உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 10/1 பக். 26-27
  • தெய்வீக புதிர்களும் நோக்கமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தெய்வீக புதிர்களும் நோக்கமும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிளில் புதிர்கள் ஏராளம்
  • பரிசுத்த இரகசியங்களை விடுவித்தல்
  • இருண்ட வார்த்தைகள்மீது ஒளிபாய்ச்சுதல்
  • ஒளியை நோக்கியிருங்கள்
  • ஞானத்தை சம்பாதித்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ‘தேவனே, உமது ஒளியை அனுப்பியருளும்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கிறிஸ்தவர்கள் மறைத்துவைக்க முடியாத ஓர் இரகசியம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யெகோவா—இரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 10/1 பக். 26-27

தெய்வீக புதிர்களும் நோக்கமும்

பதில் தெரியாமல் ஒருவர் திருதிருவென முழிக்கும்போது அது ஒரு சவால். ஆனால் பதில் தெரிந்திருக்கும்போதோ அது ஒன்றுமே இல்லை. அது என்ன? அதுதான் புதிர்.

எதற்குமே உடனடியான, நடைமுறையான தகவல்களை எதிர்பார்க்கும் இன்றைய சமுதாயத்தில், புதிர்போடுவதை பிள்ளைகளுடைய விளையாட்டு என ஜனங்கள் கருதுகிறார்கள். ஆனால் பூர்வ காலங்களில் புதிர் என்பது “ஞானத்தின் பரீட்சையாக” கருதப்பட்டது என குறிப்பிடுகிறது தி இன்டர்பிரெட்டர்ஸ் டிக்‍ஷனரி ஆஃப் த பைபிள்.​—நீதிமொழிகள் 1:5, 6-ஐ ஒப்பிடுக.

தம்முடைய சித்தத்தை அல்லது நோக்கத்தை வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக, சிலசமயங்களில் வேண்டுமென்றே யெகோவா தம்முடைய தீர்க்கதரிசனங்களை இலைமறை காயாக சொல்லியிருக்கிறார். ஒப்புமைகளையோ மறைபொருளான “இருண்ட வார்த்தைகளையோ” அல்லது சிக்கலான புதிர்களையோ பயன்படுத்தியிருக்கிறார். (சங்கீதம் 78:2; எண்ணாகமம் 12:8, தி எம்ஃபஸைஸ்டு பைபிள்) புதிர் என்பதற்கான எபிரெய பதம் 17 தடவை மட்டுமே பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், ஏறக்குறைய வேதவசனங்கள் முழுவதும் புதிர்களும் நீதிமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

பைபிளில் புதிர்கள் ஏராளம்

சாலொமோன் ராஜா மிகவும் சிக்கலான கேள்விகளையோ அல்லது புதிர்களையோ விடுவிக்கும் திறமை பெற்றவராக விளங்கினார். (1 இராஜாக்கள் 10:1, NW அடிக்குறிப்பு) இது நிச்சயமாகவே கடவுள் கொடுத்த ஞானத்தால் வந்தது. தீரு ராஜாவாகிய ஹிராமுடன் நடந்த புதிர் போட்டியில் சாலொமோன் தோற்றுவிட்டதாக பூர்வ சரித்திராசிரியர்கள் கூறுகிறார்கள். இது உண்மையாக இருந்தால், விசுவாச துரோகியாக மாறியதால் யெகோவாவின் ஆவியை இழந்தப் பின்பு இது ஏற்பட்டிருக்கலாம். நியாயாதிபதியாகிய சிம்சோனுக்கும் புதிர்மீது இதுபோன்ற விருப்பம் இருந்தது. பரிசுத்த ஆவியால் பலமளிக்கப்பட்டிருந்த ஒரு சமயத்தில், கடவுளுடைய எதிரிகளுக்கு பயமேற்படுத்த புதிர் அவருக்கு கைகொடுத்தது.​—நியாயாதிபதிகள் 14:12-19.

