள் இன்னும் மற்ற தேசங்களிலுள்ள சாட்சிகள், போரினால் சின்னாபின்னமான ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சீனா, செக்கோஸ்லோவேக்கியா, டென்மார்க், இங்கிலாந்து, பின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஃபிலிப்பீன்ஸ், போலந்து மற்றும் ரோமானியா தேசங்களிலுள்ள உடன் விசுவாசிகளுக்கு உடையையும் உணவு வாங்கப் பணத்தையும் நன்கொடையாக அளித்தார்கள். இது வெறும் ஓர் உதாரணமாகவே இருக்கிறது. ஏனென்றால், பெருவிலும் மெக்ஸிக்கோவிலும் பூமியதிர்ச்சிக்கும் ஜமேக்காவில் புயல்காற்றுக்கும் மற்ற இடங்களில் இதே போன்று விபத்துக்களுக்கும் பலியான கிறிஸ்தவர்களுக்கு இப்படிப்பட்ட அன்பை, அண்மையில் கடவுளுடைய ஊழியர்கள் காண்பித்திருக்கிறார்கள். இவ்வகையிலும் மற்ற அநேக வழிகளிலும் யெகோவாவின் மக்கள் ‘சகோதர சிநேகம் நிலைத்திருக்கச் செய்கிறார்கள்.’

உபசரிக்கிறவர்களாயிருங்கள்

9. (எ) எபிரெயர் 13:2-ல் என்ன தெய்வீகப் பண்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது? (பி) சிலர் எவ்விதமாக அறியாமல் ‘தேவதூதரை உபசரித்திருக்கிறார்கள்’?

9 பவுல் அடுத்ததாக, கிறிஸ்துவைப் பின்பற்றும் ஆட்களால் வெளிக்காட்டப்படும் மற்றொரு தன்மையைக் குறிப்பிடுகிறான். அது ‘பயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவை செய்வதும்’ யெகோவாவைத் தங்கள் சகாயராகக் கொண்டிருப்பதுமாகும். அவன் துரிதப்படுத்தியதாவது: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.” (எபிரெயர் 13:2) அறியாமல் “தேவதூதரை உபசரித்தது” யார்? ஆம், முற்பிதாவாகிய ஆபிரகாம், மூன்று தேவதூதர்களுக்கு விருந்தளித்தான். (ஆதியாகமம் 18:1–22) அவர்களில் இரண்டு பேர் அவ்விடத்தைவிட்டு புறப்பட்டார்கள். அவனுடைய உடன் பிறந்தவனின் குமாரனாகிய லோத்து, இந்த அந்நியர்களை சோதோமிலிருந்த தன் வீட்டுக்குள் அழைத்தான். ஆனால் அவர்கள் படுக்கும் முன்னே, லோத்துவின் வீட்டை “வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள” ஜனங்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர். இவர்கள் லோத்து அவனுடைய விருந்தாளிகளை ஒழுக்கங் கெட்ட செயலுக்காக வெளியே கொண்டுவர வேண்டும் என்பதாக வற்புறுத்தினார்கள். ஆனால் அவன் விடாப்பிடியாக அதற்கு மறுத்துவிட்டான். லோத்து முதலில் இதை அறியாவிட்டாலும், ‘யெகோவா சோதோமின் மேலும் கொமோராவின் மேலும் வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப் பண்ணின’போது மரணத்திலிருந்து தப்புவிக்க அவனுக்கும் அவனுடைய குமாரத்திகளுக்கும் உதவி செய்த தேவதூதர்களை அவன் விருந்தோம்பியிருந்தான்.—ஆதியாகமம் 19:1–26.

10. உபசரிக்கும் கிறிஸ்தவர்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்?

10 உபசரிக்கும் கிறிஸ்தவர்கள் அநேக ஆசீர்வாதங்களை அனுபவித்துக் களிக்கின்றனர். அவர்களுடைய விருந்தினர் கூறும் மதிப்புள்ள அனுபவங்களைக் கேட்டு, ஆவிக்குரிய வகையில் பயனுள்ளதாக இருக்கும் அவர்களுடையக் கூட்டுறவிலிருந்து நன்மையடைகிறார்கள். காயு உடன்விசுவாசிகளையும் “அந்நியரை”யும் ஏற்றுக் கொண்டதற்காகப் பாராட்டப்பட்டான். அதே போலவே இப்பொழுது யெகோவாவின் மக்களில் அநேகர் பயணக் கண்காணிகளை உபசரிக்கிறார்கள். (3 யோவான் 1, 5–8) மூப்பராக நியமிக்கப்படுவதற்கு உபசரிக்கிறவனாயிருப்பது ஒரு தகுதியாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:7, 8) அபிஷேகம் பண்ணப்பட்ட தம்முடைய “சகோதரர்களுக்கு” உபசரணையுடன் நல்ல காரியங்களைச் செய்த செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களுக்கு இயேசு ராஜ்ய ஆசீர்வாதங்களை வாக்களித்ததும்கூட குறிப்பிடத்தக்கதாகும்.—மத்தேயு 25:34–40.

