உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 4/1 பக். 3-4
  • மகிழ்ச்சியுள்ள ஜனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிழ்ச்சியுள்ள ஜனம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மையில் மகிழ்ச்சியுள்ள ஒரு ஜனம்
  • தற்கால மகிழ்ச்சியுள்ள ஜனம்
  • நம் ராஜா யெகோவா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவா நம் ராஜா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவுக்குள் சந்தோஷமே நம் கோட்டை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 4/1 பக். 3-4

மகிழ்ச்சியுள்ள ஜனம்

மகிழ்ச்சியுள்ள ஜனம்! இன்று மனிதவர்க்கத்தின் எந்த ஜனத்துக்காவது இந்த விவரிப்பு பொருந்துகிறதா? வன்முறை, குற்றச்செயல், வறுமை, தூய்மைக்கேடு, ஊனமாக்கும் நோய்கள், அரசியல் ஊழல், மதப் பகைமை ஆகியவற்றைத் தான் அகற்றிவிட்டதென்ற மகிழ்ச்சிதரும் உரிமைபாராட்டலை எந்த ஜனமாவது செய்யக்கூடுமா? இத்தகைய இலக்குகளை எட்டும் மெய்யான நம்பிக்கையை எந்த ஜனமாவது அளிக்கிறதா? சற்றேனும் இல்லை!

உலக முழுவதிலுமுள்ள காட்சியைப்பற்றியதென்ன? சோவியத் ரஷ்யாவின் குடியரசுத் தலைவர் மைக்கேல் கொர்பச்சேவ் கடந்த ஜூலை 16 அன்று பின்வருமாறு கூறினார்: “சர்வதேச உறவுகளில் நாம் ஒரு சகாப்தத்தை விட்டு, மற்றொன்றுக்குள் பிரவேசிக்கிறோம், அது உறுதியான, நீடித்த சமாதானத்தின் காலப்பகுதியென நான் எண்ணுகிறேன்.” எனினும், அதே தேதியின் டைம் பத்திரிகை, ஐக்கிய மாகாணங்கள் இன்னும் 120 அணுகுண்டு வீச்சுத் துப்பாக்கிமுனைகளை மாஸ்கோவைக் குறிபார்த்துள்ளநிலையில் வைத்திருக்கிறது, இவற்றில் எதுவாயினும் ஒரே ஒன்று அந்த நகரத்தை முழுமையாய் அழித்துவிடுமென அறிவிப்பு செய்தது. சோவியத் அரசினர் அதேமுறையில் பதில்செய்ய தயாராயிருக்கின்றனரென்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய நாட்டு சங்கத்தின் உறுப்பினராயுள்ள பல நாடுகள் அணுசக்தி படைக்கலங்கள் உண்டுபண்ணுவது எவ்வாறென இப்பொழுது அறிந்திருப்பதால், அவர்களில் யார் முதல் குண்டுவீச்சத்தொடங்கும் மகிழ்ச்சியுடையோராவர் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில் மகிழ்ச்சி எதுவுமில்லை.

உண்மையில் மகிழ்ச்சியுள்ள ஒரு ஜனம்

சரித்திரத்தில் ஒரு காலத்தில்—3,500 ஆண்டுகளுக்கு முன்னால்—உண்மையில் மகிழ்ச்சியுள்ள ஒரு ஜனம் இருந்தது. அது பூர்வ இஸ்ரவேலே. கடவுள் அந்த ஜனத்தை எகிப்தின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலைசெய்தபோது, அவர்கள் வெற்றிக் களிகூரும் பாட்டில் மோசேயுடன் சேர்ந்துகொண்டனர், மேலும் தங்கள் கடவுளும் விடுவிப்பவருமானவருக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருந்த வரையில் தொடர்ந்து மகிழ்ந்து களிகூர்ந்தார்கள்.—யாத்திராகமம் 15:1-21; உபாகமம் 28:1, 2, 15, 47.

சாலொமோனின் ஆட்சியின்கீழ் “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.” அது மிகுந்தக் களிகூருதலுக்கான காலமாயிருந்தது, யெகோவாவின் வணக்கத்துக்காக எருசலேமில் ஆலயம் கட்டினதால் அது உச்சநிலையை அடைந்தது. இந்த ஆலயம் அநேகமாய்ச் சரித்திரம் முழுவதிலுமே மிக அதிக மேன்மையான கட்டிடமாயிருந்திருக்கலாம்.—1 இராஜாக்கள் 4:20; 6:11-14.

