நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?
வெஸ்ட் இன்டீஸ், ஜமைக்காவில், தி ஸண்டே கிளீனர்-ன் சமய எழுத்தாளர் ஐயன் பாய்ன், சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட ஒரு புரோஷுரை விமர்சித்தார்:
“சாட்சிகள் இப்புத்தகத்துக்கு முதல் மதிப்பெண் பெற தகுதியுள்ளவர்கள். ஒரு பருவ வயதினரும்கூட வாசிக்கும் அளவுக்கு அது எளிமையாக எழுதப்பட்டிருந்தாலும்—மிகைப்படுத்தப்படாமலும்—மதிப்பு வாய்ந்த கல்விமான்கள் மற்றும் மூல ஆதார ஏடுகளின் மேற்கோள்களோடு அது அழகுசெய்யப்பட்டிருக்கிறது. . . . நீங்கள் திரித்துத்தை நம்ப வேண்டுமா? என்ற பிரசுரம் சாட்சிகளின் ஒரு தலைச்சிறந்த படைப்பு. இப்பொழுது எந்த ஒரு திரித்துவ கோட்பாட்டாளரோ—அல்லது இருவர் கோட்பாட்டாளரோ—பாதுகாப்பாக இல்லை. திரித்துவ கோட்பாடு பைபிளிலிருந்து பெறப்பட்டதில்லை என்பதற்கு சரித்திர மற்றும் இறையியல் ஆதார ஏடுகளிலிருந்து மேற்கோள்களை இச்சிறு புத்தகம் குவிக்கிறது. அதிகாரப்பூர்வமான மத என்சைக்ளோப்பீடியா இவ்விதமாகச் சொல்வதாக அது மேற்கோள் காண்பிக்கிறது: “புதிய ஏற்பாடும் திரித்துவத்தைப் பற்றி தெளிவான கோட்பாட்டைக் கொண்டில்லையென இறையியல் வல்லுநர் ஒப்புக்கொள்கின்றனர்.”
பாய்ன் மேலுமாக கூறுகிறார்: “இயேசு கடவுள் என்ற கருத்துக்கு எதிராக சாட்சிகள் வரிசையாக எடுத்துக்கூறும், கருத்தை ஈர்க்கும் மற்றும் மனதில் பதிந்துவிடும் விவாதங்களுக்கு எவ்விதமாக ஒரு சராசரி—அல்லது சராசரிக்கு மேற்பட்ட ஓர் உறுப்பினரும்கூட பதிலளிக்க முடியும் என்பதைக் காண்பதை இந்தச் சமய எழுத்தாளர் கடினமாக காண்கிறார்.”
இந்தப் புரோஷுரின் ஒரு பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால், தயவுசெய்து கீழ்காணும் கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பவும்.
நீங்கள் திரித்துவதை நம்பவேண்டுமா? என்ற 32–பக்க புரோஷுரை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இத்துடன் ரூபாய் 3 அனுப்பியுள்ளேன். (ஸ்ரீலங்காவில் விலை ரூ10.)