துன்புறுத்தப்படுகிறவர்களை நினைவுகூருங்கள்

11. எபிரெயர் 13:3-லுள்ள புத்திமதி ஏன் பொருத்தமாக இருந்தது?

11 யெகோவாவின் உதவியை விரும்புகிறவர்களும் ‘பயத்தோடும் பக்தியோடும் அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறவர்களும்,’ துன்பமனுபவிக்கின்ற உடன் விசுவாசிகளை மறந்துவிடக்கூடாது. தீங்கனுபவிக்கும் கிறிஸ்தவர்கள் சகித்துக் கொள்ளும் துன்பங்களைப் பவுல் புரிந்துகொண்டான். கொஞ்சக் காலத்துக்கு முன்புதானே, சீஷர்கள் துன்புறுத்தலால் சிதறடிக்கப்பட்டிருந்தார்கள். அவனுடைய உடன்வேலையாளனாகிய தீமோத்தேயு அப்போதுதானே சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தான். (எபிரெயர் 13:23; அப்போஸ்தலர் 11:19–21) கிறிஸ்தவ மிஷனரிமார்களும்கூட பிரயாணம் செய்து புதிய சபைகளை ஸ்தாபித்துக் கொண்டு அல்லது ஏற்கெனவே இருந்துவரும் சபைகளை ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது இடம் மாறிக் கொண்டிருந்த சகோதர சகோதரிகளில் அநேகர் புறஜாதியாராயிருந்தபடியால், சில எபிரெய கிறிஸ்தவர்கள் அவர்களைக் குறித்து போதிய அளவு கவலையுள்ளவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். அப்படியென்றால் பின்வரும் புத்திமதி பொருத்தமாகவே இருந்தது: “கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள் போல, அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்.”—எபிரெயர் 13:3.

12. தீங்கனுபவிக்கும் உடன்விசுவாசிகளை மனதில் கொண்டிருக்கும்படியான புத்திமதியை நாம் எவ்விதமாக பின்பற்றக்கூடும்?

12 எபிரெயர்கள் “கட்டப்பட்டிருக்கிறவர்களுக்காக பரிதபித்தி”ருந்தார்கள். ஆனால் அவர்கள் யூதராயிருந்தாலும் புறஜாதியாராயிருந்தாலும் இப்படிப்பட்ட உண்மையுள்ள உடன்வணக்கத்தாரை மறந்துவிடக் கூடாதவர்களாக இருந்தனர். (எபிரெயர் 10:34) ஆனால் நம்மைப் பற்றி என்ன? நாம் எவ்விதமாக தீங்கனுபவிக்கும் கிறிஸ்தவர்களை மனதில் கொண்டிருக்கிறோம் என்பதை காண்பிக்கக்கூடும்? சிலருடைய விஷயங்களில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலை தடை செய்யப்பட்டிருக்கும் தேசங்களில் விசுவாசத்துக்காக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் உடன்விசுவாசிகளுக்கு உதவி செய்ய முயற்சி செய்யும் வகையில் கடிதத்தின் மூலமாக அரசாங்க அதிகாரிகளிடத்தில் நாம் வேண்டிக்கொள்வது பொருத்தமாக இருக்கும். விசேஷமாக நாம் அவர்களை நம்முடைய ஜெபங்களில், கூடுமானால் சிலரை அவர்களுடையப் பெயரால் குறிப்பிட்டு, நினைவுகூர வேண்டும். அவர்கள் துன்புறுத்தப்படுவது நம்மை வெகுவாகப் பாதிக்கிறது. அவர்கள் சார்பாக நாம் ஏறெடுக்கும் ஊக்கமான விண்ணப்பங்களை யெகோவா கேட்கிறார். (சங்கீதம் 65:2; எபேசியர் 6:17–20) நாம் அதே சிறையில் இல்லாவிட்டாலும், நாம் அவர்களோடே கட்டப்பட்டு, அவர்களுக்கு உதவியையும் ஊக்குவிப்பையும் கொடுக்க முடிவதுபோல இருக்கிறது. ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே, தீங்கனுபவிக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்காக அனுதாபப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 12:19–26 ஒப்பிடவும்.) இவர்கள் துன்புறுத்துகிறவர்களின் கைகளில் பலவிதமான தீங்குகளை அனுபவிக்கும் பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய துன்புறுத்தப்படும் அவர்களுடைய தோழர்களுக்காக அதேவிதமாகக் கவலைக் கொள்ளுகிறார்கள். நாம் அனைவருமே இன்னும் மனித சரீரத்திலிருப்பதாலும் யெகோவாவின் வணக்கத்தாராக இன்னல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகும் நிலையிலிருப்பதாலும் இப்படிப்பட்ட ஓர் இரக்கம் பொருத்தமானதாக இருக்கிறது.—1 பேதுரு 5:6–11.

