உலக பொருளாதாரத்தின் எதிர்காலத்தை முன்னறிவித்தல்
பொருளாதார சந்தைகளின் நிலையற்ற தன்மையும், 1987-ன் பங்கு சந்தை வீழ்ச்சியை முன்னறிவிக்கத் தவறிய ஆராய்ச்சியாளர்கள்மீது நம்பிக்கை இழப்பும், சில வியாபாரிகளைத் தங்கள் பொருளாதார எதிர்காலத்தை முன்னறிவதற்காக சோதிடத்திற்குத் திரும்பும்படி செய்திருக்கிறது என்பதாக அக்கெளன்டன்ஸி ஏஜ் என்ற லண்டன் பத்திரிகை குறிப்பிடுகிறது. “தங்களுடைய விவரமான பரிமாற்ற சந்தை முன்னறிவிப்புகளுக்காக, நிதிசம்பந்தப்பட்ட சோதிடர்கள், மதிப்புவாய்ந்த வாடிக்கையாளர் தொகுதியாலான ஒரு பதியவைக்கும் பட்டியலை ஆதாயப்படுத்துகின்றனர்,” என்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
ஓர் ஆலோசனை நிபுணர், 30 வருட தினசரி நிதிநிலை புள்ளிவிவர சுழற்சிகளை கோளங்களின் இயக்கத்துடன் ஒப்பிடுகிறார். இதன் அடிப்படையில் தன்னுடைய முன்னறிவிப்புகளை அளிக்கிறார். அநேக வாடிக்கையாளர், 1987-ற்கு முன்பு அவருடைய ஆலோசனைக்கு இசைந்துசெல்ல தயங்கினபோதிலும், இப்போது புத்திசாலியான நிதிவல்லுநர்கள்கூட செவிசாய்க்கத் தயாராக இருப்பதாக அவர் காண்கிறார்.
மற்றொரு நிதிநிலைசார்ந்த சோதிடர், பிறந்த நாள் தேதிகளின் அடிப்படையில் ஓர் ஆளுடைய குணத்தை மதிப்பிடுவதற்காக விளக்கப்படங்களை வரைகிறார்; மேலும் “வியாபார வளர்ச்சிக்கான ஏற்ற நேரத்திற்கான வழிகளை” காணவும் முயற்சி எடுக்கிறார். சந்திரனின் சுழற்சிக்கிசைவாக வெள்ளி சந்தையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதாக இன்னொருவர் நம்புகிறார். ஆனால், ஒழுங்கான நிதி ஆய்வாளர்களுடன் ஒப்பிடுகையில், “தன்னுடைய முன்னறிவிப்பைத் தவறாக்குவதற்கு மிக குறைவான வாய்ப்பையே” தன்னுடைய வாடிக்கையாளர்கள் தனக்குக் கொடுப்பதாக இந்தச் சோதிடர் காண்கிறார்.
இருந்தாலும், சோதிடத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிதிநிலை முன்னறிவிப்பு ஒன்று நிச்சயமாகவே உண்மையாக வர இருக்கிறது. இந்த முன்னறிவிப்பு பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கும் “அது தவறாவதற்கான வாய்ப்பை” தமக்குக் கொடுக்காத கடவுளாகிய யெகோவாவால் ஏவப்பட்டிருக்கிறது. அந்தக் கடவுள் “பொய்யுரையாத”வராய் இருக்கிறார். (தீத்து 1:3) அவர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் இவ்வாறு அறிவிக்கும்படி செய்தார்: “தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது.”—எசேக்கியேல் 7:19.
இது எப்போது சம்பவிக்கும்? இயேசு கிறிஸ்துவால் “மிகுந்த உபத்திரவம்” என்பதாக முன்னறிவிக்கப்பட்ட காலத்தில், எசேக்கியேலால் “கர்த்தருடைய சினத்தின் நாளிலே” என்பதாகச் சொல்லப்பட்ட காலத்தில் சம்பவிக்கும். (மத்தேயு 24:21; எசேக்கியேல் 7:19) சோதிடர்கள் எந்த அளவிற்கு முன்னறிவித்தாலும், நிதிநிலையில் செழுமை தப்பிப்பிழைத்தலைப் பெற்றுத் தராது. மகா விடுவிப்பாளரான யெகோவா தேவனில் நம்பிக்கை வைப்பது மட்டுமே, எல்லா ஊழலும் நீக்கப்படும் இந்த உலகளாவிய எழுச்சியின்போது—அரசியல், மதம் மற்றும் வியாபார—பாதுகாப்பை உறுதியளிக்கமுடியும்.—நீதிமொழிகள் 3:5, 6; செப்பனியா 2:3; 2 பேதுரு 2:9. (w92 12/15)