உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 8/1 பக். 32
  • செய்திகளின் பேரில் உட்பார்வை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செய்திகளின் பேரில் உட்பார்வை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “அதிக ஆபத்தான பொருள்”
  • கவனிக்கப்படாமல் மறைந்துவிடுமா?
  • இரத்தமேற்றுதல்—எந்தளவு பாதுகாப்பானது?
    உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
  • வாழ்வின் வெகுமதியா அல்லது சாவின் முத்தமா?
    விழித்தெழு!—1991
  • இரத்தத்தால் உயிரைப் பாதுகாத்தல்—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • உங்கள் உயிரை இரத்தம் எப்படி காப்பாற்ற முடியும்? என்ற புரோஷுரைப் படிப்பதற்கு கேள்விகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 8/1 பக். 32

செய்திகளின் பேரில் உட்பார்வை

“அதிக ஆபத்தான பொருள்”

இரத்தமேற்றுதலின் மூலமாகக் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பதிவு செய்திருக்கும் உரிமை கோரிக்கை வழக்குகள், அநேக இரத்த வங்கிகளுக்குப் புதியதோர் கவலையை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது. 1989-ன் மத்திபத்திற்குள் ஐக்கிய மாகாணங்களிலுள்ள இரத்த வங்கிகளுக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரத்த வங்கிகளின் அமெரிக்க சங்க நிர்வாகத் தலைவர் கில்பர்ட் க்ளார்க், “பொதுமக்கள் முழுவதும் பாதுகாப்பான இரத்தத்தை விரும்புகிறார்கள்,” என்று தெரிவிக்கிறார். ஆனால் அது உத்தரவாதமளிக்கப்பட முடியாது என்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

அதேவிதமாகவே, இரத்த நிபுணர் டாக்டர் சார்லஸ் ஹக்கின்ஸ், இரத்தம் “தவிர்க்கமுடியாத வகையில் பாதுகாப்பற்றதாக” கருதப்பட வேண்டும் என்பதாக ஒப்புக்கொள்வதாக பரேட் மேகஸின் குறிப்பிடுகிறது. அவர் இரத்தத்தை “மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் அதிக ஆபத்தான பொருள்” என்பதாக விவரிக்கிறார். 1989-ன் ஆரம்ப காலம் முதற்கொண்டு, இரத்த வங்கிகள் குறிப்பாக சோதனை செய்யும் தொற்று நோய்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துவிட்டிருக்கிறது (வயது வந்தவர்களுக்கு ஏற்படும் T-அணு வெள்ளணு பெருக்கக் கோளாரோடு சம்பந்தப்பட்ட HTLV-1, மேக நோய், கல்லீரல் அழற்சி B, எய்ட்ஸ் மற்றும் கல்லீரல் அழற்சி C). என்றபோதிலும், அமெரிக்க செஞ்சிலுவை நிபுணர் S. ஜெரால்ட் சான்ட்லரின் பிரகாரம், “இரத்தமேற்றுதலால் பரவும் மற்றொரு அபூர்வமான நோயை நாம் கண்டு பிடிக்கும் சமயம் வரையாக இது வெறுமென காலத்தின் ஒரு விஷயமாகத் தோன்றுகிறது.” இப்பேர்ப்பட்ட கொடிய வாய்ப்பின் மத்தியிலும், சுமார் 40 லட்சம் வட அமெரிக்க மக்கள் 1990-ன் போது இரத்தமேற்றிக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்கள். செய்தித்தாளில் குறிப்பிட்ட ஒரு பத்தியில் எழுதும் W. கிஃபோர்ட் ஜோன்ஸின் பிரகாரம், “யெகோவாவின் சாட்சிகளைத் தவிர, பெரும்பாலான நோயாளிகள், இரத்தமேற்றுதலின் சாத்தியத்தைப் பற்றி ஒருபோதும் கலந்து பேசுவதில்லை.”

பல பத்தாண்டுகளாக, யெகோவாவின் சாட்சிகள் அப்போஸ்தலர் 15:28, 29; 21:25-ல் கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறபடியே உண்மையுடன் எந்த ஓர் உருவிலும் ‘இரத்தத்திலிருந்து விலகி’யிருந்திருக்கிறார்கள். இரத்தமேற்றுதலின் மூலமாக வரும் பயங்கரமான நோய்களிலிருந்து இது அவர்களுக்கு கொடுத்திருக்கும் பாதுகாப்பு, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பது சரியானது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

கவனிக்கப்படாமல் மறைந்துவிடுமா?

1989, பிப்ரவரியில் ஜெர்மனியிலுள்ள காலோனியின் புதிய அதிமேற்றிராணியாராக ஏற்படுத்தப்பட்ட சமயத்தில், வாதத்திற்குரிய ஓர் ஆளாக இருந்த ஜோயாகிம் கார்டினல் மிஸ்னர், சர்ச் ஒரு நாள் திடீரென்று “மறைந்துவிடும்—ஒருவேளை அது சமுதாயத்தால் கவனிக்கப்படாமலே இருந்துவிடக்கூடும்” என்பதாக தான் பெரிதும் அஞ்சுவதாக அண்மையில் தெரிவித்தார். ரெனஸ்கி போஸ்ட் என்ற ஜெர்மன் செய்தித்தாளின்படி, மிஸ்னர் சொன்னார்: “சர்ச்சை முக்கியத்துவமற்றதாகச் சமுதாயம் கருதுவது குறித்து என் ஆத்துமா சோர்வடைகிறது.” இதற்கு சாத்தியமான காரணம், “நாம் பூமியைப் பற்றி அதிகமாகப் பேசுவதும் பரலோகத்தைப் பற்றி போதிய அளவு பேசாமல் இருப்பதும், தற்காலத்தைப் பற்றி அதிகமாகவும் நித்தியத்தைப் பற்றி வெகு குறைவாகவும் பேசுவதே ஆகும்.”

உலகின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பரலோக அதிகாரத்தில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, பூமியிலுள்ள அரசியலோடும் வர்த்தகத்தோடும் தங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கிறிஸ்தவமண்டல மதங்கள் நிச்சயமாகவே கடவுளுடைய அக்கறைகளை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தங்கள் உரிமைப்பாராட்டலை பொய்யாக்கிவிட்டிருக்கின்றன. இது வினைமையான பின்விளைவுகளை உடையதாக இருக்கும். பைபிளின் பிரகாரம், எல்லாப் பொய் மதங்களும் விரைவில் மறைந்துவிடும்—“பூமியின் ராஜாக்களாலும்”, இந்தச் சம்பவத்தின் விளைவாக அழுது புலம்பும் “பூமியின் வர்த்தகர்களாலும்” கவனிக்கப்படாமல் போகாத ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். ஆகவே நீதியை நேசிப்பவர்கள் இந்த வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்: “நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு . . . [பொய் மதத்தைவிட்டு] வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4, 9, 11. (w90 7/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்