விவாகம் கனமுள்ளதாயிருக்க வேண்டும்

13. எபிரெயர் 13:4-ல் பவுல் சொல்வதன் சாராம்சம் என்ன?

13 கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ‘தெய்வீக பயத்தோடும் பக்தியோடும் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்வது’ மற்றவர்களிடமாக நம்முடைய அக்கறையை பல வழிகளில் பாதிக்க வேண்டும். “நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று” சொன்ன பின்பு பவுல், மற்றவர்களுக்கு சரியான மரியாதையைக் காண்பிக்க வாய்ப்பளித்த உடல் சம்பந்தமான அல்லது சரீர சம்பந்தமான ஓர் உறவைக் கொண்டிருப்பதைப் பற்றி குறிப்பிட்டான். (எபிரெயர் 13:3) அவன் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இந்த அறிவுரையைக் கொடுத்தான்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும் விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) பாலின ஒழுக்கக்கேடு ரோம பேரரசில் மேலோங்கியிருந்ததால் இந்தப் புத்திமதி எத்தனை பொருத்தமாக இருந்தது! உலகின் கீழ்த்தரமான ஒழுக்க தராதரங்களையும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாலின ஒழுக்கக்கேட்டின் காரணமாக சபை நீக்கம் செய்யப்படுவதையும் முன்னிட்டுப் பார்க்கையில், இன்றைய நாளைய கிறிஸ்தவர்களும்கூட இந்த வார்த்தைகளுக்குச் செவி கொடுப்பது அவசியமாயிருக்கிறது.

14. விவாகம் கனமுள்ளது என்று ஏன் நீங்கள் சொல்வீர்கள்?

14 பவுலினுடைய நாட்களில் விவாகத்தை உயர்வாக மதிக்காத ஆட்களின் மத்தியில் ஒரு யூத தொகுதியினர் இருந்தனர். இவர்கள் பொதுவாக விவாகமாகாதவர்களாக மணத்துறவே விவாகத்தைவிட பரிசுத்தமானது என்பதாகத் தவறாகக் கருதும் பாதிரிமார் வட்டாரத்தில் இன்றுள்ளச் சிலரைப் போல அவர்கள் இருந்தார்கள். ஆனால் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்குச் சொன்ன காரியத்திலிருந்து விவாகம் கனமுள்ளது என்பதை அவன் தெளிவாகச் சுட்டிக்காட்டினான். இதற்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த மரியாதை, நகோமி விதவைகளாகிவிட்ட தன் மருமக்கள்மாராகிய ரூத்திடமும் ஓர்பாளிடமும் தெரிவித்த இந்த விருப்பத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது: “யெகோவா உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக.” (ரூத் 1:9) வேறு ஓர் இடத்தில் பவுல் ‘பிற்காலங்களிலே சிலர் விசுவாசத்தைவிட்டு விலகி, விவாகம் பண்ணாதிருக்க’ கட்டளையிடுவார்கள் என்பதாக சுட்டிக் காண்பித்தான்.—1 தீமோத்தேயு 4:1–5.

15. எபிரெயர் 13:4-ல் வேசிக்கள்ளராயும் விபசாரக்காரராயும் குறிப்பிடப்பட்டிருப்பது யார்? கடவுள் அவர்களை எவ்விதமாக நியாயந்தீர்ப்பார்?

