உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் இதழ்களை கவனமாக படித்தீர்களா? அப்படியானால், பின்வருவனவற்றை மறுபடியும் நினைவுபடுத்திப் பார்ப்பதை ஆர்வமூட்டுவதாய் காண்பீர்கள்:
◻ மத்தேயு 11:28-ல் உள்ள இயேசுவின் அழைப்புக்கு இணங்க ஒருவர் எவ்வாறு ‘அவரிடம் வரலாம்’? இயேசு சொன்னார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) எனவே, இயேசுவிடம் வருவது என்பது, ஒருவர் தன்னுடைய சொந்த சித்தத்தை கடவுளுடைய சித்தத்துக்கும் கிறிஸ்துவுடைய சித்தத்துக்கும் கீழ்ப்படுத்துவதையும், ஓரளவு உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதையும், அதை தொடர்ந்து செய்வதையும் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது.—8/15, பக்கம் 17.
◻ மத்தேயு 7:13, 14-ல் இயேசு குறிப்பிட்ட ‘ஜீவனுக்கு செல்லும் இடுக்கமான பாதையை’ ஏன் ‘சிலரே’ கண்டுபிடிக்கின்றனர்? இடுக்கமான பாதை கடவுளுடைய சட்டங்களாலும் நியமங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, தன் வாழ்க்கையை கடவுளுடைய தராதரங்களுக்கு இணக்கமாக வைத்துக்கொள்ள உண்மைமனதோடு விரும்பும் ஒருவருக்கே அது கவர்ச்சியூட்டுவதாய் இருக்கும். ‘இடுக்கமான பாதை’ கட்டுப்படுத்துவதைப் போல் தோற்றமளித்தாலும்கூட, அது ஒரு நபரை ஒவ்வொரு முக்கியமான அம்சத்திலும் விடுவிக்கிறது. அதன் வரம்புகள் ‘சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தால்’ நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. (யாக்கோபு 1:25)—9/1, பக்கம் 5.
◻ பகுத்துணர்வை எவ்வாறு வளர்க்கலாம்? பகுத்துணர்வு எளிதாகவோ இயற்கையாகவோ வந்துவிடுவதில்லை. ஆனால் பொறுமை, ஜெபம், ஊக்கமான முயற்சி, ஞானமான கூட்டுறவு, பைபிளை படித்து அதன் பேரில் தியானிப்பது, யெகோவாவின் பரிசுத்த ஆவியின் பேரில் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் மூலம் பகுத்துணர்வு வளர்க்கப்படலாம்.—9/1, பக்கம் 21.
◻ மானிட வைராக்கியம் எவ்வாறு நல்லவற்றுக்கு காரணமாய் இருக்கலாம்? அது நேசிக்கும் ஒருவரை கெட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உந்துவிக்கக்கூடும். கூடுதலாக, மானிடர்கள் சரியான விதத்தில் யெகோவாவுக்கும் அவருடைய வணக்கத்துக்கும் வைராக்கியத்தைக் காண்பிக்கலாம். (1 இராஜாக்கள் 19:10)—9/15, பக்கங்கள் 8, 9.
◻ யோசேப்பின் பேரப்பிள்ளைகளைக் குறித்து, ஆதியாகமம் 50:23-ல் காணப்படும் “யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்” என்ற சொற்றொடரின் அர்த்தமென்ன? யோசேப்பு தன் பிள்ளைகளை தன் சந்ததியில் பிறந்தவராக ஒப்புக்கொண்டார் என்பதை இது வெறுமனே அர்த்தப்படுத்தக்கூடும். அது அவர் தன் பிள்ளைகளை பாசத்தோடு அவருடைய முழங்கால்களில் தூக்கிப்போட்டு கொஞ்சி விளையாடியதையும்கூட குறிக்கக்கூடும். தகப்பன்மார் இன்று தங்கள் பிள்ளைகளிடம் அப்படிப்பட்ட பாசத்தைக் காண்பிப்பது நல்லது.—9/15, பக்கங்கள் 20, 21.
◻ ஒரு வெற்றிகரமான திருமணத்துக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் எது அதிமுக்கியமானது? அப்படிப்பட்ட விரும்பத்தக்க விளைவுகளைப் பெறுவதற்கு, விவாகமான துணைவர்கள் எப்போதும் கடவுளுடைய சித்தத்தை முதலாவதாக வைக்க வேண்டும். விவாகமான துணைவர்கள் அவ்வாறு செய்து, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் புத்திமதியை பொருத்துவதன் மூலம் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு ஒருவரோடொருவர் இணைந்திருக்க முயற்சிசெய்வர். இவ்வாறு அவர்கள் கடவுளுடைய சித்தம் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் எல்லாவிதமான மனவேதனைகளையும் தவிர்க்கின்றனர். (சங்கீதம் 19:7-11)—10/1, பக்கம் 11.