தற்கால மகிழ்ச்சியுள்ள ஜனம்

பூர்வ இஸ்ரவேல் ஜனம் தற்கால ஒரு ஜனத்தை முன்குறித்துக்காட்டினது. எந்த ஜனத்தை? மத்திய கிழக்கின் அரசியல் இஸ்ரவேலையா? போராடிக்கொண்டிருக்கும் அந்த ஜனம் எவ்வகையிலும் மகிழ்ச்சியாயில்லையென செய்தி அறிவிப்புகள் குறித்துக் காட்டுகின்றன. ஐக்கிய நாட்டுச் சங்கமென அழைக்கப்படுவது அதன் உறுப்பினராயுள்ள நாடுகளுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிட்டதா? இல்லை, அரசியலில் ஈடுபட்டுள்ள இன்றைய ஜனங்கள் எவற்றிற்குள்ளும் உண்மையான மகிழ்ச்சி எங்கும் காணப்படுகிறதில்லை. பேராசை, ஊழல், மற்றும் நேர்மையின்மை மிகுந்திருக்கின்றன, மேலும் பல நாடுகளில் பொது ஜனங்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் வெறுமென உயிர்வாழ்வதற்குப் போராடுகின்றனர்.—நீதிமொழிகள் 28:15; 29:2.

எனினும், உச்சநிலையில் மகிழ்ச்சியாயுள்ள குறிப்பிடத்தக்க ஒரு ஜனம் இன்று இருக்கிறது. அது அரசியல் சம்பந்தப்பட்டதல்ல, ஏனெனில் அதன் தலைவராகிய கிறிஸ்து இயேசு, இதன் மக்களைக் குறித்து: “நீங்கள் இந்த உலகத்தின் பாகமல்லர்,” என்று சொன்னார். (யோவான் 15:19, NW) ஐக்கிய நாட்டுச் சங்கம், பெயரில் மாத்திரமே ஐக்கியப்பட்டிருக்கையில், இந்த மகிழ்ச்சியுள்ள ஜனம் தன்னைச் சேர்ந்துள்ள சமாதானத்தை நேசிப்போரைச் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” ஏற்கிறது. (வெளிப்படுத்துதல் 7:4, 9) இந்த ஜனம் இப்பொழுது நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடையது, இவ்வாறு இதன் ஜனத்தொகை ஐநா-வின் உறுப்பினராயுள்ள 159 நாடுகளில் ஏறக்குறைய 60 நாடுகளினுடையதைப் பார்க்கிலும் மிகுந்ததாயுள்ளது. இந்த நாற்பது லட்ச மக்களுக்குரிய தாய் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆகும்; எனினும் இவர்கள் எல்லாரும் ஒரே “சுத்தமான பாஷை” பேசுவதில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.—செப்பனியா 3:9.

இத்தனை வெவ்வேறுபட்ட நாகரிக மொழி வகையினர் ஒரே பொது மொழியைப் பேசுவது விநோதமாயுள்ளதல்லவா? உண்மையில் அவ்வாறில்லை, ஏனெனில் இந்த ஒரே ஒற்றுமைப்படுத்தும் மொழி நெருங்கிவரும் கடவுளுடைய நீதியுள்ள ராஜ்யத்தின் செய்தி உட்பட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியுள்ள ஜனம் “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” வருகிறது ‘யெகோவாவின் சாட்சிகளென’ உலகமெங்கும் அறியப்படுகிறது. (ஏசாயா 43:5-7, 10; சகரியா 8:23) இந்தப் பூகோள மேற்பரப்பில் நீங்கள் பெரும்பாலும் எங்கு பயணப்பட்டாலும், இவர்களை காண்பீர்கள்.

“நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்,” என்று சொல்லிக்கொண்டு சகல ஜாதிஜனங்களிலுமிருந்து திரண்டோடிவரும் ஒரு திரள் கூட்டத்தைப்பற்றி ஏசாயா 2:2-4-ல் (தி.மொ.) கடவுளுடைய தீர்க்கதிரிசி விவரிக்கிறான். ஆர்வசுறுசுறுப்புடன், இவர்கள், மற்றவர்களை, யெகோவாவின் சித்தத்தைச் செய்ய கற்றுக்கொள்வதற்கு, அவருடைய வார்த்தையாகிய, பைபிளின்மூலம் யெகோவாவினிடமிருந்து போதனைப் பெற வரும்படி அழைக்கின்றனர். இந்த ஒரு ஜனமே உண்மையான சமாதானத்தின் பாதையைப் பின்பற்றுகிறது, இதன் மக்கள் ஏற்கெனவே ‘தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துவிட்டனர், இனி இவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.’ நிச்சயமாகவே மகிழ்ச்சியுள்ள ஒரு ஜனம்!

நீங்களும் இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம். அரசர் கிறிஸ்து இயேசு, பாழ்ப்படுத்தும் மனிதரையும் அரசாங்கங்களையும் நீக்கி பூமியில் பரதீஸைத் திரும்பப் புதுப்பிக்கப்போகும் விரைவில்-அணுகிக்கொண்டிருக்கும் அந்த நாளைப்பற்றி நீங்களும் கற்றுக்கொள்ளலாம். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) பின்வரும் பக்கங்கள் காட்டப்போகிறபடி, இப்பொழுதேயும், உண்மையில் ஒற்றுமைப்பட்ட ஜனமாக, யெகோவாவின் சாட்சிகள் உண்மையான சமாதானத்துக்குரிய அந்த மகிமையான சகாப்தத்துக்காக ஆயத்தம் செய்யும் தங்கள் வேலையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள்.

(w91 1⁄1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்