15 ஒரு சமயம் நியாயப்பிரமாணத்தின் கீழிருந்து, பின்னர் புதிய உடன்படிக்கைக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த எபிரெயர்கள் இந்தக் கட்டளையை அறிந்திருந்தார்கள்: “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:14) ஆனால் அவர்கள் ஒழுக்கமற்ற ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு இந்த எச்சரிப்பு அவசியமாயிந்தது: “விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” வேசிக்கள்ளரின் மத்தியிலிருந்தது பாலுறவில் ஈடுபடும் விவாகமாகாத ஆட்களாகும். விபச்சாரக்காரர் குறிப்பாக விவாகமான ஆட்களாக, தங்கள் துணைவராக இல்லாத ஒருவரோடு கணவன், மனைவி போல வாழ்க்கை நடத்தி தங்கள் சொந்த விவாக மஞ்சத்தை அசுசிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் அப்பியாசிக்கும் மனந்திரும்பாத ஆட்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக, அவர்கள் பரலோக புதிய எருசலேமுக்குள் அனுமதிக்கப்படவோ அல்லது ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியின் மீது நித்திய ஜீவனை அனுபவித்துக் களிக்கவோ மாட்டார்கள். (வெளிப்படுத்துதல் 21:1, 2, 8; 1 கொரிந்தியர் 6:9, 10) விவாகமஞ்சத்தை அசுசிப்படுத்தாதிருக்கும்படியான இந்த எச்சரிப்பு, விவாகத்தினுள் தகுதியான உடல் நெருக்கங்களைப் பற்றியதில் அசுத்தமானது எதுவுமில்லாவிட்டாலும், விவாகமான கிறிஸ்தவர்கள் தங்கள் துணைவர்களோடு அசுத்தமான பாலின நடத்தையை தவிர்க்கும்படியாகச் செய்ய வேண்டும்.—1983, மார்ச் 15 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 27–31 பார்க்கவும்.

உள்ளது போதுமென்றிருத்தல்

16, 17. எபிரெயர் 13:5-ல் என்ன சொல்லப்பட்டது? எபிரெயர்களுக்கு இந்தப் புத்திமதி ஏன் அவசியமாக இருந்தது?

16 நாம் நமக்கு முன்மாதிரியாக இருப்பவரைப் பின்பற்றி யெகோவா நம்முடைய சகாயர் என்ற நம்பிக்கையோடு ‘பயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவை செய்’வோமானால் நாம் திருப்தியைக் கண்டடைவோம். பொருளாதார முயற்சியில் முழுவதுமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வது அப்பேர்ப்பட்ட ஒரு சோதனையாக இருக்கக்கூடும். ஆனால் கிறிஸ்தவர்கள் அதற்கு அடிபணிந்துவிடக்கூடாது. எபிரெயர்களுக்குச் சொல்லப்பட்டதானது: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.’” (எபிரெயர் 13:5) எபிரெயர்களுக்கு இந்தப் புத்திமதி ஏன் அவசியமாயிருந்தது?

17 எபிரெயர்கள் ஒருவேளை பணத்தைக் குறித்து அளவுக்கு அதிகமாக கவலையுள்ளவர்களாக இருந்திருக்கலாம். ஏனென்றால் கிலவுதியு இராயனுடைய ஆட்சியின் போது ஏற்பட்ட “கொடிய பஞ்சம்” அவர்கள் நினைவிலிருந்தது. (பொ.ச. 41–54) அந்தப் பஞ்சம் அவ்வளவு மோசமாக இருந்ததன் காரணமாக, வேறே இடங்களிலிருந்த கிறிஸ்தவர்கள் யூதேயாவிலிருந்த தங்களுடைய சகோதரர்களுக்கு உணவு பொருட்களை அனுப்பி வைத்தனர். (அப்போஸ்தலர் 11:28, 29) யூத சரித்திராசிரியர் ஜோஸிஃபஸின்படி, பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்திருந்து, யூதேயாவிலும் எருசலேமிலும் கொடிய வறுமையை ஏற்படுத்தியது.—யூதர்களின் தொன்மை நிகழ்ச்சிகள், XX, 2, 5; 5, 2.

18. எபிரெயர் 13:5-லுள்ள புத்திமதி நமக்கு என்ன பாடத்தை உடையதாக இருக்கிறது?

