நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு நிகழ்ச்சி
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” லூக்கா 22:19-ல் காணப்படும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அந்த வார்த்தைகள் அவருடைய மரணத்தின் நினைவுகூருதலைத் தொடங்கி வைத்த சமயத்தில் பேசப்பட்டன. இயேசுவின் மரணமே, பரதீஸிய நிலைமைகளில் நித்திய ஜீவனை அடையும் எதிர்பார்ப்பை மனிதவர்க்கத்துக்கு திறந்து வைத்தது. ஆகவே அவருடைய மரணம், நாம் நினைவுகூரவேண்டிய ஒன்றாகும்.
இந்த ஆண்டு அதன் நினைவுகூருதலை நீங்கள் ஆசரிப்பீர்களா?
முக்கியமான இச்சம்பவத்தை நினைவுகூருவதில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து கொள்ள அவர்களுடைய இந்த அழைப்பைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-ம் தேதிக்கு ஒத்திருக்கும் தேதியில் சூரிய மறைவுக்குப் பின்பு இந்த ஆசரிப்பு இருக்கும். நீங்கள் மறந்துவிடாதபடிக்கு உங்கள் நாட்காட்டியில் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அது 1991-ல் மார்ச் 30-ம் தேதி நடைபெறும். உங்கள் பட்டணத்தில் இந்நிகழ்ச்சி ஆசரிக்கப்பட இருக்கும் இடத்தையும் சரியான நேரத்தையும் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்குச் சொல்லக்கூடும்.