‘அந்த இடத்தில் அமைதி தவழ்ந்தது’
ஜெர்மனியில் உள்ள ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்கு போனார். எதற்காக? சாட்சிகளை “உளவு பார்ப்பதற்காக.” ஏன்? இந்த “மதப்பிரிவின் முகமூடியைக் கிழித்தெறிந்து, தன் நண்பர்களை தாறுமாறான வழியிலிருந்து காப்பதற்காகவே.” மாநாட்டுக்கு சென்று வந்தபிறகு, கீழ்க்காணும் கடிதத்தை தன் நண்பர்களுக்கு எழுதினார்:
“மாநாட்டு மன்றத்துக்கு பக்கத்துல போகப்போக, நான் சரியான எடத்துக்குத்தான் வந்திருக்கிறேனான்னு சந்தேகம் வந்துடுச்சு. வாசல்ல ஒரு ஈ, காக்காகூட காணோம். தரையில குப்பக்கூளமோ, பீர் பாட்டிலோ ஊ. . .ஹூம் எதுவுமே இல்ல. இன்னும் பக்கத்துல போனப்போ, வாசல்ல இரண்டு டிப்டாப் ஆசாமிங்க நின்னுகிட்டு இருந்தாங்க. அவங்க என்னை வரவேற்று உள்ளே கூட்டிட்டு போனாங்க.
“ஆயிரக்கணக்கான ஜனங்க இருக்கிற இடத்துல ஒரே அமளிதுமளியா இருக்கும்னு நான் நினச்சேன். ஆனா அங்க மயான அமைதி நிலவுச்சு. ‘ஓ, அப்படின்னா, இங்கொன்னும் அங்கொன்னுமா நாலு அஞ்சு பேரு உட்கார்ந்திருப்பாங்கனு’ நினைச்சுட்டே உள்ள நுழைஞ்சேன்.
“உள்ள நுழைஞ்சப்போ, மேடையில நாடகம் நடந்துட்டிருந்துச்சு. அத பாக்க பாக்க அதோட அப்படியே ஒன்றிப் போயிட்டேன். அதுக்கப்புறம்தான் கவனிச்சேன், ஸ்டேடியத்துல ஆயிரக்கணக்கான ஜனங்க இருக்கிறத. எல்லாரும் உன்னிப்பா கவனிச்சுட்டு இருந்தாங்க. அந்த இடத்தில் அமைதி தவழ்ந்துச்சு. மாநாட்டோட மீதி பகுதியில நான் கேட்டதும், பாத்ததும், லயித்ததும் என்னோட மனச ஆழமா தொட்டுடுச்சு.
“சாட்சிகளோட பழகினப்ப அவங்களோட சந்தோஷம் பொங்குற முகத்தையும் அன்பான பேச்சுகளையும் என்னால் கண்டுக்காம இருக்க முடியல. ‘இவங்கதான் உண்மையிலேயே கடவுளோட ஜனங்க!’ அப்படீன்னு எனக்கு தோணிச்சு. இந்த எண்ணம் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.”
‘தன் நண்பர்களை தாறுமாறான போக்கிலிருந்து வழிதிருப்புவதற்கு’ மாறாக, பைபிளை தன்னோடு படிக்கும்படி இந்த இளம் மனிதர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். இதனால் விளைந்த நன்மை: இன்றோ அவர் ஒரு கிறிஸ்தவ மூப்பர். ஸ்விட்ஸர்லாந்து, ஜூரிட்ச்-ல் உள்ள ஜெர்மானிய சபை ஒன்றில் அவரும் அவருடைய குடும்பமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் எறும்பு போன்று சுறுசுறுப்பாய் உழைக்கின்றனர்.