இருப்பினும், பெரும்பாலான பைபிள் புதிர்கள் யெகோவாவின் நோக்கங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. உதாரணமாக, ஆதியாகமம் 3:15-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தீர்க்கதரிசனம் பைபிளின் கருப்பொருளுக்கு ஓர் அடிப்படையாக விளங்குகிறது. ‘பரிசுத்த இரகசியம்’ அடங்கிய ஒரு புதிரே இத்தீர்க்கதரிசனம். (ரோமர் 16:25, 26) இயற்கைக்கு அப்பாற்பட்ட தரிசனங்களையும் வெளிப்படுத்துதல்களையும் பெற்றதோடு, ‘நிழலாட்டமாக,’ அல்லது சொல்லர்த்தமாக சொல்லப்போனால், ‘தெளிவற்ற வார்த்தைகளில்’ கடவுளுடைய நோக்கத்தின் சில அம்சங்களையும்கூட அப்போஸ்தலன் பவுல் கண்டார். (1 கொரிந்தியர் 13:12; 2 கொரிந்தியர் 12:1-4) மூர்க்க மிருகத்தின் புரியாப் புதிரான எண்ணைப் பற்றியென்ன? இது வெளிப்படுத்துதல் 13:18-ல், திடீரென அறிமுகப்படுத்தப்பட்டு விளக்கமின்றி விடப்பட்டுள்ளது. இதற்கு கொடுக்கப்பட்ட யூகங்களுக்கு முடிவேயில்லை. இந்தத் தெய்வீக புதிர்களை யாரால் விடுவிக்க முடியும், அதன் நோக்கம் என்ன?

பரிசுத்த இரகசியங்களை விடுவித்தல்

நம்முடைய ஐம்புலன்களில் பார்வையே மிகவும் விலையேறப் பெற்றது. இதை நம்மில் அநேகர் ஒத்துக்கொள்வோம். ஆனால் ஒளியில்லை என்றால் பார்வையிருந்தும் ஏறக்குறைய எந்தப் பயனுமில்லை. கிட்டத்தட்ட குருடராகவே இருப்போம். அது போலவேதான் மனித மனமும். ஒத்த குணங்களை ஒப்பிட்டுப் பார்த்து, தர்க்கரீதியாக சிந்திப்பதன்மூலம் புதிர்களை விடுவிக்கும் மலைக்கத்தக்க திறமை அதற்கு இருக்கிறது. ஆனால் பரிசுத்த இரகசியங்களை விடுவிக்க இதைக் காட்டிலும் ஏதோவொன்று அத்தியாவசியம். பைபிளில் சொல்லப்பட்டுள்ள புதிர்களுக்கு சிலர் விடை தந்திருக்கிறபோதிலும், அவற்றின் ஆசிரியரும் ஒளியின் கடவுளுமாகிய யெகோவா மாத்திரமே அவற்றிற்குரிய அர்த்தத்தை விடுவிக்க முடியும்.​—1 யோவான் 1:5.