18 இங்கே நமக்கு ஒரு பாடமிருக்கிறதா? ஆம், நாம் எவ்வளவு ஏழ்மையிலிருந்தாலும் நாம் பணத்துக்காக ஆசைப்படவோ அல்லது அதைக் குறித்து மிதமிஞ்சிக் கவலைப்படவோ கூடாது. பொருளாதார பாதுகாப்பைக் குறித்து கவலையுள்ளவர்களாக இருப்பதற்கு, பேராசையுள்ளவர்களாகிவிடுவதற்குப் பதிலாக நாம் “இருக்கிறவைகள் போதுமென்று” இருக்க வேண்டும். இயேசு சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய [கடவுளுடைய] நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:25–34) ‘நமக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது நமக்கு ஜீவனாக’ இல்லாத காரணத்தால் நாம் “தேவனிடத்தில் ஐசுவரியவானா”யிருப்பதில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்றும்கூட அவர் காண்பித்தார். (லூக்கா 12:13–21) பண ஆசையானது நம்முடைய ஆவிக்குரிய தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்குமானால் அப்போது, எபிரெயர்களுக்குப் பவுல் கொடுத்த புத்திமதிக்குச் செவி கொடுத்துப் “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்பதையும்கூட நினைவில் வைப்போமாக.—1 தீமோத்தேயு 6:6–8.

யெகோவாவில் நம்பிக்கையாயிரு

19. என்ன உறுதிமொழியை கடவுள் யோசுவாவுக்குக் கொடுத்தார்? இது நம்மை எவ்விதமாக பாதிக்க வேண்டும்?

19 ‘பயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவை செய்ய நாடுகிற’ இயேசுவின் சீஷர்களாக, நாம் நம்முடைய நம்பிக்கையைப் பணத்தில் அல்ல, ஆனால் நம்முடைய பரலோகத் தகப்பனில் வைக்க வேண்டும். இவருடைய உதவியே இன்றியமையாததாகும். நாம் என்ன பிரச்னைகளை எதிர்ப்பட்டாலும், அவருடைய இந்த உறுதிமொழியை நினைவில் வைக்க வேண்டும்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (எபிரெயர் 13:5) பவுல் இங்கே யோசுவாவுக்குக் கடவுள் சொன்ன வார்த்தைகளை குறிப்பிடுகிறான்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (யோசுவா 1:5; உபாகமம் 31:6, 8-ஐ ஒப்பிடவும்.) யெகோவா யோசுவாவை விட்டு ஒருபோதும் விலகவில்லை, நாமும் அவரில் நம்பிக்கையாயிருந்தால் அவர் நம்மை கைவிடமாட்டார்.

20. (எ) 1990-ன் வருடாந்தர வாக்கியம் என்ன? (பி) நாம் பயமில்லாமல் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?

20 முன்னாலிருக்கும் மாதங்களில் யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் கடவுளுடைய குறையாத உதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஏனென்றால் அவர்களுடைய 1990 வருடாந்தர வாக்கியம் இவ்விதமாக வாசிக்கிறது: “நாம் தைரியங்கொண்டு: ‘யெகோவா எனக்குச் சகாயர்,’ என்று சொல்லலாம்.” இந்த வார்த்தைகள் எபிரெயர் 13:6-ல் காணப்படுகின்றன. இங்கே பவுல் சங்கீதக்காரனை மேற்கோள் காண்பித்து எபிரெயர்களுக்குச் சொன்னதாவது: “அதினாலே நாம் தைரியங்கொண்டு ‘கர்த்தர் [யெகோவா, NW] எனக்குச் சகாயர், நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான்’ என்று சொல்லலாமே” (சங்கீதம் 118:6) துன்புறுத்தப்பட்டாலும் நாம் பயப்படுவதில்லை. ஏனென்றால் மனிதர்கள் கடவுள் அனுமதிப்பதற்கும் மேலாக எதையும் செய்துவிட முடியாது. (சங்கீதம் 27:1) உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களாக, நாம் மரிக்க வேண்டியிருந்தாலும்கூட நமக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) ஆகவே நாம் தொடர்ந்து நமக்கு முன்மாதிரியாயிருப்பவரைப் பின்பற்றி யெகோவா நம்முடைய சகாயர் என்ற நம்பிக்கையோடே ‘பயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவை செய்து’ கொண்டிருப்போமாக. (w89 12⁄15)

நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?

◻ எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஏன் விசேஷமாக யெகோவாவின் உதவி தேவையாக இருந்தது?

◻ யெகோவாவின் ஜனங்கள் எவ்விதமாக ‘சகோதர சிநேகம் நிலைத்திருக்கச் செய்’திருக்கிறார்கள்?

◻ உபசரிக்கிறவர்களாக ஏன் இருக்க வேண்டும்?

◻ தீங்கனுபவிக்கும் உடன்விசுவாசிகளை நாம் நினைவில் கொள்கிறோம் என்பதைக் காண்பிக்க நாம் என்ன செய்யக்கூடும்?

◻ விவாகம் ஏன் கனமுள்ளதாக வைக்கப்பட வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்