◻ இன்று தெய்வீக அவசர உணர்வு எவ்வளவு முக்கியம்? யெகோவாவுக்கு ஏறெடுக்கப்படும் முழு-ஆத்துமாவோடுகூடிய சேவையில், தெய்வீக அவசர உணர்வு மிகவும் அவசியமான பாகம். அது கடவுளுடைய ஊழியர்கள் ‘இளைப்புள்ளவர்களாகி தங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடி’ தடுத்து சாத்தானின் முயற்சிகளை குலைத்து விடுகிறது. (எபிரெயர் 12:3) அது அவர்களை உலகத்திலிருந்தும் அதன் பொருளாசையிலிருந்தும் தேவையின்றி ஈடுபாடுகொள்வதிலிருந்து பாதுகாக்கிறது, மேலான காரியங்களில்—‘மெய்யான ஜீவனில்’—தங்கள் மனங்களை வைக்கும்படி உதவுகிறது. (1 தீமோத்தேயு 6:19)—10/1, பக்கம் 28.
◻ செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையில், இயேசு எப்போது சிங்காசனத்தில் உட்காருகிறார், ஏன்? (மத்தேயு 25:31-33) ராஜாவாக ஆகிற அர்த்தத்தில் அவர் உட்காருவதை அந்த உவமை காண்பிக்கிறதில்லை. மாறாக, அவர் நியாயாதிபதியாக உட்காருகிறார். அந்த நியாயத்தீர்ப்பு அநேக வருடங்கள் அடங்கிய நீண்ட காலப்பகுதியாக இருக்காது. மாறாக, அந்த உவமை எதிர்காலத்தைப் பற்றி குறிப்பிடுகிறது, அப்போது இயேசு வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பைக் கூறி அதை நிறைவேற்றி முடிப்பார்.—10/15, பக்கங்கள் 22, 23.
◻ இயேசு அடிக்கடி குறிப்பிட்ட “சந்ததி” எது? இயேசு “இந்தச் சந்ததி” என்ற பதத்தை, ஒரே காலத்தில் வாழ்ந்த திரளான மக்களையும் அவர்களுடைய ‘குருட்டு வழிகாட்டிகளையும்’ சேர்த்து உண்டாக்கிய யூத தேசத்துக்கு பொருத்தினார். (மத்தேயு 11:16; 15:14; 24:34)—11/1, பக்கம் 14.
◻ மத்தேயு 24:34-39-ல் காணப்படும் இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் இறுதி நிறைவேற்றத்தில், “இந்தச் சந்ததி” என்ற சொற்றொடர் எதைக் குறிக்கிறது? கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைக் கண்டும் தங்களுடைய வழிகளை சரிப்படுத்திக்கொள்ள தவறும் பூமியிலிருக்கும் ஜனங்களை இயேசு குறிப்பிடுகிறார்.—11/1, பக்கங்கள் 19, 31.
◻ அடைக்கலப்பட்டணங்கள் அதன் தடைகள் ஆகியவற்றின் ஏற்பாடு, பண்டைய இஸ்ரவேல் ஜனங்களுக்கு எவ்வாறு உதவியளித்தது? மனித உயிரைக் குறித்து அவர்கள் கவலையீனமாகவோ அல்லது முக்கியத்துவம் இல்லாமலோ இருக்கக்கூடாது என்பதை இஸ்ரவேலருக்கு அழுத்திக் காண்பித்தது. இரக்கம் காண்பிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது இரக்கத்தைக் காண்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அது அழுத்திக் காண்பித்தது. (யாக்கோபு 2:13)—11/15, பக்கம் 14.
◻ மாதிரிப்படிவத்துக்குரிய அடைக்கலப்பட்டணம் என்றால் என்ன? இரத்தத்தின் புனிதத்தன்மையைக் குறித்து அவருடைய கட்டளையை மீறியதற்காக நம்மை மரணத்திலிருந்து பாதுகாப்பதற்கான கடவுளுடைய ஏற்பாடு. (ஆதியாகமம் 9:6)—11/15, பக்கம் 17.
◻ நாம் ‘புதுப்பெலன் அடைய’ கிறிஸ்தவ சகோதரத்துவம் நமக்கு எவ்வாறு உதவக்கூடும்? (ஏசாயா 40:31) நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மத்தியில், நாம் எதிர்ப்படுவதைப் போன்ற அழுத்தங்களையும் சோதனைகளையும் நம்முடைய சொந்த உணர்ச்சிகளைப் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் சில நபர்கள் இருக்கின்றனர். (1 பேதுரு 5:9) நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் காரியங்கள் அசாதாரணமானவையல்ல என்பதையும் நம்முடைய உணர்ச்சிகள் வழக்கத்திற்கு மாறானவையல்ல என்பதையும் அறிவது மறுபடியும் உறுதியளிப்பதாயும் விசுவாசத்தை கட்டியெழுப்புவதாயும் உள்ளது.—12/1, பக்கங்கள் 15, 16.