விசனத்திற்குரிய விஷயம் என்னவெனில், விடைகளுக்காக யெகோவாமீது சார்ந்திருக்காமல் அகம்பாவத்துடனும் தன்னிச்சையுடனும் மனிதர் செயல்பட்டிருக்கிறார்கள். மறைபொருளை அறிய வேண்டுமென்கிற ஆவலில், விடைகளுக்காக சிலர் கடவுளுடைய வார்த்தையை விட்டுவிட்டு பிறவற்றை நாடியிருக்கிறார்கள். சத்தியத்தை அல்ல, அறிவுஜீவியத்தை தூண்டும் நடவடிக்கைகளை நாடியவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, கபாலா என்ற யூத மறைபொருள் கொள்கை புதிரான எண்களுக்கும் எபிரெய எழுத்துக்களுக்கும் விடைகாண ஆழ்ந்து ஆராய்ந்தது. மறுபட்சத்தில், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமரச மறையியல் ஞானக் கோட்பாட்டாளர்கள் (Gnostics) இரகசிய அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முயன்று எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்களை பயன்படுத்தினார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட ஆராய்ச்சி அனைத்தும், அவர்களை மேலும் புறமத சடங்குகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் தெய்வீக சத்தியத்திற்கு புறம்பேயும்தான் வழிநடத்தியது. ‘இந்த உலகம் முழுவதும் தீமை நிறைந்து இருப்பதால், படைப்பாளராகிய யாவே நல்ல கடவுளாக இருக்க முடியாது’ என சமரச மறையியல் ஞானக் கோட்பாட்டாளர்கள் விவாதித்தனர். அவர்கள் அளித்த இந்தத் தீர்வுதான் மிகச் சிறந்த தீர்வா? மனித நியாயம் எவ்வளவு மேலோட்டமாக இருக்கிறது! பிற்காலத்தில் சமரச மறையியல் ஞானக் கோட்பாட்டைச் சேர்ந்த பிரிவினரால் முன்னேற்றுவிக்கப்பட்ட விசுவாசதுரோக கருத்துக்களுக்கு எதிராக அப்போஸ்தலன் பவுல் போராடியதில் ஆச்சரியமில்லை. இதை தன்னுடைய கடிதத்தில் வன்மையாக எச்சரித்தார்: ‘எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதீர்கள்!’​—1 கொரிந்தியர் 4:6.

இருண்ட வார்த்தைகள்மீது ஒளிபாய்ச்சுதல்

ஆனால், ஒளியின் கடவுள் ஏன் ‘இருண்ட வார்த்தைகளில்’ பேசுகிறார்? ஒருவருடைய கற்பனா சக்திக்கும் தர்க்கரீதியான ஆற்றலுக்கும் சவாலிடுவதே புதிர். ஆகவே, ருசியான உணவில் ஆங்காங்கே தூவப்பட்ட நறுமண பொருட்களைப் போல வேதவசனங்கள் முழுவதும் அவை ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன. வாசகருடைய ஆர்வத்தை தூண்டுவதற்கு அல்லது கொடுக்கப்படும் செய்தியை அதிக தத்ரூபமாக தருவதற்கு அவை சிலசமயங்களில் பயன்படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், பொதுவாக விளக்கங்கள் பிற்பகுதியில் உடனடியாக கொடுக்கப்பட்டுள்ளன.​—எசேக்கியேல் 17:1-18; மத்தேயு 18:23-35.

யெகோவா ஞானத்தை தாராளமாக தருகிறார், ஆனால் ஒருபோதும் தாறுமாறாக தருவதில்லை. (யாக்கோபு 1:5-8) நீதிமொழிகள் புத்தகத்தை கவனியுங்கள். இது, புதிர்கள் என சிலர் சொல்லும் சிக்கலான அநேக பழமொழிகளின் ஏவப்பட்ட ஒரு தொகுப்பு. அவற்றை புரிந்துகொள்வதற்கு நேரமும் தியானமும் தேவை. ஆனால் எத்தனை பேர் இந்த முயற்சியை செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? அதில் அடங்கியுள்ள ஞானம் அதை தோண்டி ஆராய மனமுள்ளவர்களுக்கே கிடைக்கும்.​—நீதிமொழிகள் 2:1-5.

அதுபோலவே, தம்முடைய பேச்சை செவிகொடுத்துக் கேட்டவர்களுடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கு இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். திரளான மக்கள் அவரை சூழ்ந்திருந்தனர். அவருடைய கதைகளை அனுபவித்து மகிழ்ந்தனர். அவருடைய அற்புதங்களை அவர்கள் நேசித்தனர். ஆனால், எத்தனை பேர் தங்களுடைய வாழ்க்கை பாணியை மாற்றிக்கொள்வதற்கும் அவரை பின்பற்றுவதற்கும் மனமுள்ளவர்களாய் இருந்தார்கள்? அவர்களுடைய சீஷர்கள் எவ்வளவு வேறுபட்டவர்களாய் இருந்தார்கள்! அவர்கள் இயேசுவின் போதனைகளைப் புரிந்துகொள்வதற்கு அடிக்கடி அவருடைய உதவியை நாடினார்கள், அவருடைய சீஷர்களாவதற்கு தங்களையே சொந்தம் கைவிட்டு வரவும் மனமுள்ளவர்களாக இருந்தார்களே!​—மத்தேயு 13:10-23, 34, 35; 16:24; யோவான் 16:25, 29.

ஒளியை நோக்கியிருங்கள்

“புதிர்களில் ஆர்வமும் அறிவை தட்டியெழுப்பும் காலங்களும் கைகோர்த்து போவதாக தெரிகிறது” என ஒரு நூல் கூறுகிறது. கடவுளுடைய ஜனங்களுக்கு ஆவிக்குரிய ‘ஒளி வீசும்’ ஒரு காலத்தில் வாழ்வதால் இன்று நாம் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். (சங்கீதம் 97:11, NW; தானியேல் 12:4, 9) யெகோவா தம்முடைய கால அட்டவணைப்படி தம்முடைய நோக்கங்களை வெளிப்படுத்துவதற்கு நாம் பொறுமையுடன் அவருக்காக காத்திருக்க முடியுமா? மிக முக்கியமாக, கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு முழு ஒத்திசைவுடன் எவ்வாறு நடப்பது என்பதை அறிந்துகொள்ளும்போது நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கு உடனடியாக செயல்படுகிறோமா? (சங்கீதம் 1:1-3; யாக்கோபு 1:22-25) நாம் அவ்வாறு செய்தால், யெகோவா நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார். மூக்குக் கண்ணாடி நம்முடைய தெளிவற்ற பார்வையை சரிப்படுத்துவதுபோல, பரிசுத்த ஆவி நம்முடைய ஆவிக்குரிய காட்சியை தெளிவாக்கி நம்முடைய மனக்கண்களுக்குள் அழகிய பளிங்குபோல தெய்வீக நோக்கத்தை தெளிவாக காட்டும்.​—1 கொரிந்தியர் 2:7, 9, 10.

உண்மையில், யெகோவாவே ‘இரகசியங்களை வெளிப்படுத்துகிறவர்’ என்பதை பைபிளிலுள்ள புதிர்கள் சித்தரித்துக் காட்டுகின்றன. (தானியேல் 2:28, 29, NW) மேலும், இருதயங்களை ஆராய்பவரும் அவரே. (1 நாளாகமம் 28:9) தெய்வீக சத்தியத்தின் ஒளி எப்பொழுதும் படிப்படியாகவே பிரகாசித்திருக்கிறது என்பது நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை. (நீதிமொழிகள் 4:18; ரோமர் 16:25, 26) மறைபொருள் கோட்பாட்டின் மூலமோ மேலோட்டமான மனித ஞானத்தின் மூலமோ கடவுளுடைய ஆழமான விஷயங்களை அறிந்துகொள்ள முயற்சிப்பது சூனியத்திற்குத்தான் வழிநடத்தும். ஆகவே, யெகோவா தேவன் ஏற்ற வேளையில் உண்மையுள்ள ஊழியர்களுக்கு மகத்தான நோக்கங்களை வெளிப்படுத்தி, தம்முடைய ‘இருண்ட வார்த்தைகளின்மீது’ சத்தியத்தின் ஒளியை பாய்ச்சுவதற்கு அவர்மீது நம்பிக்கையுடன் சார்ந்திருப்போமாக.—ஆமோஸ் 3:7; மத்தேயு 24:25-27.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

Biblia Hebraica Stuttgartensia, Deutsche Bibelgesellschaft Stuttgart

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்